குவிந்து வரும் வரவேற்பால் 25,000 யூனிட்டுகளை கடந்து இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஜீப் காம்பஸ் கார்..!!

Written By:

இந்தியாவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கிடையில் வெளியான காம்பஸ் எஸ்யூவி கார் 25,000 யூனிட்டுகள் தயாரிக்கப்பட்டு இருப்பதாக ஜீப் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்தியாவில் உற்பத்தியில் ஜீப் காம்பஸ் கார் புதிய சாதனை..!!

அமெரிக்காவை சேர்ந்த ஜீப் நிறுவனம், இந்தியாவில் காம்பஸ் என்ற பெயரில் புதிய ரக சப்-காம்பேக்ட் எஸ்யூவி காரை கடந்த 7 மாதங்களுக்கு முன்பு வெளியிட்டது.

இந்தியாவில் உற்பத்தியில் ஜீப் காம்பஸ் கார் புதிய சாதனை..!!

பலத்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியான இந்த காருக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் புக்கிங்களும் மற்றும் விற்பனைகளும் டன் கணக்கில் குவிந்தன.

இந்தியாவில் உற்பத்தியில் ஜீப் காம்பஸ் கார் புதிய சாதனை..!!

அதுமட்டுமில்லாமல், இந்தியாவில் ஏற்கனவே விற்பனையில் உள்ள எஸ்யூவி மாடல்களுக்கு போட்டியான விலையில் அறிமுகம் செய்யப்பட்டதால் ஜீப் காம்பஸ் காருக்கு அமோக வரவேற்பு கூடியது.

இந்தியாவில் உற்பத்தியில் ஜீப் காம்பஸ் கார் புதிய சாதனை..!!

இதுதவிர வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் காம்பஸ் கார்கள் வலது புற ஸ்டீயரிங் அம்சத்துடன் மும்பையில் உள்ள மற்றொரு ஆலையில் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

இந்தியாவில் உற்பத்தியில் ஜீப் காம்பஸ் கார் புதிய சாதனை..!!

இந்த கார்கள் ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள சில நாடுகளுக்கு இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

இந்தியாவில் உற்பத்தியில் ஜீப் காம்பஸ் கார் புதிய சாதனை..!!

காருக்கான எதிர்பார்ப்பை அறிந்துக்கொண்ட ஜீப் நிறுவனம், காம்பஸ் மாடலை மொத்தம் பத்து வித வேரியண்டுகளில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. அதில் உயர் ரக அம்சங்களை பெற்ற ஜீப் காம்பஸ் காரும் அடங்கும்.

இந்தியாவில் உற்பத்தியில் ஜீப் காம்பஸ் கார் புதிய சாதனை..!!

பெட்ரோல் மற்றும் டீசல் என இருவேறு தேர்வுகளுடன் காம்பஸ் எஸ்யூவி காரை ஜீப் நிறுவனம் தயாரித்துள்ளது. அதன்படி பெட்ரோல் மாடல் காரில் 1.4 லிட்டர் மல்டி-டர்போ எஞ்சின் வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் உற்பத்தியில் ஜீப் காம்பஸ் கார் புதிய சாதனை..!!

அதிகப்பட்சமாக 160 பிஎச்பி பவர் மற்றும் 250 என்.எம் டார்க் திறனை வழங்கும் இந்த எஞ்சின் வேரியன்டுகளுக்கு ஏற்ப 6 ஸ்பீடு மற்றும் 7 ஸ்பீடு டிசிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் கூட்டணி அமைத்துள்ளது.

இந்தியாவில் உற்பத்தியில் ஜீப் காம்பஸ் கார் புதிய சாதனை..!!

தொடர்ந்து 2.0 லிட்டர் மல்டிஜெட் ஆயில் பர்னர் கொண்ட காம்பஸ் எஸ்யூவி கார் டீசல் எஞ்சின் 170 பிஎச்பி பவர் மற்றும் 350 என்.எம் டார்க் திறனை அதிகப்பட்சமாக வழங்கும். இதில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் உற்பத்தியில் ஜீப் காம்பஸ் கார் புதிய சாதனை..!!

ஜீப் காம்பஸ் காரின் பெட்ரோல் எஞ்சின் 2டபுள்யூடி, டீசல் எஞ்சின் 2 டபுள்யூடி மற்றும் 4 டபுள்யூடி தேர்வுகளை கொண்டுள்ளது. இந்த இரண்டும் எஞ்சின்களும் பிஎஸ்4 விதியின் கீழ் இயங்கும்.

இந்தியாவில் உற்பத்தியில் ஜீப் காம்பஸ் கார் புதிய சாதனை..!!

இந்தியாவில் காம்பஸ் கார் விற்பனைக்கு வந்த பிற்பாடு, எஸ்யூவி கார்களுக்கான சந்தையை மாற்றியமைத்து என்றே சொல்லலாம். தொடர்ந்து இதற்கான புக்கிங் குவிந்து கொண்டே வருவது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் உற்பத்தியில் ஜீப் காம்பஸ் கார் புதிய சாதனை..!!

ஜீப் காம்பஸ் எஸ்யூவி கார் இந்தியாவில் ரூ. 15.16 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் இந்தியா) தொடங்கி ரூ. 21.37 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் இந்தியா) வரை விலை பெறுகிறது.

மேலும்... #ஜீப் #jeep
English summary
Read in Tamil: Jeep Compass Crosses 25,000 Production Milestone In India. Click for Details...
Story first published: Wednesday, March 7, 2018, 8:30 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark