விரைவில் வரும் புதிய ஜீப் காம்பஸ் ட்ரெயில்ஹாக் எஸ்யூவி குறித்த சிறப்பு கண்ணோட்டம்!

Written By:

கடந்த ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவி வாடிக்கையாளர் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றிருக்கிறது. விற்பனையிலும் கலக்கி வருகிறது. இந்த சூழலில், ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் மார்க்கெட்டை வலுப்படுத்தும் விதத்தில், கூடுதல் சிறப்பம்சங்கள் கொண்ட புதிய மாடலை ஜீப் நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கிறது.

விரைவில் வரும் புதிய ஜீப் காம்பஸ் ட்ரெயில்ஹாக் எஸ்யூவி குறித்த சிறப்பு கண்ணோட்டம்!

ஜீப் காம்பஸ் ட்ரெயில்ஹாக் என்ற பெயரில் இந்த புதிய மாடலை ஜீப் நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கிறது. இது ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் அதிக சிறப்பம்சங்கள் கொண்ட டாப் வேரியண்ட் மாடலாக விற்பனை செய்யப்படும்.

டிசைன்

டிசைன்

ஜீப் காம்பஸ் எஸ்யூவியை அதிக வசீகரமான மாடலாக இருக்கிறது. புதிய பம்பர் அமைப்பு முக்கிய மாற்றமாக இருக்கிறது. சாதாரண ஜீப் காம்பஸ் எஸ்யூவியில் இருக்கும் க்ரோம் பாகங்களுக்கு பதிலாக இந்த மாடலில் விசேஷ கருப்பு வண்ணத்திலான பாகங்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. குறிப்பாக க்ரில் அமைப்பு அதிக வசீகரத்தை பெற்றிருக்கிறது.

விரைவில் வரும் புதிய ஜீப் காம்பஸ் ட்ரெயில்ஹாக் எஸ்யூவி குறித்த சிறப்பு கண்ணோட்டம்!

முன்புறத்தில் பம்பரில் இரண்டு ஊக்கு அமைப்பு பொருத்தப்பட்டு இருக்கிறது. பானட்டில் கருப்பு வண்ண பாடி டீக்கெல் ஸ்டிக்கரும் சாதாரண மாடலைவிட தனித்துவமாக இருக்கிறது.

விரைவில் வரும் புதிய ஜீப் காம்பஸ் ட்ரெயில்ஹாக் எஸ்யூவி குறித்த சிறப்பு கண்ணோட்டம்!

ஜீப் காம்பஸ் ட்ரெயில்ஹாக் மாடலில் பெயர்களுக்கான பேட்ஜ்களும் கருப்பு வண்ணத்தில் இருப்பது தனித்துவம். இந்த புதிய ஜீப் காம்பஸ் மாடலில் 17 அங்குல அலாய் சக்கரங்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன.

விரைவில் வரும் புதிய ஜீப் காம்பஸ் ட்ரெயில்ஹாக் எஸ்யூவி குறித்த சிறப்பு கண்ணோட்டம்!

புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவியில் முற்றிலும் கருப்பு வண்ண இன்டீரியர் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆங்காங்கே சிவப்பு வண்ண அலங்காரம் இருப்பதும் மிக பிரிமியமாகவும், கவர்ச்சிகரமாகவும் இருக்கிறது. இருக்கைகளில் ட்ரெயில்ஹாக் என்ற பெயரிலான எம்ராய்டரி தையல் மூலமாக அழகு சேர்க்கப்பட்டு இருக்கிறது.

விரைவில் வரும் புதிய ஜீப் காம்பஸ் ட்ரெயில்ஹாக் எஸ்யூவி குறித்த சிறப்பு கண்ணோட்டம்!

இந்த புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவியில் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது. ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே ஆகியவையும் முக்கிய அம்சங்கள். ஸ்டீயரிங் வீல் மற்றும் கியர் லிவரில் லெதர் உறை கொடுக்கப்பட்டு இருக்கிறது.

விரைவில் வரும் புதிய ஜீப் காம்பஸ் ட்ரெயில்ஹாக் எஸ்யூவி குறித்த சிறப்பு கண்ணோட்டம்!

புதிய ஜீப் காம்பஸ் ட்ரெயில்ஹாக் எஸ்யூவியில் 1.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. பெட்ரோல் எஞ்சின் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸுடனும், டீசல் மாடல் 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடனும் கிடைக்கும்.

விரைவில் வரும் புதிய ஜீப் காம்பஸ் ட்ரெயில்ஹாக் எஸ்யூவி குறித்த சிறப்பு கண்ணோட்டம்!

புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவியில் ஆஃப்ரோடு செல்வதற்கு ஏதுவான ராக் மோடு மற்றும் செலக்ட் டெர்ரெயின் மற்றும் டெர்ரெயின் டிராக்ன் மேனேஜ்மென்ட் சிஸ்டம் ஆகியவை நிரந்தர அம்சங்களாக இருக்கும். இதுதவிர, தொழில்நுட்ப அம்சங்களில் வேறு புதிய விஷயங்கள் இல்லை.

விரைவில் வரும் புதிய ஜீப் காம்பஸ் ட்ரெயில்ஹாக் எஸ்யூவி குறித்த சிறப்பு கண்ணோட்டம்!

புதிய ஜீப் காம்பஸ் ட்டரெயில்ஹாக் மாடலுக்கு ஏற்கனவே முன்பதிவு துவங்கிவிட்டது. அடுத்த சில வாரங்களில் இந்த புதிய மாடல் விற்பனைக்கு வந்துவிடும் வாய்ப்புள்ளது. ரூ.23 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும்... #ஜீப் #jeep
English summary
We have already reported about the bookings of the Compass Trailhawk in India and the SUV is expected to be launched in the coming weeks. So, let's see what will the new top-spec Compass Trailhawk offer as compared to the regular variant of the SUV.
Story first published: Saturday, March 31, 2018, 14:58 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark