TRENDING ON ONEINDIA
-
கூட்டணி உறுதியானதால் குஷி.. அமித்ஷா இன்று மாலை சென்னை வருகை
-
டூவீலர் உற்பத்தியாளர், டீலர், ஆர்டிஓக்கள் இணைந்து 13 ஆண்டுகளாக வாடிக்கையாளர்களிடம் மெகா மோசடி... என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்...
-
நடிகையாகும் பிரபல ஹீரோவின் மகள்: பொண்ணு ரொம்பத் தெளிவு
-
இந்த ரெண்டு ராசிக்காரங்களுக்கும் கெட்ட நேரம் ஆரம்பிச்சிடுச்சு... கொஞ்சம் கவனமா இருங்க
-
பாகிஸ்தான் இராணுவத்தை தலை பிச்சுக்க விட்ட இந்திய ஹேக்கர்கள்.!
-
தினேஷ் கார்த்திக் எதிர்காலம் முடிஞ்சு போச்சா? ரிஷப் பண்ட்டுக்கு மட்டும் தான் வாய்ப்பா?
-
இந்த ஊர்ல ஒருவரின் சராசரி வருமானமே 3.2 கோடி ரூபாய்.. எந்த ஊர் தெரியுமா..?
-
ஆலி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது
ஓரே ஆண்டில் 25000 ஜீப் காம்பஸ் கார்களை தயாரித்தது ஃபியட் நிறுவனம்
அறிமுகமான ஓரே ஆண்டில் 25000 ஜீப் காம்பஸ் கார்களை தயாரித்துள்ளது ஃபியட் நிறுவனம். உலகம் முழுவதும் எஸ்யூவி கார்களுக்கு மவுசு ஏறுவதால் வரும் ஆண்டுகளில் விற்பனை மேலும் பல மடங்கு அதிகரிக்கும் என அந்நிறுவனம் எதிர்பார்க்கிறது.
உலகம் முழுவதும் ஆட்டோமொபைல் உலகில் இன்று எஸ்யூவி கார்கள் தான் டிரெண்ட், அதை சரியாக கணித்த ஃபியட் நிறுவனம் தனது ஜீப் பிராண்டின் காம்பஸ் காரை இந்தியாவிலேயே தயாரித்து விற்பனை மற்றும் ஏற்றுமதி செய்ய கடந்த 2016ம் ஆண்டு முடிவு செய்தது.
இதையடுத்து மஹாராஷ்டிரா மாநிலம் புனேவில் அந்நிறுவனம் தனது உற்பத்தியை துவங்கி ஏற்றுமதியை துவங்கியது. இதற்காக ஃபியட் குழுமம் இந்திய மதிப்பில் 1900 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளனர்.
தொடர்ந்து கடந்தாண்டு ஜீப் காம்பஸ் காரை தயாரித்து விற்பனையை கடந்தாண்டு ஜூலை மாதம் துவங்கியது. ஆனால் காரின் உற்பத்தி கடந்தாண்டு ஜூன் மாதம் 1ம் தேதியே துவங்கிவிட்டது.
ஜப்பான், ஆஸ்திரேலியா, லண்டன், அயர்லாந்து உள்ளிட்ட பல நாடுகளுக்கு அந்நிறுவனம் ஜீப் காம்பஸ் கார்களை விற்பனை செய்தும் வருகிறது. இதுவரை அந்நிறுவனம் 8000 கார்களை விற்பனை செய்துள்ளது.
ஜீப் காம்பஸ் கார்கள் தயாரிக்க ஆரம்பித்து ஒரு ஆண்டு காலம் முடிவடைந்த நிலையில் தற்போது வரை 25000 கார்கள் அந்நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஒரே ஆண்டில் 25000 ஜீப் காம்பஸ் கார்கள் விற்பனையாகியுள்ளன.
தற்போது ஃபியட் நிறுவனம் இந்தியா முழுவதும் ஜீப் காம்பஸை விற்க 65 விற்பனை மற்றும் சர்வீஸ் சென்ட்ர்கள் அமைத்துள்ளது. விரைவில் அது 70 ஆக மாறும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
ஜீப் காம்பஸ் காரை பொருத்தவரை பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய 2 வேரியன்ட்களிலும் விற்பனை செய்யப்படுகிறது. இது 1.4 லிட்டர் 4 சிலிண்டர் டர்போ சார்ஜ் பெட்ரோல் மற்றம் 2 லிட்டர் 4 சிலிண்டர் டர்போசார்ஜ் டீசல் இன்ஜின்களுடன் விற்பனைக்க வருகிறது.
இதில் பெட்ரோல் கார் 160 பிஎச்பி பவரையும் 260 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியது, டீசல் கார் 170 பிஎச்பி பவரையும் 350 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியது,.
இந்த காரில் கியரை பொருத்தவரை 6 ஸ்பீவு மேனுவல் கியர் மற்றும் 7 ஸ்பீடு ஆட்டோமெட்டிக் கியர் ஆகிய ஆப்ஷன்களுடன் விற்பனையாகி வருகிறது. இதன் டீசல் இன்ஜின் புதிதாக ஃபியட் நிறுவனம் வடிவமைத்த இன்ஜின் இந்த இன்ஜின் சிறப்பாக செலாற்றுவதல் மற்ற கார்களுக்கு இன்ஜினை பொருத்த திட்டமிட்டு வருகிறது.
இந்த கார் ஸ்போர்ட் , லாங்கிடியூட், லிமிட்டெட் ஆகிய 3 வேரியன்ட்களில் கிடைக்கிறது. இது மினிமல் க்ரே, எக்ஸோடிகா ரெட், ஹெட்ரோ ப்ளூ, வோக்கல் ஒயிட், ஹிப்ஹாப் பிளாக் ஆகிய கலர்களில் விற்பனையாகி வருகிறது.
மேலும் 4 வீல் டிரைவ் மற்றும் 2 வீல் டிரைவ் ஆகிய இரண்டு ஆப்ஷன்களிலும் கிடைக்கிறது. இந்த காரின் விலை டில்லி எக்ஸ் ஷோரூம் விலைப்படி ரூ15.35 லட்சத்தில் இருந்து ஆரம்பமாகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ்தளத்தில் அதிகம் வாசிக்கப்படும் செய்திகள்
01.கார், பைக் இருந்தால் இனி இதுக்கும் நீங்க வரி கட்டணும்.. காச கரி ஆக்காம நடந்து போவதே மேல்!
02.தமிழர்கள் தயாரிக்கும் எலெக்ட்ரிக் நேனோ கார்; கோவை நிறுவனம் சாதனை
03.இந்தியன் ஸ்கவுட் எப்டிஆர் 1200 பைக் 2019ம் ஆண்டு விற்பனைக்கு வருகிறது
04. ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் ஸ்பெஷல் எடிசன் விற்பனைக்கு அறிமுகம்!!
05.ஆடிக்கு அடித்த அடி... புகை உமிழ்தல் மோசடி வழக்கில் சிஇஒ அதிரடி கைது!