இந்தியாவில் காம்பேக்ட் எஸ்யூவி செக்மென்டை அதகளப்படுத்த வரும் கியா எஸ்பி கான்சப்ட் எஸ்யூவி கார்..!!

Written By:

தென் கொரியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான கியா மோட்டார்ஸ் இந்திய சந்தையில் கால்பதிக்க ஆயத்தமாகி விட்டது. இந்நிலையில் 2018 ஆட்டோ எக்ஸ்போ மூலம் இந்தியாவில் அறிமுகமாகிறது கியா மோட்டார்ஸ்.

ஆட்டோ எக்ஸ்போவில் கியா வெளியிடும் புதிய கார் இதுதான்..!!

இந்திய சந்தையில் முதல் அறிமுகத்திலேயே சிக்ஸரடிக்க நிற்கிறது கியா மோட்டார்ஸ். அதற்காக காம்பேக்ட் எஸ்யூவி செக்மென்டை குறிவைத்துள்ளது அந்நிறுவனம்.

ஆட்டோ எக்ஸ்போவில் கியா வெளியிடும் புதிய கார் இதுதான்..!!

அதற்காக கியா தயாரித்து வரும் புதிய எஸ்யூவி கார் எஸ்பி கான்செப்டில் தயாரித்துள்ளது. இந்த கார் தான் தற்போது நடைபெறும் ஆட்டோ எக்ஸ்போவில் வெளிவருகிறது.

Recommended Video - Watch Now!
Ducati 959 Panigale Crashes Into Buffalo - DriveSpark
ஆட்டோ எக்ஸ்போவில் கியா வெளியிடும் புதிய கார் இதுதான்..!!

இந்த கான்செப்ட் மாடலை தவிர, சர்வதேச சந்தைக்கான மற்ற புதிய 16 கார்களையும் கியா மோட்டார்ஸ் 2018 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்கிறது.

ஆட்டோ எக்ஸ்போவில் கியா வெளியிடும் புதிய கார் இதுதான்..!!

இந்தியாவில் ஹூண்டாய் கிரெட்டா மற்றும் ரெனோ டஸ்டர் கார்களுக்கு சரிநிகர் போட்டியாக கியா எஸ்பி கான்செப்ட் காரை தயாரித்துள்ளது.

ஆட்டோ எக்ஸ்போவில் கியா வெளியிடும் புதிய கார் இதுதான்..!!

முற்றிலும் இந்திய சாலைகளுக்கு ஏற்றவாறு தயாராகியுள்ள கியா எஸ்பி கான்செப்ட் காரை பிப்ரவரி 7, 2018ல் வெளியிடுகிறது. அப்போதே அந்நிறுவனம் மற்ற 16 கார்களும் அறிமுகமாகின்றன.

ஆட்டோ எக்ஸ்போவில் கியா வெளியிடும் புதிய கார் இதுதான்..!!

கவர்ந்திழுக்கும் வடிவமைப்பு மற்றும் அலாய் சக்கரங்களை பெற்றிருக்கும் இந்த எஸ்பி கான்செப்ட் எஸ்யூவி கார், பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை பெற்றிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆட்டோ எக்ஸ்போவில் கியா வெளியிடும் புதிய கார் இதுதான்..!!

குறிப்பாக இந்த காரை பக்கவாட்டு பகுதியிலிருந்து பார்த்தால் அப்படியே ரேஞ்ச் ரோவர் இவோக் கார் நம் நினைவிற்கு வரும். நேர்த்தியான எல்.இ.டி டெயில் விளக்குகள், கிரோம் நிறத்திலான பட்டை ஆகியவை கியா எஸ்பி காரின் பக்கவாட்டு பகுதியை அலங்கரிக்கின்றன.

ஆட்டோ எக்ஸ்போவில் கியா வெளியிடும் புதிய கார் இதுதான்..!!

வடிவமைப்புகளை தவிர இந்த காரின் எஞ்சின் தேர்வுகள் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த தகவல்களை இதுவரை கியா வெளியிடவில்லை. எனினும் எஸ்பி கான்செப்ட் எஸ்யூவி கார் பெட்ரோல் மற்றும் டீசல் என இருவேறு தேர்வுகளிலும் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆட்டோ எக்ஸ்போவில் கியா வெளியிடும் புதிய கார் இதுதான்..!!

2019ம் ஆண்டில் இந்திய சந்தையில் விற்பனைக்கு வரும் இந்த கார், ஆந்திர பிரதேச மாநிலம் அனந்த்பூர் பகுதியில் கியா தொடங்கியுள்ள உற்பத்தி ஆலையில் மொத்தமாக தயாரிக்கப்படும்.

ஆட்டோ எக்ஸ்போவில் கியா வெளியிடும் புதிய கார் இதுதான்..!!

இந்தியாவில் ஏற்கனவே காம்பேக்ட் எஸ்யூவி செக்மென்ட் உச்சத்தில் உள்ளன. இதை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் கியாவின் புதிய எஸ்பி கான்செப்ட் கார் அமையவுள்ளது.

ஆட்டோ எக்ஸ்போவில் கியா வெளியிடும் புதிய கார் இதுதான்..!!

2018 ஆட்டோ எக்ஸ்போவில் எஸ்பி கான்செப்ட் காருடன் பிகேன்டோ ஹேட்ச்பேக், ரியோ ப்ரீமியம் ஹேட்ச்பேக், ஸ்போர்டேஜ் எஸ்யூவி, சராட்டோ செடான், ஆப்டிமா ப்ரீமியம் செடான், சொரென்டோ எஸ்யூவி மற்றும் ஸ்போர்டி சிடின்ஜர் செடான் ஆகிய மாடல்களையும் கியா காட்சிப்படுத்துகிறது.

ஆட்டோ எக்ஸ்போவில் கியா வெளியிடும் புதிய கார் இதுதான்..!!

கூடவே மின்சார வாகனங்கள், பிளக்-இன் முறையில் தயாரான ஹைஃபிரிட் உள்ளிட்ட வாகன மாடல்களையும் ஆட்டோ எக்ஸ்போவில் கியா பார்வைக்கு கொண்டுவருகிறது.

ஆட்டோ எக்ஸ்போவில் கியா வெளியிடும் புதிய கார் இதுதான்..!!

கியாவின் இந்த அசுர முயற்சி இந்திய சந்தையில் விற்பனையாகும் எல்லா கார் செக்மென்டிலும், அது ஆதிக்கம் செலுத்த நினைப்பது போன்ற எண்ணத்தை தருகிறது.

எனினும் மேற்கூறிய அனைத்து மாடல்களும் கியாவிற்கான சிறந்த விற்பனை திறனை உலகளவில் பெற்று தந்துக்கொண்டுயிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆட்டோ எக்ஸ்போவில் கியா வெளியிடும் புதிய கார் இதுதான்..!!

காம்பேக்ட் எஸ்யூவி கார்களுக்கான செக்மென்ட் இந்தியாவில் பெரிய வளர்ச்சியை பெற்று வருகிறது. அதை குறிவைத்தே பல்வேறு நிறுவனங்கள் இந்தியாவில் கால்பதிக்க திட்டமிட்டுள்ளன.

ஆட்டோ எக்ஸ்போவில் கியா வெளியிடும் புதிய கார் இதுதான்..!!

அவ்வாறான நிறுவனங்களில் எஸ்பி கான்செப்ட் காரை வெளியிட்டு, ஒரு மாபெரும் விற்பனை போட்டியை முடுக்கிவிட்டுள்ளது கியா மோட்டார்ஸ்.

ஆட்டோ எக்ஸ்போவில் கியா வெளியிடும் புதிய கார் இதுதான்..!!

அதை உறுதிப்படுத்தும் நோக்கில் ஆந்திராவில் சொந்தமாக ஆலையை தொடங்கி, காம்பேக்ட் எஸ்யூவி செக்மென்டில் இந்திய ஆட்டோ சந்தையை கலக்கி வரும் ஹூண்டாய் கிரெட்டா மற்றும் ரெனால்ட் டஸ்டர் ஆகிய கார்களுக்கு கியா மோட்டார்ஸ் நேரடியாக சவால் விடுத்துள்ளது.

English summary
Read in Tamil: Kia Motors Teases SP Concept SUV To Debut At Auto Expo 2018. Click for Details...
Story first published: Wednesday, January 31, 2018, 10:30 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark