2018 ஆட்டோ எக்ஸ்போ லைவ்: கியா எஸ்பி கான்செப்ட் கார் வெளியீடு; புகைப்படங்களுடன் தகவல்கள்..!!

Posted By:

இந்தியாவில் புதியதாக கால்பதிக்கும் கியா மோட்டார்ஸ் நிறுவனம் புதிய எஸ்பி கான்செப்ட் காரை 2018 ஆட்டோ எக்ஸ்போவில் வெளியிட்டுள்ளது.

ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமான கியா எஸ்பி கான்செப்ட் கார்..!!

2019ல் கியாவின் தயாரிப்புகள் இந்திய சந்தையில் விற்பனைக்கு வருகின்றன. இதன்காரணமான எதிர்கால வாகன விற்பனையை கருத்தில் கொண்டு எஸ்பி கான்செப்ட் காரை காட்சிப்படுத்தியது கியா.

ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமான கியா எஸ்பி கான்செப்ட் கார்..!!

இந்தியாவின் பாரம்பரிய கார் பயணத்திற்கு ஏற்றவாறும், அதே சமயத்தில் எதிர்கால வாகன பயன்பாட்டிற்கான சிந்தனையுடனும் எஸ்பி கான்செப்ட் கார் தயாரிக்கப்பட்டுள்ளது.

கியா மோட்டார்ஸிற்கு என்று தனிப்பட்ட வடிவமைப்பு நுணுக்கங்கள் உள்ளன. அதை முன்னிறுத்தி தான் புதிய எஸ்பி கான்செப்ட் மாடலை கியா உருவாக்கியுள்ளது.

ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமான கியா எஸ்பி கான்செப்ட் கார்..!!

இதிலுள்ள கியாவின் தனித்துவம் பெற்ற வடிவமைப்பு திறன்கள் இந்தியாவின் இளைய தலைமுறையினரை கவரும் விதத்தில் உள்ளதால் பல வாகன ஆர்வலர்கள் கருதுகின்றனர்.

காம்பேக்ட் எஸ்யூவி மாடலான எஸ்பி கான்செப்ட் கார் ஸ்போர்டி திறன், நிலைத்தன்மை, பெரியளவிலான ஹூடு என பல எதிர்கால கார் தயாரிப்பிற்கான அமைப்புகள் இதில் உற்றுநோக்க வைக்கின்றன.

ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமான கியா எஸ்பி கான்செப்ட் கார்..!!

எஸ்பி கான்செப்ட் காரின் முன்பக்க க்ரில், புலியின் மூக்கை போல உள்ளது. இது கியாவிற்கே உரிய தனித்துவமான வடிவமைப்பு நுணுக்கமாகும்.

பம்பரில் இடம்பெற்றுள்ள முகப்பு விளக்குகள், பகல்நேர விளக்குகள் மற்றும் பொசிஷனிங் விளக்குகள் ஆகியவை எல்.இ.டி திறனில் ஒளிர்வூட்டப்பட்டுள்ளன.

Recommended Video - Watch Now!
New Maruti Swift Launch: Price; Mileage; Specifications; Features; Changes
ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமான கியா எஸ்பி கான்செப்ட் கார்..!!

எஸ்பி கான்செப்ட் காரின் பக்கவாட்டு பகுதியில் ஸ்போர்ட் தோற்றத்திற்கான கருப்பு நிற பட்டைகள், காருக்கான சிறந்த அவுட்-லைனாக உள்ளது. மேலும் காரின் கண்ணாடிகளுக்கான வின்டோ லைன் வெள்ளை நிறத்தில் உள்ளது.

ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமான கியா எஸ்பி கான்செப்ட் கார்..!!

மேலும் கியா எஸ்பி கான்செப்ட் காரின் பின்பக்க பகுதி நேர்த்தியான எல்.இ.டி திறன் பெற்ற டெயில் விளக்குகளை பெற்றுள்ளன. அதேபோல அவற்றில் செய்யப்பட்டுள்ள கிரோம் வேலைப்பாடுகளும் அசரடிக்கின்றன.

ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமான கியா எஸ்பி கான்செப்ட் கார்..!!

இதுதவிர காரின் உள்கட்டமைப்பு முற்றிலும் மேம்பட்ட உணர்ச்சி பாணியில் தயாராகியுள்ளது. உள்கட்டமைப்பில் கவரும் இந்த வேலைபாடுகள் டைனமிக் சென்சிபிளிட்டியை பெற்றிருக்கும்.

அதற்கு வலு சேர்க்கும் விதமாக எதிர்காலத்தை நோக்கிய தொழில்நுட்ப அம்சங்கள், நவீன மற்றும் டிரென்டியான கேபின் வசதி ஆகியவை இந்த காரில் இடம்பெற்றிருக்கும்.

ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமான கியா எஸ்பி கான்செப்ட் கார்..!!

எஸ்பி கான்செப்ட் காரை இளைய தலைமுறை வாடிக்கையாளர்களை குறிவைத்து தான் கியா மோட்டார்ஸ் உருவாக்கியுள்ளது. இதனடிப்படையில் தயாராகும் காருக்கான பணிகள் 2019ம் ஆண்டில் தொடங்கும்.

ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமான கியா எஸ்பி கான்செப்ட் கார்..!!

தென் கொரியாவை சேர்ந்த கியா மோட்டார்ஸ் எஸ்பி கான்செப்ட் காரை தவிர பிசான்டோ, ரியோ, ஸ்டோனிக், சிரெட்டோ, சோல் இ.வி, சொரென்டோ, ஸ்போர்டேஜ், கிரான்ட் கார்னிவல் உட்பட பல்வேறு கார்களை 2018 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தியுள்ளது.

ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமான கியா எஸ்பி கான்செப்ட் கார்..!!

கியா வெளியிட்டுள்ள எஸ்.பி கான்செப்ட் கார் இந்திய காம்பேக்ட் எஸ்யூவி விற்பனைக்கான எதிர்கால சந்தைக்கு ஒரு புதிய முகாந்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனுடைய தயாரிப்பு பணிகள் 2019ல் தொடங்குகின்றன என்பதால் இந்தியாவில் விற்பனைக்கு வரும் முதல் கியாவின் தயாரிப்பு எஸ்.பி கான்செப்ட் மாடலாக இருக்கலாம்.

ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமான கியா எஸ்பி கான்செப்ட் கார்..!!

இந்தியாவின் காம்பேக்ட் எஸ்யூவி செக்மென்டை கலக்கி வரும் கார் என்றால் அது ஹூண்டாய் கிரெட்டா தான். அதை குறிவைத்தே பல்வேறு புதிய வாகனங்கள் இந்த செக்மென்டில் அறிமுகமாகி வருகின்றன.

அறிவிப்பின் மூலமாக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள கியா மோட்டார்ஸின் எஸ்.பி கான்செப்ட் கார், இந்தியாவிற்கு நுழையும் போது ஹூண்டாய் கிரெட்டாவிற்கான போட்டி மாடலாகத்தான் கால்பதிக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

English summary
Read in Tamil: Auto Expo 2018: Kia SP Concept Unveiled Expected Launch Date And Images. Click for Details...

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark