TRENDING ON ONEINDIA
-
ஒதுக்கி ஓரம் கட்டப்படும் தம்பிதுரை.. அதிமுகவில் என்னதான் நடக்குது?
-
கை கட்டுகளை அவிழ்த்து விட்ட மோடி... பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட முழு வீச்சில் தயாராகும் இந்திய ராணுவம்...
-
Nayanthara: காதலர் தினத்தில் நயன், விக்கி ஒரே கொஞ்சல்ஸ், முத்தம்: கடுப்பில் மொரட்டு சிங்கிள்ஸ்
-
கொடூரனான துரியோதனன் எப்படி சொர்க்கத்துக்கு சென்றான்? அப்படி என்ன லஞ்சம் கொடுத்தான் தெரியுமா?
-
வாட்ஸ்ஆப்: இனி குரூப்பில் சேர்க்க பயனரின் அனுமதி தேவை.!
-
Ind vs Aus : தினேஷ் கார்த்திக் இடத்தை பறித்த ரிஷப் பண்ட்.. அணியில் இடம் பெற்ற ராகுல், விஜய் ஷங்கர்
-
வெனிசூலாவில் இருந்து இந்திய ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்குவதா - இந்தியாவை எச்சரிக்கும் அமெரிக்கா
-
250 தூண்கள் கொண்ட தென் காளகஸ்தி - சனியிலிருந்து தப்பிக்க உடனே போங்க
ஆட்டோ எக்ஸ்போ 2018: புதிய கியா ஸ்டிங்கர் ஜிடி கார் இந்தியாவில் பார்வைக்கு வந்தது!
தென்கொரியாவை சேர்ந்த கியா நிறுவனம் தனது ஸ்டிங்கர் ஜிடி காரை இந்தியாவில் பார்வைக்கு கொண்டு வந்துள்ளது. கியா நிறுவனத்தின் முதல் கார் மாடலாக காட்சிக்கு வந்திருக்கும் இந்த புதிய காரின் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.
கடந்த ஆண்டு டெட்ராய்ட் ஆட்டோ ஷோவில் கியா ஸ்டிங்கர் ஜிடி கார் முதல்முறையாக பார்வைக்கு வந்தது. கியா நிறுவனத்தின் அதிவேகமான, சக்திவாய்ந்த கார் மாடலாக இது வெளியிடப்பட்டது. இந்த நிலையில், டெல்லியில் நேற்றிரவு நடந்த நிகழ்ச்சியின் மூலமாக இந்த கார் முறைப்படி இந்திய மார்க்கெட்டிற்கு உறுதியாகி உள்ளது.
கியா ஸ்டிங்கர் ஜிடி கார் மூன்றுவிதமான எஞ்சின் தேர்வுகளில் கிடைக்கும். இந்த காரில் 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் எஞ்சின், 2.2 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் எஞ்சின் மற்றும் 3.3 லிட்டர் வி6 பெட்ரோல் எஞ்சின் ஆகிய ஆப்ஷன்களில் கிடைக்கும்.
இந்த காரின் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 244 பிஎச்பி பவரையும், 353 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த கார் 0 - 100 கிமீ வேகத்தை 6 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 240 கிமீ வேகம் வரை செல்லும்.
அடுத்து 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 197 பிஎச்பி பவரையும், 440 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த மாடலானது 0 - 100 கிமீ வேகத்தை 7.7 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 230 கிமீ வேகம் வரை செல்லும் வல்லமை கொண்டது.
கியா ஸ்டிங்கர் ஜிடி காரின் சக்திவாய்ந்த 3.3 லிட்டர் வி6 எஞ்சின் மாடலானது அதிகபட்சமாக 365 பிஎச்பி பவரையும்,, 510 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த மாடலானது 0 - 100 கிமீ வேகத்தை 4.7 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 270 கிமீ வேகம் வரை செல்லும் வல்லமை வாய்ந்தது.


அனைத்து எஞ்சின் ஆப்ஷன்களிலும் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. பின்புற சக்கரங்களுக்கு எஞ்சின் பவர் செலுத்தப்படுகிறது. ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட மாடலிலும் கிடைக்கிறது.
ஹூண்டாய் ஜெனிசிஸ் சொகுசு காரில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் சேஸீயின் குறைவான நீளம் கொண்ட சேஸீயில்தான் புதிய கியா ஸ்டிங்கர் ஜிடி காரும் கட்டமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் 4,831மிமீ நீளமும், 1,869 மிமீ அகலமும், 1,400 மிமீ உயரமும் கொண்டது. இந்த காரின் வீல் பேஸ் 2,906மிமீ என்பது குறிப்பிடத்தக்கது.
2011ம் ஆண்டு பிராங்க்ஃபர்ட் மோட்டார் ஷோவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த கியா ஜிடி கான்செப்ட் காரின் அடிப்படையில்தான் இந்த புதிய கியா ஸ்டிங்கர் ஜிடி கார் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த காரில் எல்இடி ஹெட்லைட்டுகள் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
க்ரான் டூரிஷ்மோ ரகத்தை இந்த காரின் டிசைன் மிக நேர்த்தியாக இருக்கிறது.கியா கார்களின் தனித்துவமான புலியின் மூக்கை பிரதிபலிக்கும் விதத்திலான க்ரில் அமைப்பு, முன்பக்க பம்பரில் பெரிய அளவிலான ஏர் டேம் போன்றவை முக்கிய அம்சங்கள். தாழ்வாகவும், அகலமாகவும் தெரியும் முக அமைப்பு ஜெர்மனி கார் மாடல்களுக்கு சரியான போட்டியை தரும் விதத்தில் இருக்கிறது.
இந்த காரில் 19 அங்குல அலாய் வீல்கள் பிரம்மாண்டத்தை கூட்டுகிறது. முன்புறத்தில் 225/40 அளவுடைய டயர்களும், பின்புறத்தில் 255/35 அளவுடைய மிச்செலின் டயர்களும் பொருத்தப்பட்டு இருக்கின்றன. புகைப்போக்கி குழாய்கள், எல்இடி டெயில் லைட்டுகள் பின்புற வசீகரத்தை கூட்டும் அம்சங்கள்.
உட்புறத்திலும் அட்டகாசமாக இருக்கிறது. முன்வரிசையில் பக்கெட் இருக்கைகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. பின் இருக்கையில் 3 பேர் அமர்ந்து செல்லும் இடவசதி இருக்கிறது. நப்பா லெதர் இருக்கைகளும் இதன் உயர்தர அம்சம்.
கியா ஸ்டிங்கர் ஜிடி காகரில் 8 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது. சேட்டிலைட் நேவிகேஷன் அமைப்பும் உண்டு. ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே சாஃப்ட்வேர்களை சப்போர்ட் செய்யும். இந்த காரில் 15 ஸ்பீக்கர்கள் கொண்ட ஹார்மன்- கார்டன் ஆடியோ சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
புதிய கியா ஸ்டிங்கர் ஜிடி காரில் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் மற்றும் அவசரகாலத்தில் உதவும் தானியங்கி பிரேக் சிஸ்டம் இருக்கிறது.
இந்த கார் இந்தியாவில் இறக்குமதி செய்தே விற்பனை செய்ய வேண்டிய கட்டாயம் வரும். அவ்வாறு பார்க்கும்போது, விலை மிக அதிகமாக நிர்ணயிக்க வேண்டி இருக்கும் என்பதால், ஜெர்மனியை சேர்ந்த சொாகுசு கார் நிறுவனங்களுடன் போட்டிபோடும்போது பெரும் சவாலை சந்திக்க வேண்டி இருக்கும்.