புதிய லெக்சஸ் எல்எஸ்500எச் சொகுசு கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய லெக்சஸ் எல்எஸ்500எச் சொகுசு கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த கார் குறித்த விரிவானத் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

By Saravana Rajan

Recommended Video

Under-Aged Rider Begs The Policewomen To Spare Him - DriveSpark

புதிய லெக்சஸ் எல்எஸ்500எச் சொகுசு கார் இந்தியாவில் இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. டெல்லியில் நடந்த விழாவில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த கார் எமது எடிட்டர் ஜோபோ குருவில்லா வழங்கும் படங்கள், விசேஷ தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

புதிய லெக்சஸ் எல்எஸ்500எச் சொகுசு கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய லெக்சஸ் எல்எஸ்500எச் சொகுசு கார் கவர்ச்சிகரமான டிசைனை கொண்டுள்ளது. லெக்சஸ் கார்களுக்கு உரித்தான பிரம்மாண்டமான முகப்பு க்ரில் அமைப்பு, அடாப்டிவ் எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள் முகப்பை அலங்கரிக்கின்றன.

புதிய லெக்சஸ் எல்எஸ்500எச் சொகுசு கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

பக்கவாட்டிலிருந்து பார்க்கும்போது ஹெட்லைட்டையும், டெயில் லைட்டையும் இணைக்கும் விதத்திலான கூர்மையான பாடி லைன் இந்த காரின் வசீகரத்தை கூட்டுகிறது. இந்த காரின் 20 அங்குல அலாய் சக்கரங்கள் பிரம்மாண்டமாக தெரிகிறது.

புதிய லெக்சஸ் எல்எஸ்500எச் சொகுசு கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

பின்புறத்தில் எல்இடி டெயில் லைட்டுகள், சென்சார் மூலமாக திறக்கும் பூட் ரூம் மூடி ஆகியவை முக்கிய அம்சங்கள். இந்த காரில் 430 லிட்டர் கொள்திறன் கொண்ட பூட் ரூம் இடவசதி இருக்கிறது.

புதிய லெக்சஸ் எல்எஸ்500எச் சொகுசு கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய லெக்சஸ் எல்எஸ்500எச் சொகுசு காரில் இன்டீரியர் மிகச் சிறப்பாக இருக்கிறது. 20 விதமாக அட்ஜெஸ்ட் செய்யும் வசதி கொண்ட முன் இருக்கைகள், 12.3 அங்குல திரையுடன் கூடிய இனஅஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 23 ஸ்பீக்கர்கள் கொண்ட மார்க் அண்ட் லெவின்சன் ஆடியோ சிஸ்டம் போன்றவை முக்கிய அம்சங்கள்.

புதிய லெக்சஸ் எல்எஸ்500எச் சொகுசு கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

ஹெட்ஸ்அப் டிஸ்ப்ளே, 4 ஸோன் க்ளைமைட் கன்ட்ரோல் சிஸ்டம், 22 விதமாக அட்ஜெஸ்ட் செய்யும் வசதி கொண்ட பின்புற இருக்கைகள் ஆகியவை முக்கியமானதாக இருக்கின்றன. மரத் தகடுகள் அலங்காரமும் வசீகரிக்கிறது. டச்பேடு மூலமாக இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை கட்டுப்படுத்த முடியும்.

புதிய லெக்சஸ் எல்எஸ்500எச் சொகுசு கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய லெக்சஸ் எல்எஸ்500எச் சொகுசு கார் ஹைப்ரிட் ரகத்தில் வந்துள்ளது. இந்த காரில் 3.5 லிட்டர் வி6 எஞ்சினும், இரண்டு எலக்ட்ரிக் மோட்டார்களும் பொருத்தப்பட்டு இருக்கின்றன. எஞ்சின் மற்றும் எலக்ட்ரிக் மோட்டார்கள் மூலமாக அதிகபட்சமாக 354 பிஎச்பி பவரை வெளிப்படுத்த முடியும்.

புதிய லெக்சஸ் எல்எஸ்500எச் சொகுசு கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த காரில் 10 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது. அனைத்து சக்கரங்களுக்கும் எஞ்சின் ஆற்றல் கடத்தும் தொழில்நுட்பமும் உள்ளது. இந்த கார் லிட்டருக்கு 15.38 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

புதிய லெக்சஸ் எல்எஸ்500எச் சொகுசு கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய லெக்சஸ் எல்எஸ்500எச் சொகுசு கார் 0 -100 கிமீ வேகத்தை 5.4 வினாடிகளில் எட்டிவிடும். 2.2 டன் எடை கொண்ட இந்த சொகுசு கார் மணிக்கு 250 கிமீ வேகம் வரை செல்லும் திறன் வாய்ந்தது.

புதிய லெக்சஸ் எல்எஸ்500எச் சொகுசு கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய லெக்சஸ் எல்எஸ்500எச் சொகுசு காரில் 12 ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல், பிரேக் அசிஸ்ட், டிராக்ஷன் கன்ட்ரோல், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் என எண்ணற்ற பாதுகாப்பு வசதிகள் இடம்பெற்றிருக்கின்றன.

புதிய லெக்சஸ் எல்எஸ்500எச் சொகுசு கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய லெக்சஸ் எல்எஸ்500எச் சொகுசு கார் ரூ.1.77 கோடி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் க்ளாஸ், பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் மற்றும் ஆடி ஏ8 உள்ளிட்ட உயர்வகை சொகுசு கார் மாடல்களுடன் போட்டி போடும்.

Most Read Articles
மேலும்... #லெக்சஸ் #lexus
English summary
Lexus LS 500h launched in India. The Lexus LS 500h for India is priced at Rs. 1.77 crore ex-showroom (India).
Story first published: Monday, January 15, 2018, 13:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X