கிராஷ் டெஸ்ட்டில் 5 ஸ்டார் ரேட்டிங் பெற்ற மாடல் மஹிந்திரா அல்டுராஸ் ஜி4!

கடந்த சனிக்கிழமையன்று ரூ.26.95 லட்சம் (எக்ஸ் ஷோரூம், டெல்லி) என்ற ஆரம்ப விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட புதிய மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 எஸ்யூவி கார் க்ராஸ் டெஸ்ட்டில் 5 ஸ்டார் ரேட்டிங் பெற்று அசத்

கடந்த சனிக்கிழமை விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருக்கும் புதிய மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 எஸ்யூவியானது, அதன் ரகத்தில் மிகச்சிறந்த பாதுகாப்பு அம்சங்களை பெற்ற கார் என்பதை தெரிவித்திருந்தோம். இந்த நிலையில், இந்த எஸ்யூவி கிராஷ் டெஸ்ட்டுகளிலும் அசத்திய மாடல் என்பதை இந்த தருணத்தில் கூறுவது வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் தெளிவை ஏற்படுத்தும்.

கிராஷ் டெஸ்ட்டில் 5 ஸ்டார் ரேட்டிங் பெற்ற மாடல் மஹிந்திரா அல்டுராஸ் ஜி4!

மஹிந்திராவின் அங்கமாக செயல்படும் தென்கொரியாவை சேர்ந்த சாங்யாங் நிறுவனத்தின் நான்காம் தலைமுறை ரெக்ஸ்டன் மாடல்தான் மஹிந்திரா பிராண்டில் அல்டுராஸ் என்ற பெயரில் வந்துள்ளது. இந்தியாவில் அல்டுராஸ் எஸ்யூவியின் ஜி4 டாப் வேரியண்ட்டில் 9 ஏர்பேக்குகள் உள்பட எக்கச்சக்க பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

கிராஷ் டெஸ்ட்டில் 5 ஸ்டார் ரேட்டிங் பெற்ற மாடல் மஹிந்திரா அல்டுராஸ் ஜி4!

அதாவது, போட்டியாளர்களைவிட அதிக பாதுகாப்பு வசதிகளை பெற்றுள்ளது. இந்த நிலையில், இந்த எஸ்யூவி கிராஷ் டெஸ்ட்டுகளிலும் அசத்திய விபரத்தை இப்போது பகிர்ந்து கொள்கிறோம். ஆம், இந்த எஸ்யூவியை கொரியா மற்றும் குளோபல் என்சிஏபி அமைப்புகள் கிராஷ் டெஸ்ட் பரிசோதனைக்கு உட்படுத்திவிட்டன.

கிராஷ் டெஸ்ட்டில் 5 ஸ்டார் ரேட்டிங் பெற்ற மாடல் மஹிந்திரா அல்டுராஸ் ஜி4!

அந்த கிராஷ் டெஸ்ட்டுகளில் இந்த எஸ்யூவி அதிகபட்சமான 5 நட்சத்திர பாதுகாப்பு தர மதிப்பீட்டை இந்த எஸ்யூவி பெற்றிருக்கிறது. நேரடி போட்டியாளராக கருதப்படும் டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவி கிராஷ் டெஸ்ட்டில் 5 ஸ்டார் ரேட்டிங் பெற்ற மாடல் என்பது தெரிந்ததே. அதேபோன்று, அல்டுராஸ் எஸ்யூவியும் 5 ஸ்டார் ரேட்டிங் பெற்று அசத்தியுள்ளது.

கிராஷ் டெஸ்ட்டில் 5 ஸ்டார் ரேட்டிங் பெற்ற மாடல் மஹிந்திரா அல்டுராஸ் ஜி4!

புதிய மஹிந்திரா அல்டுராஸ் எஸ்யூவியின் டாப் வேரியண்ட்டில் 9 ஏர்பேக்குகள், அதிக நிலைத்தன்மையுடன் காரை செலுத்தும் எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராம், கார் கவிழ்வதை தவிர்க்கும், ஆக்டிவ் ரோல்ஓவர் புரோடெக்ஷன், மலைச் சாலைகளில் ஏறும்போது கார் பின்னோக்கி செல்வதை தவிர்க்கும் ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் ஆகியவை உள்ளன.

கிராஷ் டெஸ்ட்டில் 5 ஸ்டார் ரேட்டிங் பெற்ற மாடல் மஹிந்திரா அல்டுராஸ் ஜி4!

மேலும், அனைத்து சக்கரங்களுக்கும் பிரேக் பவரை சரிவிகிதத்தில் செலுத்தும் இபிடி நுட்பத்துடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் இடம்பெற்றுள்ளது. ஐசோஃபிக்ஸ் சைல்டு மவுண்ட் சீட் ஆங்கர்கள், மலைச்சாலைகளில் இறங்கும்போது காரை சீராக இயக்கவும், விபத்துக்களை தவிர்க்க உதவும் ஹில் டிசென்ட் கன்ட்ரோல், எமெர்ஜென்ஸி ஸ்டாப் சிக்னல் உள்ளிட்டவை நிரந்தர பாதுகாப்பு அம்சங்களாக உள்ளன.

கிராஷ் டெஸ்ட்டில் 5 ஸ்டார் ரேட்டிங் பெற்ற மாடல் மஹிந்திரா அல்டுராஸ் ஜி4!

தவிரவும், புதிய மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 எஸ்யூவியானது அதிக உறுதி கொண்ட குவாட் ஃப்ரேம் கட்டமைப்பில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதனால், சிறந்த கட்டமைப்பு கொண்ட மாடலாகவும் கூற முடியும்.

Recommended Video

மஹிந்திரா அல்டுராஸ் ஆஃப் ரோடு டிரைவ் - முதல் அபிப்ராயம்
கிராஷ் டெஸ்ட்டில் 5 ஸ்டார் ரேட்டிங் பெற்ற மாடல் மஹிந்திரா அல்டுராஸ் ஜி4!

கொரியாவின் என்சிஏபி அமைப்பு நடத்திய கிராஷ் டெஸ்ட்டில் முன்புற மோதல் சோதனை, பக்கவாட்டு மோதல் சோதனை, உலர் மற்றும் ஈரப்பதமான சாலைகளில் பிரேக் திறன் சோதனை, பாதசாரிகளுக்கான பாதுகாப்பு, இருக்கையின் உறுதித்தன்மை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கிராஷ் டெஸ்ட்டில் 5 ஸ்டார் ரேட்டிங் பெற்ற மாடல் மஹிந்திரா அல்டுராஸ் ஜி4!

சாங்யாங் பிராண்டில் விற்பனையாகும் நான்காம் தலைமுறை ரெக்ஸ்டன் எஸ்யூவியானது இந்தியாவில் மஹிந்திரா பிராண்டில் ரீபேட்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில், கட்டமைப்பு, உதிரிபாகங்கள் போன்றவற்றில் அதிக மாறுதல் இல்லை. எனவே, இந்த சோதனைகளின் அடிப்படையில் இந்தியாவில் விற்பனையாகும் மாடலும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களை கொண்ட மாடலாக கருதப்படுகிறது.

கிராஷ் டெஸ்ட்டில் 5 ஸ்டார் ரேட்டிங் பெற்ற மாடல் மஹிந்திரா அல்டுராஸ் ஜி4!

புதிய மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 எஸ்யூவியில் 2.2 லிட்டர் 4 சிலிண்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 178 பிஎச்பி பவரையும், 420 என்எம் டார்க் திறனையும் வழங்கும். மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் 7 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

கிராஷ் டெஸ்ட்டில் 5 ஸ்டார் ரேட்டிங் பெற்ற மாடல் மஹிந்திரா அல்டுராஸ் ஜி4!

புதிய மஹிந்திரா அல்டுராஸ் எஸ்யூவியின் 2 வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட பேஸ் மாடல் ரூ.26.95 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும், ஜி4 என்ற 4 வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட டாப் வேரியண்ட் மாடல் ரூ.29.95 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு இருக்கிறது.

Most Read Articles
மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Mahindra Alturas G4 Global NCAP & K-NCAP Crash Test Results Revealed — Gets A Five-Star Rating. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X