இந்தியாவே ஆவலுடன் எதிர்பார்த்த மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 லான்ச் ஆனது.. பார்ச்சூனருக்கு கடும் சவால்

இந்தியாவில் உள்ள வாடிக்கையாளர்கள் மத்தியில் உச்சகட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 எஸ்யூவி கார் இன்று (நவ.24) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

இந்தியாவில் உள்ள வாடிக்கையாளர்கள் மத்தியில் உச்சகட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 எஸ்யூவி கார் இன்று (நவ.24) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. பார்ச்சூனர் உள்ளிட்ட கார்களுக்கு கடும் சவால் அளிக்க களமிறங்கியுள்ள இதன் விலை, சிறப்பம்சங்கள் உள்ளிட்ட கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவே ஆவலுடன் எதிர்பார்த்த மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 லான்ச் ஆனது.. பார்ச்சூனருக்கு கடும் சவால்

தென் கொரிய நாட்டை சேர்ந்த பிரபலமான கார் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்று சாங்யாங். இந்தியாவை சேர்ந்த மஹிந்திரா குழுமம்தான், சாங்யாங் நிறுவனத்தை நிர்வகித்து கொண்டுள்ளது. அதாவது சாங்யாங் என்பது மஹிந்திராவின் துணை நிறுவனங்களில் ஒன்றாகும்.

இந்தியாவே ஆவலுடன் எதிர்பார்த்த மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 லான்ச் ஆனது.. பார்ச்சூனருக்கு கடும் சவால்

சாங்யாங் நிறுவனத்தின் முதன்மையான மாடல்களில் ஒன்றான ரெக்ஸ்டன் ஜி4 எஸ்யூவி கார் ஒரு சில வெளிநாடுகளில் தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அங்கு ரெக்ஸ்டன் ஜி4 எஸ்யூவி காரின் விற்பனை அமோகமாக நடைபெற்று கொண்டுள்ளது.

இந்தியாவே ஆவலுடன் எதிர்பார்த்த மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 லான்ச் ஆனது.. பார்ச்சூனருக்கு கடும் சவால்

எனவே ரெக்ஸ்டன் ஜி4 எஸ்யூவி காரை, இந்தியாவிலும் விற்பனைக்கு கொண்டு வர மஹிந்திரா நிறுவனம் முடிவு செய்தது. இதுகுறித்த அறிவிப்புகள் வெளியானதுதான் தாமதம், இந்தியா முழுவதும் உள்ள வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் ஆர்வம் தொற்றி கொண்டது.

இந்தியாவே ஆவலுடன் எதிர்பார்த்த மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 லான்ச் ஆனது.. பார்ச்சூனருக்கு கடும் சவால்

இதன்பின் இதுகுறித்த அறிவிப்புகள் ஒன்றன் பின் ஒன்றாக வெளியாகி கொண்டே வந்தன. இறுதியில் வெளிநாடுகளில் விற்பனை செய்யப்பட்டு வரும் சாங்யாங் ரெக்ஸ்டன் ஜி4 எஸ்யூவி கார், இந்தியாவில் மஹிந்திரா பிராண்டின் கீழ், அல்டுராஸ் ஜி4 என்ற பெயரில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

இந்தியாவே ஆவலுடன் எதிர்பார்த்த மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 லான்ச் ஆனது.. பார்ச்சூனருக்கு கடும் சவால்

எனவே இந்தியா முழுவதும் உள்ள வாடிக்கையாளர்கள், மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 எஸ்யூவி காரை பெரும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருந்தனர். அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 எஸ்யூவி கார், இந்தியாவில் இன்று (நவ.24) அறிமுகம் செய்யப்பட்டது.

இந்தியாவே ஆவலுடன் எதிர்பார்த்த மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 லான்ச் ஆனது.. பார்ச்சூனருக்கு கடும் சவால்

விலை

மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 எஸ்யூவி கார், 26.95 லட்சம் (எக்ஸ் ஷோரூம், டெல்லி) என்ற ஆரம்ப விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்யூவி 500 காருக்கு மேலாக அல்டுராஸ் ஜி4 எஸ்யூவி நிலை நிறுத்தப்படுகிறது.

இந்தியாவே ஆவலுடன் எதிர்பார்த்த மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 லான்ச் ஆனது.. பார்ச்சூனருக்கு கடும் சவால்

வேரியண்ட்கள்

மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 எஸ்யூவி காரானது, 2 வீல் டிரைவ் ஆட்டோமெட்டிக் (2WD AT) மற்றும் 4 வீல் டிரைவ் ஆட்டோமெட்டிக் (4WD AT) என்ற 2 வேரியண்ட்களில் கிடைக்கிறது. மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 எஸ்யூவி காரின் டாப் எண்ட் வேரியன்ட்டினுடைய விலை 29.95 லட்சம் (எக்ஸ் ஷோரூம், டெல்லி).

இந்தியாவே ஆவலுடன் எதிர்பார்த்த மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 லான்ச் ஆனது.. பார்ச்சூனருக்கு கடும் சவால்

டிசைன்

நான்காம் தலைமுறை சாங்யாங் ரெக்ஸ்டன் எஸ்யூவி காரை அடிப்படையாக கொண்டதுதான் மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 எஸ்யூவி. மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 எஸ்யூவி காரானது, மிகவும் கம்பீரமான வகையில் டிசைன் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவே ஆவலுடன் எதிர்பார்த்த மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 லான்ச் ஆனது.. பார்ச்சூனருக்கு கடும் சவால்

முன்பகுதி

இந்த காரின் முன்பகுதியில் மஹிந்திரா நிறுவனத்திற்கே உரித்தான க்ரில் பொருத்தப்பட்டுள்ளது. இதில், செங்குத்தான க்ரோம் ஸ்லாட்கள் இடம்பெற்றுள்ளன. அதன் நடுவில் மஹிந்திரா நிறுவனத்தினுடைய லோகோ வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவே ஆவலுடன் எதிர்பார்த்த மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 லான்ச் ஆனது.. பார்ச்சூனருக்கு கடும் சவால்

இதுதவிர எல்இடி டிஆர்எல்கள் உடனான ஹெச்ஐடி ஹெட்லேம்ப்ஸ் (High Intensity Discharge Headlamps), எல்இடி பனி விளக்குகள், கார்னரிங் லைட்ஸ் ஆகியவையும் மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 எஸ்யூவி காரில் இடம்பெற்றுள்ளன.

இந்தியாவே ஆவலுடன் எதிர்பார்த்த மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 லான்ச் ஆனது.. பார்ச்சூனருக்கு கடும் சவால்

மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 காரின் முன்பகுதியில் ஏராளமான க்ரோம் வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முன்பகுதி க்ரில்லுக்கு மேலாக க்ரோம் ஸ்ட்ரிப் (Chrome Strip) ஒன்று இடம்பெற்றிருப்பதும், முன்பகுதி பம்பருக்கு மேலாக மெல்லிய க்ரோம் ஸ்ட்ரிப் ஒன்று வழங்கப்பட்டிருப்பதும் அதற்கு எடுத்துக்காட்டு.

இந்தியாவே ஆவலுடன் எதிர்பார்த்த மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 லான்ச் ஆனது.. பார்ச்சூனருக்கு கடும் சவால்

பக்கவாட்டு டிசைன்

மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 எஸ்யூவி காரின் பக்கவாட்டு டிசைனும் அமர்க்களப்படுத்துகிறது. இதன் பெரிய விண்டோக்களை சுற்றிலும் க்ரோம் ஸ்ட்ரிப் இடம்பெற்றுள்ளது. இதன் டோர் ஹேண்டில்கள் பாடியின் நிறத்திலேயே வழங்கப்பட்டுள்ளன. அதற்கு சற்று மேலாக க்ரீஸ் லைன் வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவே ஆவலுடன் எதிர்பார்த்த மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 லான்ச் ஆனது.. பார்ச்சூனருக்கு கடும் சவால்

இதில், பெரிய 18 இன்ச் டைமண்ட் கட் அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன. மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 எஸ்யூவி கார், பின்பகுதியிலும் ஏராளமான க்ரோம் அசென்ட்களை பெற்றுள்ளது. அத்துடன் எல்இடி டெயில் லைட்களும் வழங்கப்பட்டுள்ளன. பூட் லிட்டின் கீழ் பகுதியில் 'அல்டுராஸ் ஜி4' பேட்ஜ் வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவே ஆவலுடன் எதிர்பார்த்த மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 லான்ச் ஆனது.. பார்ச்சூனருக்கு கடும் சவால்

உட்புறம்

இனி இன்டீரியர்களுக்கு செல்வோம். மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 எஸ்யூவி காரின் இன்டீரியர் ப்ரீமியம் லுக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொடுவதற்கு மென்மையான 'சாப்ட் டச்' மெட்டீரியல்கள்தான் இன்டீரியரில் பொருத்தப்பட்டுள்ளன.

இந்தியாவே ஆவலுடன் எதிர்பார்த்த மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 லான்ச் ஆனது.. பார்ச்சூனருக்கு கடும் சவால்

இதன் ட்யூயல் டோன் கேபினில், உயர்தரமான நப்பா லெதர் இருக்கைகள் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் சென்டர் கன்சோல், மல்டி ஃபங்ஷன் ஸ்டியரிங் வீல் ஆகியவையும் இடம்பெற்றுள்ளன. ஒட்டுமொத்தத்தில் கேபின் ப்ரீமியம் லுக்கில் இருக்கிறது.

இந்தியாவே ஆவலுடன் எதிர்பார்த்த மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 லான்ச் ஆனது.. பார்ச்சூனருக்கு கடும் சவால்

இதுதவிர 8 இன்ச் டச் ஸ்க்ரீன் இன்போடெயின்மென்ட் சிஸ்டமும் வழங்கப்பட்டுள்ளது. ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ ஆகியவை சப்போர்ட் ஆகும். அத்துடன் நடுவில் LCD MID உடன் ட்யூயல்-போட் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டரும் இடம்பெற்றுள்ளது.

இந்தியாவே ஆவலுடன் எதிர்பார்த்த மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 லான்ச் ஆனது.. பார்ச்சூனருக்கு கடும் சவால்

எலெக்ட்ரிக்கல் முறையில் 8 விதங்களில் அட்ஜஸ்ட் செய்து கொள்ளும்படியான டிரைவர் இருக்கை, எலெக்ட்ரிக் சன் ரூஃப், இலுமினேட்டட் க்ளவ் பாக்ஸ், மழை வந்தால் தானாகவே இயங்கும் வைப்பர்கள் ஆகியவையும் குறிப்பிடத்தகுந்த வகையிலான இதர முக்கிய அம்சங்கள் ஆகும்.

Recommended Video

மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 காரின் ரிவியூ மற்றும் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்
இந்தியாவே ஆவலுடன் எதிர்பார்த்த மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 லான்ச் ஆனது.. பார்ச்சூனருக்கு கடும் சவால்

மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 எஸ்யூவி காரினுடைய கேபினின் அனைத்து வரிசைகளிலும் எல்இடி லேம்ப்ஸ் பொருத்தப்பட்டுள்ளன. இந்த காரில், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் இடம்பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தியாவே ஆவலுடன் எதிர்பார்த்த மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 லான்ச் ஆனது.. பார்ச்சூனருக்கு கடும் சவால்

மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 எஸ்யூவி கார், 7 சீட்டர் மாடலில் விற்பனைக்கு வந்துள்ளது. இதன் பூட் போதுமான இடவசதியுடன் விசாலமாகதான் வழங்கப்பட்டுள்ளது. என்றாலும் மத்திய மற்றும் மூன்றாவது வரிசை இருக்கைகளை மடித்து வைத்து கொள்வதன் மூலமாக இதனை இன்னும் அதிகமாக்க முடியும்.

இந்தியாவே ஆவலுடன் எதிர்பார்த்த மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 லான்ச் ஆனது.. பார்ச்சூனருக்கு கடும் சவால்

இதன் 3வது வரிசை இருக்கையானது 50:50 என்ற வீதத்தில் பிரிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் மத்திய வரிசை இருக்கை, 60:40 என்கிற ரீதியில் பிரிக்கப்பட்டுள்ளது. இவ்வளவு சௌகரியங்கள் நிறைந்த மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 எஸ்யூவி காரில், பாதுகாப்பு அம்சங்களுக்கும் பஞ்சமில்லை.

இந்தியாவே ஆவலுடன் எதிர்பார்த்த மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 லான்ச் ஆனது.. பார்ச்சூனருக்கு கடும் சவால்

பாதுகாப்பு அம்சங்கள்

மொத்தம் 9 ஏர் பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், ஆன்டி ரோல் ப்ரொடெக்ஸன், இபிடி உடனான ஏபிஎஸ், பிரேக் அஸிஸ்ட், ஹில் டெசன்ட் கண்ட்ரோல், ஐசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் ஆகிய பாதுகாப்பு அம்சங்கள் ஸ்டாண்டர்டாக வழங்கப்பட்டுள்ளன.

இந்தியாவே ஆவலுடன் எதிர்பார்த்த மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 லான்ச் ஆனது.. பார்ச்சூனருக்கு கடும் சவால்

இன்ஜின்

மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 எஸ்யூவி காரில், 2.2 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 178 பிஎச்பி பவர் மற்றும் 420 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் வல்லமை வாய்ந்தது. 7 ஸ்பீடு ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவே ஆவலுடன் எதிர்பார்த்த மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 லான்ச் ஆனது.. பார்ச்சூனருக்கு கடும் சவால்

புக்கிங்

அல்டுராஸ் ஜி4 எஸ்யூவி காரை நீங்கள் வாங்க விரும்பினால், அருகில் உள்ள மஹிந்திரா டீலர்ஷிப்களில் ரூ.50,000 முன்பணம் செலுத்தி புக்கிங் செய்து கொள்ளலாம்.

இந்தியாவே ஆவலுடன் எதிர்பார்த்த மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 லான்ச் ஆனது.. பார்ச்சூனருக்கு கடும் சவால்

கலர்கள்

புதிய பேர்ல் ஒயிட், நபோலி ப்ளாக், லேக் சைடு ப்ரவுண், சில்வர் மற்றும் ரீகல் ப்ளூ ஆகிய 5 வண்ணங்களில் மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 எஸ்யூவி கார் விற்பனை செய்யப்படவுள்ளது.

இந்தியாவே ஆவலுடன் எதிர்பார்த்த மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 லான்ச் ஆனது.. பார்ச்சூனருக்கு கடும் சவால்
இந்தியாவே ஆவலுடன் எதிர்பார்த்த மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 லான்ச் ஆனது.. பார்ச்சூனருக்கு கடும் சவால்

யாருக்கு சவால்?

இந்திய கார் உற்பத்தியாளர் ஒருவரிடம் இருந்து வெளிவந்துள்ள மிகவும் ப்ரீமியமான எஸ்யூவி காராக அல்டுராஸ் ஜி4 எஸ்யூவி கருதப்படுகிறது. நாடு முழுவதும் உள்ள மஹிந்திராவின் ‘World Of SUV' டீலர்ஷிப்கள் மூலமாக அல்டுராஸ் ஜி4 எஸ்யூவி விற்பனை செய்யப்படவுள்ளது.

இந்தியாவே ஆவலுடன் எதிர்பார்த்த மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 லான்ச் ஆனது.. பார்ச்சூனருக்கு கடும் சவால்

டொயோட்டா பார்ச்சூனர், ஃபோர்டு என்டேவர், ஸ்கோடா கோடியாக் மற்றும் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஹோண்டா சிஆர்-வி உள்ளிட்ட கார்களுக்கு மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 எஸ்யூவி கடும் சவால் அளிக்க காத்திருக்கிறது.

Most Read Articles
மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Mahindra Alturas g4 Launched In India: Launch Price Rs.26.95 Lakh. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X