மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 எஸ்யூவி வெற்றி பெறுவதற்கான வழி இதுதான்!

டொயோட்டா ஃபார்ச்சூனர் மற்றும் ஃபோர்டு எண்டெவர் ஆகிய ஜாம்பவான் பிரிமீயம் எஸ்யூவி மாடல்கள் கோட்டை கட்டி கோலோய்ச்சி வரும், சந்தையில் புத்தம் புதிய மாடலாக மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 எஸ்யூவி வரும் 24ந் தேதி களமிறங்குகிறது. பிரிமீயம் எஸ்யூவி மார்க்கெட்டில் சந்தைப் போட்டியை அதிகப்படுத்த மிக சிறப்பான மாடலை களமிறக்க, மஹிந்திரா எடுத்துள்ள முயற்சி பாராட்டுக்குரிய விஷயம்.

மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 எஸ்யூவி வெற்றி பெறுவதற்கான ஒரே வழி!

டொயோட்டா ஃபார்ச்சூனர், ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவி மாடல்களை போன்று பிரம்மாண்டமாக இருக்கிறது. ஆனால், முரட்டுத் தோற்றமாக இல்லாமல், இது சொகுசு எஸ்யூவி கார்களை போன்ற சாஃப்ட் ரோடர் எஸ்யூவி மாடல் போன்று மிக மென்மையான தோற்றத்துடன் பிரிமீயமாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இது நிச்சயமாக குறிப்பிட்ட எதிர்பார்ப்புடைய வாடிக்கையாளரை கண்டிப்பாக கவரும்.

மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 எஸ்யூவி வெற்றி பெறுவதற்கான ஒரே வழி!

போட்டியாளர்களை ஒப்பிடும்போது இன்டீரியரும் சிறப்பாக இருக்கிிறது. டொயோட்டா ஃபார்ச்சூனர், ஃபோர்டு எண்டெவர், ஹோண்டா சிஆர்வி மற்றும் இசுஸு எம்யூ-எக்ஸ் உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டி போடும் விதத்தில், இன்டீரியர் அமைப்பு மிக நேர்த்தியாகவும், தரமான பாகங்களுடன் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 எஸ்யூவி வெற்றி பெறுவதற்கான ஒரே வழி!

வசதிகளுக்கும் இந்த எஸ்யூவியில் பஞ்சமில்லை. டாப் வேரியண்ட்டில் முப்பரிமாண கோண கேமரா, டியூவல் ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல், எலெக்ட்ரிக் சன்ரூஃப், நப்பா லெதர் இருக்கைகள், 6 ஸ்பீக்கர்கள் கொண்ட ஆடியோ சிஸ்டம் போன்றவை முக்கிய அம்சங்களாக இருக்கின்றன. இந்த காரில் இருக்கைகளை விரும்பும் வகையில் மெமரி செய்து வைப்பதற்கான வசதியும் உள்ளது.

மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 எஸ்யூவி வெற்றி பெறுவதற்கான ஒரே வழி!

எச்ஐடி லோ பீம் ஹெட்லைட், எல்இடி பனி விளக்குகள், ஆட்டோமேட்டிக் வைப்பர்கள், இலுமினேட்டட் விளக்குகளுடன் கூடிய கைப்பிடிகள், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், பார்க்கிங் அசிஸ்ட், 9 ஏர்பேக்குகள், ஹில் டிசென்ட் கன்ட்ரோல் என வசதிகளின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 எஸ்யூவி வெற்றி பெறுவதற்கான ஒரே வழி!

இந்த எஸ்யூவியில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் 2.2 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் எஞ்சின் போட்டியாளர்களுக்கு நிச்சயம் இணையாக இருப்பதால் வாடிக்கையாளர்களை சமரசம் செய்யும். இந்த எஞ்சின் 178 பிஎச்பி பவரையும், 420 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். யூரோ-6 மாசு தர உமிழ்வுக்கு இணையானது. மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் 7 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. 2 வீல் டிரைவ் மற்றும் 4 வீல் டிரைவ் சிஸ்டம் ஆப்ஷனிலும் கிடைக்கிறது. ஆகையால், இந்த விஷயத்திலும் வாடிக்கையாளர்களை சமரசம் செய்துவிடும்.

டொயோட்டா ஃபார்ச்சூனர்

டொயோட்டா ஃபார்ச்சூனர்

நீடித்த உழைப்பு, குறைவான பராமரிப்பு, நம்பகத்தன்மை ஆகியவற்றில் டொயோட்டா ஃபார்ச்சூனர் இந்தியர்களின் நம்பிக்கையை பெற்றிருக்கிறது. கடந்த 2016ம் ஆண்டு புதிய தலைமுறை மாடல் அறிமுகம் செய்யப்ப்பட்டபோது, பண மதிப்பு இழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டபோது, நாடே பண புழக்கமின்றி அல்லோகல்லப்பட்டது.

Recommended Video

புதிய ஹீரோ டெஸ்ட்டினி 125 ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!
மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 எஸ்யூவி வெற்றி பெறுவதற்கான ஒரே வழி!

ஆனால், அந்த இக்கட்டான நிலையிலும், முதல் 2 மாதங்களில் 10,000 முன்பதிவுகளை பெற்று ஆச்சரியப்படுத்திய மாடல். அந்த அளவுக்கு நம்பகத்தன்மையை பெற்றிருக்கிறது. ஆன்ரோடு, ஆஃப்ரோடு இரண்டிலும் கில்லியான மாடல். பெட்ரோல், டீசல் மாடல்களிலும் தேர்வு இருப்பது பலம்.

ஃபோர்டு எண்டெவர்

ஃபோர்டு எண்டெவர்

டொயோட்டா ஃபார்ச்சூனருக்கு இணையான சிறந்த சாய்ஸாக அடுத்து கருதப்படுவது ஃபோர்டு எண்டெவர். இந்த மாடலும் ஆன்ரோடு, ஆஃப்ரோடு என இரண்டிலும் சவால் சளைக்காத மாடல். சக்திவாய்ந்த 2 டீசல் எஞ்சின் ஆப்ஷன்களுடன், தனித்துவமான தோற்றம், கஸ்டமைஸ் செய்ய விரும்புவோருக்கு சரியான ஃபுல் சைஸ் எஸ்யூவி மாடலாக வலம் வருகிறது.

மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 எஸ்யூவி வெற்றி பெறுவதற்கான ஒரே வழி!

ஜாம்பவான் போட்டியாளர்களை கடந்து மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 எஸ்யூவியை தேர்வு செய்வதற்கு விலை நிர்ணயம்தான் முக்கிய கருவியாக இருக்கப்போகிறது. டொயோட்டா ஃபார்ச்சூனர் பேஸ் மாடல் ரூ.27.30 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும், ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவியின் பேஸ் மாடல் ரூ.26.30 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும் கிடைக்கிறது.

மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 எஸ்யூவி வெற்றி பெறுவதற்கான ஒரே வழி!

இந்த இரண்டு மாடல்களையும் கடந்து மூன்றாவது சாய்ஸ் மாடலை தேடுவோர் வெகு குறைவு. அந்த மூன்றாவது சாய்ஸில் இசுஸு எம்யூ-எக்ஸ், சற்று அதிக விலையில் ஹோண்டா சிஆர்-வி மற்றும் மிட்சுபிஷி அவுட்லேண்டர், ஸ்கோடா கோடியாக் உள்ளிட்ட மாடல்கள் போட்டிபோடுகின்றன. இந்தநிலையில், டொயோட்டா ஃபார்ச்சூனர் மற்றும் ஃபோர்டு எண்டெவர் வாடிக்கையாளர்களை சமரசம் செய்து மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 எஸ்யூவியை வாங்குவதற்கு காரணங்கள் சில மட்டுமே.

மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 எஸ்யூவி வெற்றி பெறுவதற்கான வழி!

இந்த நிலையில், மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 எஸ்யூவியின் பேஸ் மாடல் ரூ.20 லட்சம் என்ற சவாலான ஆரம்ப விலையில் வந்தால், நிச்சயம் ஜாம்பவான்களை ஒரு கை பார்க்க முடியும். நிச்சயம் டொயோட்டா ஃபார்ச்சூனர் மற்றும் ஃபோர்டு எண்டெவர் பக்கம் செல்பவர்களின் கவனத்தை தன் பக்கம் மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 எஸ்யூவி நிச்சயம் கவர்ந்திழுக்க வாய்ப்புண்டு. பெருமதிப்பு உடைய மாடலாக இருக்கும்.

மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 எஸ்யூவி வெற்றி பெறுவதற்கான ஒரே வழி!

சரி, புதிய மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 எஸ்யூவி எந்த விலையில் வரும் என்று நினைக்கிறீர்கள்? கருத்துப்பெட்டியில் உங்களது விலை கணிப்பை பதிவு செய்யலாம்.

அதற்கு முன்பாக, மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 எஸ்யூவியை ஓட்டி பார்த்து சோதித்ததில் கிடைத்த அனுபவத்தை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 எஸ்யூவியின் வீடியோ ரிவியூவை இங்கே காணலாம்.

Most Read Articles
மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
How much do you think the Mahindra Alturas should be priced at? Share your thoughts here.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X