மஹிந்திரா பொலிரோ எஸ்யூவியின் 'மில்லியன்' சாதனை... வெற்றி ரகசியம்!!

Written By:

மஹிந்திரா பொலிரோ எஸ்யூவி விற்பனையில் ஒரு மில்லியன் என்ற புதிய மைல்கல்லை கடந்து சாதனை படைத்துள்ளது.

 மஹிந்திரா பொலிரோ எஸ்யூவியின் 'மில்லியன்' சாதனை...!!

விற்பனை ஓஹோ...

இந்திய எஸ்யூவி மார்க்கெட்டில் மஹிந்திரா பொலிரோ எஸ்யூவி மிகச் சிறந்த தேர்வாக இருக்கிறது. 2000ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட மஹிந்திரா பொலிரோ, விற்பனையில் கலக்கியது. விற்பனையில் இந்தியாவின் டாப்- 10 லிஸ்ட்டிலும் இடம்பிடித்து தொடர்ந்து அசத்தி வந்தது.

 மஹிந்திரா பொலிரோ எஸ்யூவியின் 'மில்லியன்' சாதனை...!!

சிறப்பம்சங்கள்

அவ்வப்போது மேம்படுத்தப்பட்ட மஹிந்திரா பொலிரோ கடைசியாக, 2016ம் ஆண்டு அதிக சிறப்பம்சங்கள் கொண்டதாக பொலிரோ ப்ளஸ் என்ற பெயரில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. புதிய எம்ஹாக் டி70 டீசல் எஞ்சினுடன் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், டிரைவர் இன்பர்மேஷன் சிஸ்டம், வாய்ஸ் மெசெஜ் வசதி போன்றவை இந்த காரின் முக்கிய அம்சங்களாக இருந்தன.

 மஹிந்திரா பொலிரோ எஸ்யூவியின் 'மில்லியன்' சாதனை...!!

ஈடு இணை இல்லை

பல புதிய மாடல்கள் நவீன அம்சங்களுடன் தொடர்ந்து அறிமுகமாகி வந்தபோதிலும், வாடிக்கையாளர்களின் தேர்வில் தொடர்ந்து முக்கிய தேர்வாக தக்க வைத்துக் கொண்டது. இதனால், தற்போது மஹிந்திரா பொலிரோ எஸ்யூவியின் விற்பனை 10 லட்சம் யூனிட்டுகள் என்ற புதிய மைல்கல்லை தொட்டு சாதனை படைத்துள்ளது.

 மஹிந்திரா பொலிரோ எஸ்யூவியின் 'மில்லியன்' சாதனை...!!

வலிமையான கட்டமைப்பு

மஹிந்திரா பொலிரோ எஸ்யூவியின் கட்டமைப்பு மிக வலுவானதாக இருப்பது வாடிக்கையாளர்களை கவர்ந்த விஷயம். மிக மோசமான பயன்பாட்டில் இருந்தாலும் நீடித்த உழைப்பை தருவது இதன் சிறப்பு. குறிப்பாக, சாலை கட்டமைப்புகள் மேம்படாத கிராமப்புறங்கள் மற்றும் மலைப்பகுதிகளில் மஹிந்திரா பொலிரோ சிறப்பான சாய்ஸாக இருக்கிறது.

 மஹிந்திரா பொலிரோ எஸ்யூவியின் 'மில்லியன்' சாதனை...!!

உறுதியான சஸ்பென்ஷன்

இமயமலை பயணமாகட்டும், நீண்ட தூர சுற்றுலாவாகட்டும், தினசரி பயன்பாடாகட்டும், மஹிந்திரா பொலிரோ ஓர் சிறந்த தேர்வு. இந்த எஸ்யூவியில் லேடர் ஃப்ரேம் சேஸீ அமைப்பும், பின்புறத்தில் லீஃப் ஸ்பிரிங் சஸ்பென்ஷன் இருப்பது எந்த சாலை நிலைகளையும் எளிதாக எதிர்கொள்வதோடு, அதிக பாரத்தை அனாயசயமாக சுமப்பதிலும் கில்லி.

 மஹிந்திரா பொலிரோ எஸ்யூவியின் 'மில்லியன்' சாதனை...!!

இடவசதி

மஹிந்திரா பொலிரோ எஸ்யூவியில் 7 பேர் செல்வதற்கான இருக்கை வசதி இருக்கிறது. மேலும், உள்ள அமர்ந்து பயணிக்கும்போது நெருக்கடியான உணர்வு இருக்காது. பின்புறம் உள்ள ஜம்ப் இருக்கைகளை மடக்கி விட்டு உடைமைகளை தாராளமாக வைத்து எடுத்துச் செல்லலாம்.

 மஹிந்திரா பொலிரோ எஸ்யூவியின் 'மில்லியன்' சாதனை...!!

பராமரிப்பு குறைவு

மஹிந்திரா பொலிரோ எஸ்யூவியின் பராமரிப்பு செலவு எல்லோருக்கும் கட்டுப்படியாகும் அளவில் இருப்பதும், பல மாடர்ன் எஸ்யூவி மாடல்கள் வந்தாலும் பொலிரோ மீதான ஈர்ப்பு குறையவில்லை. ஊரக மெக்கானிக் ஷாப்புகளிலேயே எளிதாக பழுது நீக்கும் வாய்ப்பும் இருக்கிறது.

 மஹிந்திரா பொலிரோ எஸ்யூவியின் 'மில்லியன்' சாதனை...!!

இனிய பயணங்கள்

கரடுமுரடான சாலைகள் கொண்ட பகுதிகள் மட்டுமின்றி, நீண்ட தூர பயணங்களுக்கும் மிகச் சிறப்பான மாடலாக இருக்கிறது. மேலும், இந்த எஸ்யூவியின் டீசல் எஞ்சின் அதிக எரிபொருள் சிக்கனத்தை வழங்குவதையும் வாடிக்கையாளர்கள் கணக்கில் எடுத்து தேர்வு செய்கின்றனர்.

 மஹிந்திரா பொலிரோ எஸ்யூவியின் 'மில்லியன்' சாதனை...!!

நீடித்த உழைப்பு

மஹிந்திரா பொலிரோ நீடித்த உழைப்பை தருகிறது. பழுதுகள் அடிக்கடி ஏற்படும் வாய்ப்புகள் குறைவாக இருப்பதால் நம்பகமான மாடலாகவும் மாறி இருக்கிறது. ரஃப் யூஸ் என்று சொல்வார்களே, அப்படி மோசமாக பயன்பாட்டில் கூட தாங்கி நிற்கும் கட்டமைப்பை பெற்றிருக்கிறது.

 மஹிந்திரா பொலிரோ எஸ்யூவியின் 'மில்லியன்' சாதனை...!!

தோதான விலை

மஹிந்திரா பொலிரோ எஸ்யூவி அனைத்து தரப்பினருக்கும் பயன்பாட்டிற்கு ஏற்றதாக இருப்பதுடன், ரூ.7.18 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது. இதன் போட்டியாளர்களைவிட விலை குறைவான 7 சீட்டர் மாடல். அத்துடன், மறுவிற்பனை மதிப்பையும் தொடர்ந்து தக்க வைத்து வருகிறது.

மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Mahindra Bolero crosses 10 lakh cumulative sales milestone.
Story first published: Wednesday, April 11, 2018, 15:56 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark