மஹிந்திரா கேயூவி100 எஸ்யூவியின் மின்சார மாடல் அறிமுகம்!

Written By:

கிரேட்டர் நொய்டாவில் நடந்து வரும் ஆட்டோ எக்ஸ்போவில் மஹிந்திரா கேயூவி100 எஸ்யூவியின் மின்சார மாடல் பொது பார்வைக்கு வந்துள்ளது. இந்த புதிய மின்சார கார் குறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

மஹிந்திரா கேயூவி100 மின்சார மாடல் அறிமுகம்!

அடுத்து இரண்டு ஆண்டுகளில் பல புதிய மின்சார கார் மாடல்களை விற்பனைக்கு கொண்டு வருவதற்கு மஹிந்திரா நிறுவனம் முடிவு செய்திருக்கிறது. இதற்கு முன்னோட்டமாக கிரேட்டர் நொய்டாவில் நடந்து வரும் சர்வதேச ஆட்டோ எக்ஸ்போவை சிறந்த தளமாக பயன்படுத்த முனைந்துள்ளது.

மஹிந்திரா கேயூவி100 மின்சார மாடல் அறிமுகம்!

இதற்காக, தனது பட்ஜெட் எஸ்யூவி மாடலான கேயூவி100 காரின் மின்சார மாடலை டெல்லி எக்ஸ்போவில் காட்சிக்கு நிறுத்தி இருக்கிறது மஹிந்திரா. இந்த புதிய மின்சார மாடல் eKUV100 என்ற பெயரில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

மஹிந்திரா கேயூவி100 மின்சார மாடல் அறிமுகம்!

புதிய மஹிந்திரா இ-கேயூவி100 மின்சார எஸ்யூவி பல்வேறு தொழில்நுட்ப வசதிகளை பெற்றிருக்கிறது. ஸ்மார்ட்போன் இணைப்பு வசதிகள், வெளியில் இருந்தே ஏசியை ஆன் செய்யவும், ஆஃப் செய்யவும் கூடிய ரிமோட் வசதி உள்ளது.

மஹிந்திரா கேயூவி100 மின்சார மாடல் அறிமுகம்!

இன்டர்நெட் தொடர்பு வசதி மூலமாக தொலைதூரத்தில் இருந்து காரில் இருக்கும் பழுதுகளை கண்டறியும் வசதி, கார் இருப்பிடத்தை நிகழ்நேரத்தில் துல்லியமாக கண்டறியும் ஜிபிஎஸ் டிராக்கர் வசதிகள் உள்ளன.

மஹிந்திரா கேயூவி100 மின்சார மாடல் அறிமுகம்!

ஓட்டும் முறையை வைத்து பேட்டரியில் சார்ஜ் நிலை குறித்த தகவல், 30kW மின் மோட்டார், இ-வெரிட்டோ காரில் பயன்படுத்தப்படும் அதே லித்தியம் அயான் பேட்டரி பேக் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

மஹிந்திரா கேயூவி100 மின்சார மாடல் அறிமுகம்!

புதிய மஹிந்திரா இ-கேயூவி100 எஸ்யூவியின் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்யும்பட்சத்தில் அதிகபட்சமாக 140கிமீ தூரம் பயணிக்க முடியும். இதன் பேட்டரி ஒரு மணிநேரத்திற்குள் 80 சதவீதம் அளவுக்கு சார்ஜ் ஆகும் திறன் வாய்ந்தது.

மஹிந்திரா கேயூவி100 மின்சார மாடல் அறிமுகம்!

இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்தில் மஹிந்திரா நிறுவனத்தின் முதல் மின்சார எஸ்யூவி மாடலாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது. விற்பனைக்கு கொண்டு வரப்படும் நேரத்தில் மேம்படுத்தப்பட்ட மின் மோட்டார் மற்றும் பேட்டரியுடன் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் கிடைத்துள்ளன.

மஹிந்திரா கேயூவி100 மின்சார மாடல் அறிமுகம்!

பட்ஜெட் கார் மார்க்கெட்டில் மஹிந்திரா கேயூவி100 எஸ்யூவி சிறந்த தேர்வாக இருந்து வருகிறது. மின்சார கார்களுக்கான முக்கியத்துவம் அதிகரிக்கும்போது, மஹிந்திரா கேயூவி100 காரின் மின்சார மாடல் நல்ல வரவேற்பை பெறும் வாய்ப்புள்ளது.

English summary
மஹிந்திரா கேயூவி100 எஸ்யூவியின் மின்சார மாடல் கிரேட்டர் நொய்டாவில் நடந்து வரும் ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டு இருக்கிறது. இதன் சிறப்பம்சங்கள், அறிமுக விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.
Story first published: Sunday, February 11, 2018, 13:26 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark