மஹிந்திரா மராஸ்ஸோ... டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டாவின் புதிய போட்டியாளர்!!

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் மஹிந்திரா நிறுவனத்தின் புதிய எம்பிவி காருக்ககு மராஸ்ஸோ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.

By Saravana Rajan

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் மஹிந்திரா நிறுவனத்தின் புதிய எம்பிவி காருக்ககு மராஸ்ஸோ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. இந்த பெயர் இன்று நடந்த நிகழ்ச்சியில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

மஹிந்திரா மராஸ்ஸோ... டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டாவின் புதிய போட்டியாளர்!!

ஸ்பெயின் நாட்டில் பேசப்படும் பாஸ்க் மொழியில் மராஸ்ஸோ என்றால் சுறா மீன் என்று அர்த்தமாம். சுறா மீன் உடல் அமைப்பை தழுவி இந்த புதிய எம்பிவி காரை வடிவமைத்துள்ளதாகவும் மஹிந்திரா தெரிவித்துள்ளது.

மஹிந்திரா மராஸ்ஸோ... டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டாவின் புதிய போட்டியாளர்!!

இதுவரை மஹிந்திரா U321 என்ற குறியீட்டுப் பெயரில் இந்த எம்பிவி கார் அழைக்கப்பட்டு வந்தது. இந்த கார் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா மற்றும் டாடா ஹெக்ஸா கார்களை குறிவைத்து நிலைநிறுத்தப்பட இருக்கிறது.

மஹிந்திரா மராஸ்ஸோ... டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டாவின் புதிய போட்டியாளர்!!

அமெரிக்காவிலுள்ள மிக்சிகன் நகரில் செயல்பட்டு வரும் மஹிந்திரா ரிசெர்ச் வாலி தொழில்நுட்ப மையத்தில் இந்த கார் உருவாக்கப்பட்டுள்ளது. இது உலக அளவில் பல்வேறு நாடுகளில் விற்பனைக்கு செல்லும் குளோபல் கார் மாடலாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

மஹிந்திரா மராஸ்ஸோ... டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டாவின் புதிய போட்டியாளர்!!

புதிய மஹிந்திரா மராஸ்ஸோ எம்பிவி கார் 7 சீட்டர் மற்றும் 8 சீட்டர் மாடல்களில் வர இருக்கிறது. மிக சவுகரியமான இடவசதியை அளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. கடைசி வரிசை இருக்கையை 60:40 என்ற விகிதத்தில் மடக்கி விரிக்கும் வசதியை பெற்றிருக்கும்.

மஹிந்திரா மராஸ்ஸோ... டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டாவின் புதிய போட்டியாளர்!!

உட்புறத்தில் மிகச் சிறப்பான தொழில்நுட்ப அம்சங்களை பெற்றிருக்கும். குறிப்பாக, ரூஃப் ஏசி வென்ட் கொடுக்கப்பட இருக்கிறது. மேலும், இதனை கார் மார்க்கெட்டின் முதல் சர்ரவுண்ட் கூலிங் சிஸ்டத்தை வழங்கும் ரூஃப் ஏசியாகவும் மஹிந்திரா தெரிவித்துளளது.

மஹிந்திரா மராஸ்ஸோ... டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டாவின் புதிய போட்டியாளர்!!

ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை சப்போர்ட் செய்யும் தொடுதிரை வசதியுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சாதனம் இடம்பெற இருக்கிறது. இந்த கார் மிகச் சிறப்பான சப்த தடுப்பு அமைப்புடன், மிக மிக சொகுசான பயண அனுபவத்தை வழங்கும் என்று மஹிந்திரா தெரிவித்துள்ளது.

மஹிந்திரா மராஸ்ஸோ... டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டாவின் புதிய போட்டியாளர்!!

தொழில்நுட்ப விபரங்கள் வெளியிடப்படவில்லை. இருப்பினும், இந்த காரில் 1.6 லிட்டர் எம்ஃபால்கன் டீசல் எஞ்சின் பொருத்தப்பட இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த எஞ்சின் 125 பிஎச்பி பவரையும், 305 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாக இருக்கும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கும். பெட்ரோல் மாடலிலும் வர இருக்கிறது.

மஹிந்திரா மராஸ்ஸோ... டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டாவின் புதிய போட்டியாளர்!!

மஹிந்திரா மராஸ்ஸோ எம்பிவி காரில் அதிக பாதுகாப்பு வசதிக்காக பல இடங்களில் ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், பிரேக் அசிஸ்ட், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா உள்ளிட்ட ஏராளமான பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெற்றிருக்கும். மோனோகாக் சேஸீயில் கட்டமைக்கப்பட்டு இருக்கிரது.

மஹிந்திரா மராஸ்ஸோ... டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டாவின் புதிய போட்டியாளர்!!

நடப்பு காலாண்டு முடிவிற்குள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி பார்த்தால் இந்த பண்டிகை காலத்தில் விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது. செப்டம்பருக்குள் விற்பனைக்கு வந்துவிடும் வாய்ப்புள்ளது. ரூ.9 லட்சம் முதல் ரூ.15 லட்சம் விலை பட்டியலில் எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Mahindra Marazzo MPV Revealed: Mahindra has officially unveiled their premium MPV offering – the Marazzo. Codenamed the U321, the MPV was spied several times on our roads, ahead of its official unveiling.
Story first published: Tuesday, July 31, 2018, 13:34 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X