மஹிந்திரா இலச்சினையோடு 2018 ஆட்டோ எக்ஸ்போவில் தரிசனம் தந்த சாங்யாங் ஜி4 ரெக்ஸ்டான் எஸ்யூவி கார்..!!

Posted By:

தென் கொரியாவின் சாங்யாங் நிறுவனம் மஹிந்திரா நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. தற்போது மஹிந்திரா இலச்சினையுடன் கூடிய ஜி4 ரெக்ஸ்டான் எஸ்யூவி காரை சாங்க்யாங் 2018 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தியுள்ளது.

ஆட்டோ எக்ஸ்போவில் தரிசனம் தந்த மஹிந்திரா ப்ரீமியம் எஸ்யூவி கார்..!!

சாங்யாங்கிற்கு சொந்தமான ஜி4 ரெக்ஸ்டான் காரை இந்திய சந்தையில் முற்றிலும் புதிய பிராண்டு பெயரில் வெளியிடப்படும் என மஹிந்திரா ஏற்கனவே தெரிவித்திருந்தது.

ஆட்டோ எக்ஸ்போவில் தரிசனம் தந்த மஹிந்திரா ப்ரீமியம் எஸ்யூவி கார்..!!

சாங்யாங் ஜி4 ரெக்ஸ்டான் கார், சர்வதேச அளவில் பிரபலமான எஸ்யூவி காராக அறியப்படுகிறது. ப்ரீமியம் தர கட்டமைப்புகளை பெற்றுள்ள இந்த கார் தோற்றம், தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றில் சிறந்த தயாரிப்பாக உள்ளது.

ஆட்டோ எக்ஸ்போவில் தரிசனம் தந்த மஹிந்திரா ப்ரீமியம் எஸ்யூவி கார்..!!

மஹிந்திராவின் இலச்சினையோடு இந்தியாவில் காட்சிப்படுத்தப்பட்ட ஜி4 ரெக்ஸ்டான் காரில் 2.2 லிட்டர் திறன் கொண்ட எஞ்சின் உள்ளது. இது 178 பிஎச்பி பவர் மற்றும் 420 என்.எம் டார்க் திறனை வெளிப்படுத்தும்.

ஆட்டோ எக்ஸ்போவில் தரிசனம் தந்த மஹிந்திரா ப்ரீமியம் எஸ்யூவி கார்..!!

7-ஸ்பீடு மெர்சிடிஸ்-பென்ஸ் ஆட்டோமேட்டிக் கியபாக்ஸை பெற்றுள்ள இந்த எஸ்யூவி கார் அசாத்திய வெளிப்புறத்தோற்றம் மற்றும் கவர்ந்திழுக்கும் உள்ளக்கட்டமைப்புகளை பெற்றுள்ளது.

Recommended Video - Watch Now!
New Maruti Swift Launch: Price; Mileage; Specifications; Features; Changes
ஆட்டோ எக்ஸ்போவில் தரிசனம் தந்த மஹிந்திரா ப்ரீமியம் எஸ்யூவி கார்..!!

காரின் உள்கட்டமைப்பில் ஜிபிஎஸ் நேவிகேஷன் பொருந்திய 8 இஞ்ச் தொடுதிரை இன்ஃபொடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. தொடர்ந்து மின்சாரத்தால் இயங்கும் சன்-ரூஃப், டூயல்-ஸோன் கிளைமேட்டிக் கண்ட்ரோல் மற்றும் காற்றை வெளியேற்றும் இருக்கை ஆகியவை உள்கட்டமைப்பில் உள்ளன.

ஆட்டோ எக்ஸ்போவில் தரிசனம் தந்த மஹிந்திரா ப்ரீமியம் எஸ்யூவி கார்..!!

ஹெ.ஐ.டி முகப்பு விளக்குகள், எல்.இ.டி பகல்நேர விளக்குகள், மின்சார பார்க்கிங் பிரேக் மற்றும் இன்னும் பிற தொழில்நுட்ப அம்சங்கள் சாங்யாங் ஜி4 ரெக்ஸ்டான் எஸ்யூவி காரில் கட்டமைக்கப்பட்டுள்ளன.

ஆட்டோ எக்ஸ்போவில் தரிசனம் தந்த மஹிந்திரா ப்ரீமியம் எஸ்யூவி கார்..!!

உயர் ரக லெதரால் ஆன இருக்கைகள் இந்த காரில் வழங்கப்பட்டுள்ளன. 9 ஏர்பேகுகள் உட்பட பல்வேறு பாதுகாப்பு அம்சங்களும் இந்த காரில் இடம்பெற்றுள்ளன.

ஆட்டோ எக்ஸ்போவில் தரிசனம் தந்த மஹிந்திரா ப்ரீமியம் எஸ்யூவி கார்..!!

2018 ஆட்டோ எக்ஸ்போவில் மஹிந்திரா இலச்சினை உடன் சாங்யாங் ஜி4 ரெக்ஸ்டான் எஸ்யூவி கார் காட்சிப்படுத்தப்பட்டது. ஜி4 ரெக்ஸ்டான் மஹிந்திராவின் ப்ரீமியம் தர எஸ்யூவி-யாக தற்போது மாறிவிட்டது.

ஆட்டோ எக்ஸ்போவில் தரிசனம் தந்த மஹிந்திரா ப்ரீமியம் எஸ்யூவி கார்..!!

விரைவில் புதிய பெயரில் இந்திய சந்தையில் விற்பனைக்கு வரவுள்ள இந்த கார், கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு அம்சங்களுடம் பல எஸ்யூவி கார்களுக்கு பெஞ்ச்மார்க்காக இருக்கும் என்பது மட்டும் உறுதி

English summary
Read in Tamil: Mahindra Badged G4 Rexton Showcased - Specifications & Images. Click for Details...

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark