மஹிந்திரா ஸ்டிங்கர் கன்வெர்ட்டிபிள் எஸ்யூவி கான்செப்ட்: முன்னோட்டத் தகவல்கள்!

Written By:

மஹிந்திரா நிறுவனத்தின் புதிய கன்வெர்ட்டிபிள் ரக எஸ்யூவி மாடல் சர்வதேச ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட இருக்கிறது. பெரும் ஆவலைத் தூண்டி இருக்கும் இந்த புதிய மாடல் குறித்த முன்னோட்டத் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

மஹிந்திரா ஸ்டிங்கர் கன்வெர்ட்டிபிள் எஸ்யூவி கான்செப்ட்: முன்னோட்டத் தகவல்கள்!

இந்த சூழலில், திறந்து மூடும் கூரை அமைப்புடைய புதிய கன்வெர்ட்டிபிள் ரக எஸ்யூவியின் கான்செப்ட் மாடலை ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்த மஹிந்திரா திட்டமிட்டுள்ளது.

கார் பிரியர்களின் ஆவலைத் தூண்டும் விதத்தில் இந்த புதிய எஸ்யூவியின் டீசரையும் வெளியிட்டு இருக்கிறது.

மஹிந்திரா ஸ்டிங்கர் கன்வெர்ட்டிபிள் எஸ்யூவி கான்செப்ட்: முன்னோட்டத் தகவல்கள்!

மஹிந்திரா ஸ்டிங்கர் என்ற பெயரில் இந்த புதிய எஸ்யூவி குறிப்பிடப்படுகிறது. மேலும், இந்திய நிறுவனத்தால் தயாரிக்கப்படும் முதல் கன்வெர்ட்டிபிள் ரக எஸ்யூவி என்பதுடன், இந்தியாவின் முதல் கன்வெர்ட்டிபிள் ரக எஸ்யூவியாகவும் இருப்பதால், இந்த மாடலைக் காண பத்திரிக்கையாளர்களும், பார்வையாளர்களும் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

மஹிந்திரா ஸ்டிங்கர் கன்வெர்ட்டிபிள் எஸ்யூவி கான்செப்ட்: முன்னோட்டத் தகவல்கள்!

இந்த புதிய கன்வெர்ட்டிபிள் எஸ்யூவி மஹிந்திரா டியூவி300 மாடலின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இது 4 மீட்டர் மட்டுமே நீளம் கொண்டதாக இருக்கிறது.

மஹிந்திரா ஸ்டிங்கர் கன்வெர்ட்டிபிள் எஸ்யூவி கான்செப்ட்: முன்னோட்டத் தகவல்கள்!

புதிய மஹிந்திரா ஸ்டிங்கர் எஸ்யூவி மிக கம்பீரமான தோற்றத்துடன் மிரட்டுகிறது. காரின் பிரம்மாண்டத் தோற்றத்திற்கு தக்கவாறு, அதன் வீல் ஆர்ச்சுகளும்,சக்கரங்களும் இணையான தோற்றத்தில் மிரட்டுகின்றன.

மஹிந்திரா ஸ்டிங்கர் கன்வெர்ட்டிபிள் எஸ்யூவி கான்செப்ட்: முன்னோட்டத் தகவல்கள்!

முகப்பில் மஹிந்திரா கார்களுக்குரிய தனித்துவமான க்ரில் அமைப்பு இருப்பதுடன், மற்ற கார்களைவிட கம்பீரமாக இருக்கிறது. பின்புறமானது, சரிவான அமைப்புடன் முடியும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

மஹிந்திரா ஸ்டிங்கர் கன்வெர்ட்டிபிள் எஸ்யூவி கான்செப்ட்: முன்னோட்டத் தகவல்கள்!

இந்த எஸ்யூவியானது 3 கதவுகள் அமைப்புடைய மாடலாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. 4 பேர் செல்வதற்கான இருக்கை வசதியை பெற்றிருக்கிறது.

மஹிந்திரா ஸ்டிங்கர் கன்வெர்ட்டிபிள் எஸ்யூவி கான்செப்ட்: முன்னோட்டத் தகவல்கள்!

கடந்த 2016ம் ஆண்டு ஆட்டோ எக்ஸ்போவில் மஹிந்திரா எக்ஸ்யூவி500வின் அடிப்படையிலான ஏரோ என்ற கான்செப்ட்டை அறிமுகம் செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்த்தது மஹிந்திரா.

அதேபோன்று, இந்த ஆண்டு புதிய ஸ்டிக்கர் கன்வெர்ட்டிபிள் எஸ்யூவி எல்லோரது கவனத்தையும் ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Mahindra Stinger convertible SUV teased in the brand's latest promotional video. The concept model will be officially revealed at the Auto Expo 2018.
Story first published: Tuesday, February 6, 2018, 17:19 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark