பிரத்யேக கஸ்டமைஸ் அம்சங்களுடன் தார் வாண்டர்லஸ்ட் காரை காட்சிப்படுத்திய மஹிந்திரா..!!

Written By:

மஹிந்திரா நிறுவனம் புதிய தார் வாண்டர்லஸ்ட் எஸ்யூவி காரை 2018 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டது. தார் மாடலின் டேபிரேக் பதிப்பை விட இந்த புதிய வான்டர்லஸ்ட் மாடல் சற்று மேம்படுத்தப்பட்டுள்ளது.

மஹிந்திராவின் புதிய தார் வாண்டர்லஸ்ட் கார் வெளியீடு!

கல்விங்-ஸ்டைல் கதவுகள் இந்த காருக்கு பொருத்தப்பட்டுள்ளன். செவன்-ஸ்லாட் முன்பக்க க்ரில், விஞ்சுடன் கூடிய பம்பர், டோயிங் கொக்கிகள், காரின் முகப்பு விளக்குகள், வட்டவடிவிலான பகல்நேர விளக்குகள் மற்றும் ஃபாக் விளக்குகள் ஆகியவை எல்.இ.டி திறனில் உள்ளன. இவை அனைத்துமே மஹிந்திரா வாண்டர்லஸ்ட் காருக்கு அசத்தலாக உள்ளது.

மஹிந்திராவின் புதிய தார் வாண்டர்லஸ்ட் கார் வெளியீடு!

காற்றை உள்ளிழுக்கும் வசதியை பெற்றுள்ள இந்த காரின் பானட் பல அழகியல் வேலைப்பாடுகளை பெற்றுள்ளன, காரின் முன் மற்றும் பின் பக்கங்களில் கஸ்டம் வடிவிலான ஃப்பெண்டர்ஸ் இந்த மாடலில் உள்ளன.

மஹிந்திராவின் புதிய தார் வாண்டர்லஸ்ட் கார் வெளியீடு!

மஹிந்திரா வாண்டர்லஸ்ட் காரின் பின்பகுதியில் புதிய டெயில் விளக்குகள் கிளஸ்டர், ட்வின்-எக்ஸாஸ்ட் பைப்புகள், புதிய பம்பர் மற்றும் ஜெர்ரி கேன்ஸ் காரின் இரு பக்கங்களிலும் இடம்பெற்றுள்ளன.

Recommended Video - Watch Now!
Under-Aged Rider Begs The Policewomen To Spare Him - DriveSpark
மஹிந்திராவின் புதிய தார் வாண்டர்லஸ்ட் கார் வெளியீடு!

கஸ்டமைஸ் பண்ணப்பட்ட தார் காரின் இந்த மாடல் எலெக்ட்ரிக் ப்ளூ மேட் பூச்சை பெற்றுள்ளது. இதுபோன்ற அம்சங்கள் டேபிரேக் பதிப்பை விட இந்த புதிய எஸ்யூவி-யை தூக்கி காட்டுகிறது.

மஹிந்திராவின் புதிய தார் வாண்டர்லஸ்ட் கார் வெளியீடு!

தற்போது பயன்பாட்டில் இருக்கும் மஹிந்திராவின் வாண்டர்லஸ்ட் காரை போலவே உள்ளது. அதன்படி டூயல்-டோன் டாஷ்போடு, பீஜ் நிறத்திலான ஸ்டீயரிங் வீல் உள்ளது.

கேபின் வசதியில் நான்கு சக்கரங்கள், சன்ருஃப் மற்றும் தொடுதிரைக்கொண்ட இன்ஃபொடெயின்மென்ட் சிஸ்டம் இடம்பெற்றுள்ளன.

மஹிந்திராவின் புதிய தார் வாண்டர்லஸ்ட் கார் வெளியீடு!

2.5 லிட்டர் டர்போசார்ஜிடு டீசன் எஞ்சினை பெற்றுள்ள இந்த புதிய மஹிந்திரா வாண்டர்லஸ்ட் கார் 105 பிஎச்பி பவர் மற்றும் 247 என்.எம் டார்க் திறனை வெளிப்படுத்தும்.

5 ஸ்பீடு கியர்பாக்ஸை பெற்றுள்ள இந்த கார், 4 வீல் டிரைவ் டிஸ்டத்தில் இயங்கும். இந்த கார் கஸ்டமைஸ் பெற்ற நிறுவனம் குறித்த தகவல்களை மஹிந்திரா இன்னும் வெளியிடவில்லை.

மஹிந்திராவின் புதிய தார் வாண்டர்லஸ்ட் கார் வெளியீடு!

ஆஃப்-ரோடிங் தேவைக்காக பிரத்யேக கஸ்டமைஸ் வசதிகளுடன் மஹிந்திரா இந்த தார் வாண்டர்லஸ்ட் காரை வடிவமைத்துள்ளது. புதிய அப்டேட்டுகளை பெற்றுள்ளதன் மூலம் இந்த புதிய மாடல் டேபிரேக் எடிசனை காட்டிலும் வலிமையானதாக உள்ளது.

English summary
Read in Tamil: Mahindra Thar Wanderlust Showcased - Specifications, Features & Images. Click for Details...
Story first published: Sunday, February 11, 2018, 16:16 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark