மஹிந்திரா டியூவி ஸ்டிங்கர் கன்வெர்ட்டிபிள் எஸ்யூவி கான்செப்ட் அறிமுகம்!

Written By:

திறந்து மூடும் கூரை அமைப்புடைய புதிய எஸ்யூவி மாடலை ஆட்டோ எக்ஸ்போவில் மஹிந்திரா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

மஹிந்திரா டியூவி ஸ்டிங்கர் கன்வெர்ட்டிபிள் எஸ்யூவி கான்செப்ட் அறிமுகம்!

மஹிந்திரா டியூவி ஸ்டிங்கர் என்ற பெயரில் காட்சிக்கு வைக்கப்பட்டு இருக்கும் இந்த புதிய கான்செப்ட் எஸ்யூவி மாடல் ஆட்டோமொபைல் துறை பத்திரிக்கையாளர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. டியூவி300 காரின் அடிப்படையிலான கன்வெர்ட்டிபிள் ரக எஸ்யூவியாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

மஹிந்திரா டியூவி ஸ்டிங்கர் கன்வெர்ட்டிபிள் எஸ்யூவி கான்செப்ட் அறிமுகம்!

இந்தியாவின் முதல் கன்வெர்ட்டிபிள் ரக எஸ்யூவி மாடலாக இதனை மஹிந்திரா பெருமிதத்துடன் குறிப்பிட்டு இருக்கிறது

மஹிந்திரா டியூவி ஸ்டிங்கர் கன்வெர்ட்டிபிள் எஸ்யூவி கான்செப்ட் அறிமுகம்!

இளைய சமுதாயத்தினரை கவரும் வகையில் பல்வேறு நவீன தொழில்நுட்ப சாதனங்கள் மற்றும் டிசைன் அம்சங்களுடன் இதனை உருவாக்கி இருக்கிறது மஹிந்திரா.

மஹிந்திரா டியூவி ஸ்டிங்கர் கன்வெர்ட்டிபிள் எஸ்யூவி கான்செப்ட் அறிமுகம்!

முன்பகுதியில் மஹிந்திரா நிறுவனத்தின் பாரம்பரிய க்ரில் அமைப்பு க்ரோம் பட்டைகளுடன் மிளிர்கிறது. எல்இடி ஹெட்லைட்டுகள் கொடுக்கப்பட்டு இருப்பது கூடுதல் சிறப்பு. பம்பர் மிக வலிமையானதாக இருக்கிறது.

Recommended Video - Watch Now!
New Maruti Swift Launch: Price; Mileage; Specifications; Features; Changes
மஹிந்திரா டியூவி ஸ்டிங்கர் கன்வெர்ட்டிபிள் எஸ்யூவி கான்செப்ட் அறிமுகம்!

இந்த எஸ்யூவியின் திறந்து மூடும் கூரை அமைப்புடன் இருப்பதால், ஏ பில்லர் மிக உறுதியானதாக இருக்கிறது. விபத்தின்போது பயணிகளை காக்கும் விதத்தில் பின்புறத்தில் சி பில்லர் பகுதியானது வலிமையான பாகங்கள் இருக்கையுடன் இயைந்து நிற்கும் விதத்தில் கொடுக்கப்பட்டு இருக்கிறது. டெயில் லைட்டுகளும் மிகச் சிறப்பாகவும், பம்பர் வசீகரமாகவும் இருக்கிறது.

மஹிந்திரா டியூவி ஸ்டிங்கர் கன்வெர்ட்டிபிள் எஸ்யூவி கான்செப்ட் அறிமுகம்!

உட்புறம் மிகச் சிறப்பான இடவசதியை பெற்றிருக்கிறது. திறந்து மூடும் கூரை அமைப்புடைய மாடல் என்பதால், ஹெட்ரூம் பிரச்னை இருக்காது. இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் இதர நவீன தொழில்நுட்ப அம்சங்களும் இந்த காரின் மதிப்பை உயர்த்துகிறது.

மஹிந்திரா டியூவி ஸ்டிங்கர் கன்வெர்ட்டிபிள் எஸ்யூவி கான்செப்ட் அறிமுகம்!

மஹிந்திரா நிறுவனத்தின் வெற்றிகரமான எம்ஹாக் டீசல் எஞ்சின் இந்த எஸ்யூவியில் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 140 பிஎச்பி பவரையும், 320 என்எம் டார்க் திறனையும் வழங்கும் வல்லமை கொண்டது.

மஹிந்திரா டியூவி ஸ்டிங்கர் கன்வெர்ட்டிபிள் எஸ்யூவி கான்செப்ட் அறிமுகம்!

மஹிந்திரா டியூவி ஸ்டிங்கர் கான்செப்ட் மாடல் பார்வையாளர்களிடம் எந்தளவு வரவேற்பு பெறுகிறது என்பதை கணித்த பின்னர், இந்த காரை தயாரிப்பு நிலைக்கு மேம்படுத்துவது குறித்து மஹிந்திரா இறுதி முடிவு எடுக்கும்.

English summary
Auto Expo 2018: Mahindra TUV Stinger Concept revealed. The Mahindra TUV Stinger Concept is the drop-top version of Mahindra's TUV300 SUV and the convertible SUV will go into production if there is enough demand for it.
Story first published: Wednesday, February 7, 2018, 19:34 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark