TRENDING ON ONEINDIA
-
கூட்டணி உறுதியானதால் குஷி.. அமித்ஷா இன்று மாலை சென்னை வருகை
-
டூவீலர் உற்பத்தியாளர், டீலர், ஆர்டிஓக்கள் இணைந்து 13 ஆண்டுகளாக வாடிக்கையாளர்களிடம் மெகா மோசடி... என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்...
-
நடிகையாகும் பிரபல ஹீரோவின் மகள்: பொண்ணு ரொம்பத் தெளிவு
-
இந்த ரெண்டு ராசிக்காரங்களுக்கும் கெட்ட நேரம் ஆரம்பிச்சிடுச்சு... கொஞ்சம் கவனமா இருங்க
-
பாகிஸ்தான் இராணுவத்தை தலை பிச்சுக்க விட்ட இந்திய ஹேக்கர்கள்.!
-
தினேஷ் கார்த்திக் எதிர்காலம் முடிஞ்சு போச்சா? ரிஷப் பண்ட்டுக்கு மட்டும் தான் வாய்ப்பா?
-
இந்த ஊர்ல ஒருவரின் சராசரி வருமானமே 3.2 கோடி ரூபாய்.. எந்த ஊர் தெரியுமா..?
-
ஆலி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது
மஹிந்திரா டியூவி 300 ப்ளஸ் காரின் விலை விபரம் வெளியானது!
மஹிந்திரா டியூவி 300 ப்ளஸ் காரின் அதிகாரப்பூர்வ விலை விபரம் வெளியாகி இருக்கிறது. அதன் தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
மஹிந்திரா டியூவி 300 எஸ்யூவியின் அடிப்படையில் 9 பேர் பயணிக்கும் வசதியுடன் டியூவி 300 ப்ளஸ் கார் உருவாக்கப்பட்டது. டியூவி300 எஸ்யூவி மாடல் 7 சீட்டர் மாடலாக அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், டியூவி 300 ப்ளஸ் காரில் மூன்றாவது இருக்கை சேர்க்கப்பட்டது.
இதற்காக காரின் நீளமும் 403மிமீ அதிகரிக்கப்பட்டது. டியூவி 300 ப்ளஸ் எஸ்யூவி 4,398மிமீ நீளம் கொண்டது. ஆனால், வீல் பேஸில் மாற்றமில்லை. 2,680மிமீ வீல் பேஸ் கொண்டதாக இருக்கிறது. இதனால், உட்புறத்தில் அதிக இடவசதியும், பொருட்கள் வைப்பதற்கான கூடுதல் இடவசதியுடன் இந்த கார் உருவாக்கப்பட்டது.
அதிக நபர்கள் பயணிக்கும் வசதியுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த காரின் டெலிவிரி கடந்த ஆண்டு குறிப்பிட்ட சில வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது இந்த காரின் விலை விபரம் மஹிந்திரா இணையதளத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது.
மஹிந்திரா டியூவி 300 ப்ளஸ் கார் P4 என்ற ஒரே ஒரு வேரியண்ட்டில் மட்டும் விற்பனைக்கு கிடைக்கும். இந்த காருக்கு ரூ.9.69 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. ஆன்ரோடு விலை கிட்டத்தட்ட 11 லட்ச ரூபாயை நெருங்குகிறது.
முன்புற வடிவமைப்புகளில் அதிக மாற்றம் இல்லை. மூன்றாவது வரிசையில் பக்கவாட்டில் இரண்டு ஜம்ப் இருக்கைகள் இடம்பெற்றுவதற்காக காரின் நீளம் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. புதிய டெயில் லைட் க்ளஸ்ட்டர் இடம்பிடித்துள்ளது. இதுவே முக்கிய மாற்றங்களாக இருக்கிறது.
டில்ட் வசதியுடன் பவர் ஸ்டீயரிங், பவர் விண்டோஸ், சென்ட்ரல் லாக்கிங், ஏசி வசதி, 2 சார்ஜர் போர்ட்டுகள் இடம்பெற்றுள்ளன. ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் இல்லை. இந்த காரில் 16 அங்குல ஸ்டீல் சக்கரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், அலாய் சக்கரங்கள் ஆப்ஷனலாக கூட இல்லை.
சாதாரண டியூவி 300 எஸ்யூவியில் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், புதிய மஹிந்திரா டியூவி 300 ப்ளஸ் எஸ்யூவியில் 2.2 லிட்டர் எம்ஹாக் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 120 பிஎச்பி பவரையும், 280 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.
போல்டு பிளாக், மெஜஸ்டிக் சில்வர், டைனமோ ரெட் மற்றும் க்ளேசியர் ஒயிட் ஆகிய 4 வண்ணங்களில் கிடைக்கும்.
வரும் ஜூனில் இந்த புதிய காரை மஹிந்திரா முறைப்படி மார்க்கெட்டில் களமிறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எம்யூவி வகையிலான கார் டாக்சி மார்க்கெட்டை குறிவைத்து களமிறக்கப்படுகிறது.
Image Source: TUV300/Facebook