புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி700 எஸ்யூவியின் ஸ்பை படம் வெளியானது!

Written By:

மஹிந்திரா எக்ஸ்யூவி700 எஸ்யூவியின் ஸ்பை படம் வெளியாகி உள்ளது. இதன் மூலமாக, இந்த எஸ்யூவி விரைவில் விற்பனைக்கு வருவது உறுதியாகி இருக்கிறது.

 புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி700 எஸ்யூவியின் ஸ்பை படம் வெளியானது!

சாங்யாங் ரெக்ஸ்டன் எஸ்யூவியின் ரீபேட்ஜ் செய்யப்பட்ட மாடல் கடந்த மாதம் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், இந்த எஸ்யூவியின் தயாரிப்பு நிலை மாடலின் ஸ்பை படம் ஒன்று இணையதளத்தில் வெளியாகி இருக்கிறது.

 புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி700 எஸ்யூவியின் ஸ்பை படம் வெளியானது!

மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியைவிட விலை உயர்ந்த ரகத்தில் இந்த புதிய எஸ்யூவி நிலைநிறுத்தப்படுகிறது. மேலும், எக்ஸ்யூவி700 என்ற பெயரில் வர இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

 புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி700 எஸ்யூவியின் ஸ்பை படம் வெளியானது!

க்வாட் - ப்ரேம் என்ற பிளாட்ஃபார்மில் இந்த புதிய எஸ்யூவி கட்டமைக்கப்பட்டுள்ளது. இதனால், அதிக உறுதியும் எடை குறைவாகவும் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

 புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி700 எஸ்யூவியின் ஸ்பை படம் வெளியானது!

இந்த எஸ்யூவியில் மூன்று இருக்கை வரிசை அமைப்பை பெற்றிருக்கிறது. இந்த புதிய எஸ்யூவியில் 7 பெரியவர்கள் தாராளமாக அமர்ந்து பயணிக்கும் இடவசதியை அளிக்கும்.

 புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி700 எஸ்யூவியின் ஸ்பை படம் வெளியானது!

மசாஜ் இருக்கைகள், 8 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ட்யூவல் ஸோன் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், எலக்ட்ரிக் சன்ரூஃப் உள்ளிட்ட ஏராளமான பிரிமியம் வசதிகளையும் பெற்றிருக்கிறது.

 புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி700 எஸ்யூவியின் ஸ்பை படம் வெளியானது!

இந்த எஸ்யூவியின் இரண்டாவது இருக்கை பயணிகளுக்காக 10.1 அங்குல திரையுடன் கூடிய சென்டர் கன்சோல் தனியாக கொடுக்கப்பட்டு இருக்கிறது. மேலும், 9.2 அங்குல டிவி திரைகள் இரண்டும் ஹெட்ரெஸ்ட்டில் பொருத்தப்பட்டு இருக்கிறது.

 புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி700 எஸ்யூவியின் ஸ்பை படம் வெளியானது!

இந்த சென்டர் கன்சோல் சிஸ்டம் மூலமாக வைஃபை தொடர்பு, ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே சாஃப்ட்வேர்களை சப்போர்ட் செய்யும் வசதியையும் அளிக்கும்.

 புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி700 எஸ்யூவியின் ஸ்பை படம் வெளியானது!

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி700 எஸ்யூவியில் 2.2 லிட்டர் யூரோ-6 டீசல் எஞ்சின் பயன்படுத்தப்படுகிறது. இந்த எஞ்சின் 178 பிஎச்பி பவரையும் 420 என்எம் டார்க் திறனையும் வழங்கும். மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்திடமிருந்து சப்ளை பெறப்படும் 7 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

 புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி700 எஸ்யூவியின் ஸ்பை படம் வெளியானது!

இந்த புதிய எஸ்யூவியில் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷனிலும் வர இருக்கிறது. இந்த புதிய டர்போசார்ஜ்டு எஞ்சின் அதிகபட்சமாக 222 பிஎச்பி பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாக இருக்கும்.

 புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி700 எஸ்யூவியின் ஸ்பை படம் வெளியானது!

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி700 எஸ்யூவியில்ல 9 ஏர்பேக்குகள், எமெர்ஜென்ஸி பிரேக்கிங் சிஸ்டம், கண்ணுக்கு புலப்படாத இடத்திலிருந்து வரும் வாகனங்கள் மற்றும் இதர தடைகள் குறித்து எச்சரிக்ககும் பிளைன்ட் ஸ்பாட் டிடென்க்ஷன், தடம் மாறுதலை எச்சரிக்கும் வசதி, ஹை பீம் அசிஸ்ட், டிராஃபிக் சேஃப்டி அசிஸ்ட் என பல நவீன பாதுகாப்பு வசதிகளை பெற்றிருக்கும்.

 புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி700 எஸ்யூவியின் ஸ்பை படம் வெளியானது!

சாங்யாங் ஜி4 ரெக்ஸ்டன் அடிப்படையில் ரீபேட்ஜ் செய்யப்பட்டு இருக்கும் இந்த புதிய மஹிந்திரா எஸ்யூவியானது ரூ.25 லட்சம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டொயோட்டா ஃபார்ச்சூனர் மற்றும் ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவி மார்க்கெட்டை குறிவைத்து களமிறக்கப்பட இருக்கிறது.

Source: Rushlane

மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Mahindra showcased the new-gen SsangYong G4 Rexton SUV at the Auto Expo 2018 which will be sold as a Mahindra-badged product in the Indian market. To be slotted above the XUV500, the full-size seven-seater SUV could be called as XUV700 when it is launched in the country.
Story first published: Monday, March 12, 2018, 13:35 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark