இந்தியாவில் 35 லட்சம் எண்ணிக்கையை கடந்து கார் விற்பனையில் சாதனை படைத்த மாருதி ஆல்டோ..!!

Written By:

இந்தியாவின் என்ட்ரி-லெவல் கார் செக்மென்டில் மாருதி ஆல்டோவின் ஆதிக்கம் தொடர்ந்து வருகிறது. தொடர்ந்து செலிரியோ காருக்கும் பெரியளவில் வரவேற்பு உள்ளது.

கார் விற்பனையில் இமாலாய சாதனை படைத்த மாருதி ஆல்டோ..!!

நம் நாட்டின் முதன்மையான விற்பனையை பெற்று வரும் மாருதி ஆல்டோ கார் தற்போது புதிய சாதனையை ஒன்றை படைத்துள்ளது. இதுக்குறித்த தகவல்களை விரிவாக பார்க்கலாம்.

கார் விற்பனையில் இமாலாய சாதனை படைத்த மாருதி ஆல்டோ..!!

ஆண்டு, மாதம் போன்ற காலவரையில் சிறப்பான விற்பனையை பதிவு செய்து வரும் மாருதி ஆல்டோ கார் இதுவரை 35 லட்சம் எண்ணிக்கையை கடந்து விற்பனையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கார் விற்பனையில் இமாலாய சாதனை படைத்த மாருதி ஆல்டோ..!!

பல வருடங்களாக இந்திய சாலையை ஆக்கிரமித்து வரும் மாருதி ஆல்டோ காருக்கு தொடர்ந்து வாடிக்கையாளர்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்து வருகிறது.

அனைவருக்கும் ஏற்ற விலையிலும் அதே சமயத்தில் முக்கிய சில அம்சங்களையும் இந்த கார் ஒருங்கே பெற்றிருப்பது தான் ஆல்டோவின் பலம்.

கார் விற்பனையில் இமாலாய சாதனை படைத்த மாருதி ஆல்டோ..!!

2017 முதல் 2018 வரையில் இந்த காரின் விற்பனை திறன் 6 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும் சந்தை நிலவரத்தில் ஆல்டோ காரின் பங்கு என்பது 33 சதவீதமாக உள்ளது.

இதில் 44 சதவீதமான விற்பனை அளவு 35 வயதிற்கும் குறைவான இளைய தலைமுறை வாடிக்கையாளர்கள் மூலம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கார் விற்பனையில் இமாலாய சாதனை படைத்த மாருதி ஆல்டோ..!!

புதிய வடிவமைப்பு மற்றும் அம்சங்கள் போன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதால், பல இளம் வாடிக்கையாளர்கள் ஆல்டோ காரை தேர்ந்தெடுப்பதற்கு காரணமாக உள்ளது.

கார் விற்பனையில் இமாலாய சாதனை படைத்த மாருதி ஆல்டோ..!!

தற்போது மாருதி ஆல்டோ கார் 800சிசி மற்றும் 1 லிட்டர் என இரண்டு வித எஞ்சின்களில் வெளிவருகிறது. இதில் 800சிசி பெட்ரோல் எஞ்சின் கார் 47 பிஎச்பி பவர் மற்றும் 69 என்.எம் டார்க் திறனை வழங்கும். இந்த காரில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

கார் விற்பனையில் இமாலாய சாதனை படைத்த மாருதி ஆல்டோ..!!

அதேபோல 1000 லிட்டர் திறன் பெற்ற ஆல்டோ கார் மூலம் 67 பிஎச்பி பவர் மற்றும் 90 என்.எம் டார்க் திறனை வழங்கும். இது 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஏஎம்டி டிரான்ஸ்மிஷன் தேவை உள்ளது.

கார் விற்பனையில் இமாலாய சாதனை படைத்த மாருதி ஆல்டோ..!!

மாருதி ஆல்டோ காரில் பவர் ஸ்டீயரிங், முன்பக்க பவர் விண்டோஸ், ஓ.ஆர்.வி.எம், ஸ்டைலான முகப்பு விளக்குகள் மற்றும் ஒருங்கிணைந்த ஸ்டீயரியோ போன்ற ப்ரீமியம் தர அம்சங்கள் இதில் உள்ளன.

கார் விற்பனையில் இமாலாய சாதனை படைத்த மாருதி ஆல்டோ..!!

இதனுடைய டாப்-ஸ்பெக் வேரியன்டில் ஓட்டுநர் இருக்கைக்கான ஏர்பேகுகள் வழங்கப்பட்டுள்ளது முக்கிய சிறப்பம்சமாக உள்ளது.

கார் விற்பனையில் இமாலாய சாதனை படைத்த மாருதி ஆல்டோ..!!

நிலையான விற்பனை திறனை பதிவு செய்து வருவதால், இந்த காரை மாருதி சுஸுகி தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது. தவிர இதனுடைய சர்வீஸ் மற்றும் விற்பனை நெட்வொர்க் மிகவும் எளிமையான முறையில் கையாளப்பட்டு வருகிறது.

கார் விற்பனையில் இமாலாய சாதனை படைத்த மாருதி ஆல்டோ..!!

குறைந்த விலையின் கீழ் இதற்கான பராமரிப்பு செலவுகள் அடங்கிவிடுவதால், ஆல்டோ காருக்கான புதிய வாடிக்கையாளர்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றனர்.

கார் விற்பனையில் இமாலாய சாதனை படைத்த மாருதி ஆல்டோ..!!

இந்தியாவில் ஆல்டோ காரை பிஎஸ்6 எஞ்சின் தேர்வில் மாருதி சுஸுகி வெளியிடலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இது 2020ம் ஆண்டில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கார் விற்பனையில் இமாலாய சாதனை படைத்த மாருதி ஆல்டோ..!!

தொடர்ந்து ஆல்டோ கார் புதிய வடிவமைப்பு மொழியின் கீழ் தயாரிக்கப்பட்டு வெளிவரலாம் என்றும் மாருதி சுஸுகி வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

English summary
Read in Tamil: Maruti Alto Becomes Best-Selling Car In India Crosses 35 Lakh Sales Milestone. Click for Details...
Story first published: Thursday, March 8, 2018, 12:04 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark