2018 ஆட்டோ எக்ஸ்போ லைவ் : மாருதி நிறுவனத்தின் புதிய பட்ஜெட் எஸ்யூவி கான்செப்ட் அறிமுகம்!

Posted By:

மாருதி நிறுவனத்தின் ஃப்யூச்சர் எஸ் என்ற புதிய எஸ்யூவி கான்செப்ட் ஆட்டோ எக்ஸ்போவில் சற்றுமுன் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. மாருதி நிறுவனம் அறிமுகப்படுத்த இருக்கும் பட்ஜெட் எஸ்யூவியின் முன்னோட்டமாக வந்திருக்கும் இந்த காரின் படங்கள் மற்றும் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

மாருதி ஃப்யூச்சர் எஸ் எஸ்யூவி கான்செப்ட் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்!

மாருதி நிறுவனம் சொந்தமாக உருவாக்கி இருக்கும் புத்தம் புதிய எஸ்யூவி கான்செப்ட் மாடலாக ஃப்யூச்சர் எஸ் பார்வைக்கு வந்துள்ளது. நகர்ப்புற இளைஞர்களை கவரும் அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

மாருதி ஃப்யூச்சர் எஸ் எஸ்யூவி கான்செப்ட் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்!

முகப்பு மிக கம்பீரமாக காட்சி தருவதுடன், நவீன டிசைன் அம்சங்களுடன் கவர்கிறு. எல்இடி ஹெட்லைட்டுகள், மெல்லிய க்ரில் அமைப்புடன் வசீகரிக்கிறது. விண்ட்ஷீல்டுக்கு சுற்றிலும் வெள்ளை வண்ண பார்டர் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

மாருதி ஃப்யூச்சர் எஸ் எஸ்யூவி கான்செப்ட் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்!

முன்புற பம்பரி் பெரிய அளவிலான சில்வர் ஸ்கிட் பிளேட் மற்றும் ஏர்டேம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. வட்ட வடிவ பனி விளக்குகளும் சிறப்பு சேர்க்கிறது. பனி விளக்குகளை சுற்றிலும் வெள்ளை வண்ண பார்டரை காண முடிகிறது.

மாருதி ஃப்யூச்சர் எஸ் எஸ்யூவி கான்செப்ட் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்!

பக்கவாட்டிலும் மிக வித்தியாசமான டிசைன் அமைப்பை பெற்றிருக்கிறது. பெரிய அளவிலான வீல் ஆர்ச்சுகள் மற்றும் ஆரஞ்ச் வண்ண அலங்காரத்துடன் கூடிய சக்கரங்கள்க கவர்கின்றன. பின்புறத்தில் மெல்லிய எல்இடி ஹெட்லைட்டுகள், அலுமினிய ஸ்கிட் பிளேட் ஆகியவை சிறப்பு சேர்க்கும் டிசைன் அம்சங்களாக கூறலாம்.

Recommended Video - Watch Now!
New Maruti Swift Launch: Price; Mileage; Specifications; Features; Changes
மாருதி ஃப்யூச்சர் எஸ் எஸ்யூவி கான்செப்ட் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்!

உட்புறத்தில் யானை தந்த வண்ணம் பெரும்பான்மையான பாகங்களை ஆக்கிரமித்துள்ளது. ஸ்டீயரிங் வீல், இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், கதவுகள், டேஷ்போர்டில் ஆரஞ்ச் வண்ண அலங்கார பாகங்கள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.

மாருதி ஃப்யூச்சர் எஸ் எஸ்யூவி கான்செப்ட் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்!

சென்டர் கன்சோல் பியானோ பிளாக் என்ற பளபளப்பான கருப்பு வண்ணத்தில் இருக்கிறது. இருக்கைகள் அமர்வதற்கு மிக சவுகரியமான உணர்வை தரும் விதத்தில் வடிவமைக்கப்பட்டு இருப்பதாக மாருதி தெரிவித்துள்ளது.

மாருதி ஃப்யூச்சர் எஸ் எஸ்யூவி கான்செப்ட் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்!

மாருதி பிரெஸ்ஸா எஸ்யூவியைவிட விலை குறைவான மாடலாக இந்த எஸ்யூவி விற்பனைக்கு கொண்டு வரப்படும். மேலும், தயாரிப்பு நிலைக்கு கொண்டு செல்லப்படும்போது அதிக மாற்றங்களும் செய்யப்பட்டு கூடுதல் வசீகரத்துடன் வரும்.

மாருதி ஃப்யூச்சர் எஸ் எஸ்யூவி கான்செப்ட் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்!

அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் இந்த புதிய மாருதி எஸ்யூவி விற்பனைக்கு களமிறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எஸ்யூவி விற்பனைக்கு வரும்பட்சத்தில் பட்ஜெட் எஸ்யூவி மார்க்கெட்டில் பெரிய அளவிலான அதிர்வுகளை ஏற்படுத்தும் என்று நம்பலாம்.

English summary
Auto Expo 2018: Maruti Future Concept S Unveiled. The Maruti Future S concept revealed at Auto Expo 2018 previews Maruti's SUV which will sit under the Brezza compact SUV and is expected to arrive in India within the next two years.

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark