போனியாகலை... மாருதி இக்னிஸ் காரின் டீசல் மாடல் உற்பத்தி நிறுத்தம்?

மாருதி இக்னிஸ் காரின் டீசல் மாடல் விற்பனையிலிருந்து விலக்கப்பட இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

By Saravana Rajan

மாருதி இக்னிஸ் காரின் டீசல் மாடல் விற்பனையிலிருந்து விலக்கப்பட இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன. இதுகுறித்த விரிவானத் தகவல்களை தொடர்ந்து படிக்கலாம்.

போனியாகலை... மாருதி இக்னிஸ் காரின் டீசல் மாடல் விற்பனை நிறுத்தம்?

கடந்த 2017ம் ஆண்டு ஜனவரியில் புதிய மாருதி இக்னிஸ் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இளம் தலைமுறை வாடிக்கையாளர்களை குறிவைத்து பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் கச்சிதமான ஹேட்ச்பேக் மாடலாக அறிமுகம் செய்யப்பட்டது.

போனியாகலை... மாருதி இக்னிஸ் காரின் டீசல் மாடல் விற்பனை நிறுத்தம்?

இந்த கார் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் மாடல்களில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. மிகவும் நம்பகமான 1.3 லிட்டர் மல்டிஜெட் டீசல் எஞ்சின் விற்பனையில் கலக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. 74 பிஎச்பி பவரையும், 190 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்ல இந்த டீசல் எஞ்சினுடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைத்தது.

போனியாகலை... மாருதி இக்னிஸ் காரின் டீசல் மாடல் விற்பனை நிறுத்தம்?

இந்த நிலையில், மாருதிக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது மாருதி இக்னிஸ் கார். ஆம். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மாருதி இக்னிஸ் காரின் டீசல் மாடலுக்கு வரவேற்பு மிக குறைவாக இருந்து வந்துள்ளது. இக்னிஸ் காரின் மொத்த விற்பனையில் வெறும் 10 சதவீதம் அளவுக்கே டீசல் மாடலின் விற்பனை இருந்துள்ளது.

போனியாகலை... மாருதி இக்னிஸ் காரின் டீசல் மாடல் விற்பனை நிறுத்தம்?

இதையடுத்து, உற்பத்தி செலவீனங்களை கருதி, இக்னிஸ் காரின் டீசல் மாடலை விற்பனையில் இருந்து விலக்குவதற்கு மாருதி கார் நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதேநேரத்தில், 1.2 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்ட பெட்ரோல் மாடல் தொடர்ந்து விற்பனையில் இருக்கும்.

போனியாகலை... மாருதி இக்னிஸ் காரின் டீசல் மாடல் விற்பனை நிறுத்தம்?

பெட்ரோல் எஞ்சின் 82 பிஎச்பி பவரையும், 113 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் அல்லது ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கும்.

போனியாகலை... மாருதி இக்னிஸ் காரின் டீசல் மாடல் விற்பனை நிறுத்தம்?

மாருதி இக்னிஸ் காரில் எல்இடி புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், 7 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவை வழங்கப்படுகின்றன. ஸ்மார்ட்போன் இணைத்துக் கொள்ளும் வசதியுடன்் ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே இணைப்பு வசதிகளையும் இந்த சாதனம் பெற்றிருக்கிறது.

போனியாகலை... மாருதி இக்னிஸ் காரின் டீசல் மாடல் விற்பனை நிறுத்தம்?

இந்த காரில் இரண்டு ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் நிரந்தர பாதுகாப்பு வசதியாக வழங்கப்படுகிறது. மாருதி ரிட்ஸ் காருக்கு மாற்றாக வந்த மாருதி இக்னிஸ் கார் விற்பனையில் மாருதிக்கு ஓரளவு பக்கபலமாக இருந்து வருகிறது.

போனியாகலை... மாருதி இக்னிஸ் காரின் டீசல் மாடல் விற்பனை நிறுத்தம்?

மாருதி இக்னிஸ் காரின் டீசல் மாடல் விற்பனை நிறுத்தப்பட்டது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியிடப்படவில்லை. ஆனால், டீலர்களில் இருப்பு உள்ளவரை டீசல் இக்னிஸ் கார் விற்பனைக்கு கிடைக்கும் என்று தெரிகிறது.

போனியாகலை... மாருதி இக்னிஸ் காரின் டீசல் மாடல் விற்பனை நிறுத்தம்?

பெட்ரோல் மாடல் ரூ.4.76 லட்சம் முதல் ரூ.7.28 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையிலும், டீசல் மாடல் ரூ.6.43 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது. டீசல் மாடலை முன்பதிவு செய்வதற்கு முன் டீலரில் தீர விசாரித்த பின் முன்பதிவு செய்வது நல்லது.

Most Read Articles
English summary
Maruti Suzuki has discontinued the sales of the diesel version of its Ignis offering in India. According to GaadiWaadi, the reason for the discontinuation was the lack of demand for the diesel version.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X