புதிய அண்டில் புத்தம் புதிய மூன்று கார்களை வெளியிடும் மாருதி சுஸுகி... முழு தகவல்கள்..!!

Written By:

2017ம் ஆண்டிற்கு விடைக்கொடுத்து 2018 புத்தாண்டை இருகரம் நீட்டி நாம் வரவேற்றுள்ளோம். இந்திய வாகன துறைக்கு இந்தாண்டு பல சவால்களை அளிக்க காத்திருக்கிறது.

2018ல் மாருதி சுஸுகி களமிறக்கும் புதிய கார்கள்... விபரங்கள்!

கார் தயாரிப்பில் இந்தியாவின் முன்னணி நிறுவனமான மாருதி சுஸுகி, 2018ல் களமிறக்கும் கார்கள் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் அதீத ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

2018ல் மாருதி சுஸுகி களமிறக்கும் புதிய கார்கள்... விபரங்கள்!

இதுப்பற்றி இடி ஆட்டோ இணையதளம் வெளியிட்டுள்ள செய்தியில், புதிய ஸ்விஃப்ட் காரை தவிர 2018ல் மாருதி சுஸுகி இன்னும் இரண்டு கார்களை வெளியிடுகிறது.

2018 பிப்ரவரியில் நடக்கும் ஆட்டோ எக்ஸ்போவில் மாருதி சுஸுகி புதிய ஸ்விஃப்ட் காரை வெளியிட்டு, இந்தாண்டிற்கான தனது கணக்கை துவக்குகிறது.

2018ல் மாருதி சுஸுகி களமிறக்கும் புதிய கார்கள்... விபரங்கள்!

அதை தொடர்ந்து முற்றிலும் புதிய வேகன் ஆர் மற்றும் எர்டிகா எம்.வி.பி கார்களை வெளியிடுகிறது. இந்த இரண்டு கார்களுமே பெரிய எதிர்பார்ப்பை இந்திய சந்தையில் தற்போது ஏற்படுத்தியுள்ளன.

2018ல் மாருதி சுஸுகி களமிறக்கும் புதிய கார்கள்... விபரங்கள்!

காரணம், ஹேட்ச்பேக் ஸ்விஃப்ட் மற்றும் வேகன் ஆர் மாடல்கள், எம்.பி.வி மாடல் எர்டிகா காரும் தத்தமது செக்மென்டில் பெரிய விற்பனை திறனை பெற்ற கார்களாகும்.

Trending On Drivespark:

அதிவேகமாக வந்த காருடன் நேருக்கு நேர் மோதி சாலையில் தூக்கிவீசப்பட்ட பைக்... (வீடியோ)

2017-ல் இந்தியாவில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட கார்கள்!

Recommended Video - Watch Now!
2018 BMW i8 Roadster And i8 Coupe Quick Look - DriveSpark
2018ல் மாருதி சுஸுகி களமிறக்கும் புதிய கார்கள்... விபரங்கள்!

மேம்படுத்தப்பட்ட மாடல்களாக வெளிவரும் இந்த மூன்று கார்களிலும் மேற்கொள்ளப்பட்டுள்ள புதிய தயாரிப்பு பணிகள், வடிவமைப்பு விவரங்கள் மற்றும் செயல்திறன் அம்சங்களை பார்க்கலாம்.

2018 ஸ்விப்ஃட்

2018 ஸ்விப்ஃட்

புதிய தலைமுறை ஸ்விப்ஃட் காரின் வெளித்தோற்றம் புத்தம் புதுசாக உள்ளது. முன்னர் புதிய டிசையர் மற்றும் பலேனோ மாடல்கள் தயாரிக்கப்பட்ட ஹார்டெக்ட் பிளாட்ஃபாராமின் கீழ் தான் இதுவும் தயாரிக்கப்பட்டுள்ளது.

2018ல் மாருதி சுஸுகி களமிறக்கும் புதிய கார்கள்... விபரங்கள்!

இலகுவான எடையிலும் அதே சமயத்தில் அதீத வலிமைக்கொண்ட விதத்திலும் புதிய ஸ்விஃப்ட் கார் இருக்கும்.

ஹை டென்சைல் ஸ்டீல் பயன்படுத்தப்பட்டுள்ளதால, எந்தவித ஓட்டத்திற்கு புதிய ஸ்விஃப்ட் கார் ஈடுகொடுக்கும்.

2018ல் மாருதி சுஸுகி களமிறக்கும் புதிய கார்கள்... விபரங்கள்!

1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.3 லிட்டர் டீசல் என இருவேறு தேர்வுகள் கொண்ட எஞ்சினில் இந்த கார் வெளிவருகிறது. எஞ்சின் தேர்வுகளுக்கு ஏற்றவாறு 82 பிஎச்பி மற்றும் 74 பிஎச்பி ஆற்றலை இது வழங்கும்.

5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் பெற்றுள்ள புதிய ஸ்விஃப்ட் கார் ஏஎம்டி தேவையிலும் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2017 வேகன் ஆர்

2017 வேகன் ஆர்

2018ம் ஆண்டில் வெளியிடப்படும் வேகன் ஆர் காரை முற்றிலும் புதிய மாடலில் மாருதி சுஸுகி தயாரித்துள்ளது. உயரமான கார் என்ற அடையாளத்தை தொடர்ந்து 2018 வேகன் ஆர் மாடலும் தக்கவைத்துக்கொண்டுள்ளது.

2018ல் மாருதி சுஸுகி களமிறக்கும் புதிய கார்கள்... விபரங்கள்!

தற்போது விற்பனையில் இருக்கும் வேகன் ஆர் கார்களில் உள்ள அதே 1 லிட்டர் பெட்ரோல் எஞ்சினைத்தான் இந்த மேம்படுத்தப்பட்ட மாடலும் பெற்றுள்ளது.

Trending On Drivespark:

இந்தியாவின் முதல் ரிவர்ஸ் கியரை பெற்ற ராயல் என்ஃபீல்டு புல்லட் மாடல் மோட்டார் சைக்கிள்..!!

இந்தியன் ஸ்கவுட் அவதாரத்தில் ராயல் என்ஃபீல்டு... இது எப்டி இருக்கு?

2018ல் மாருதி சுஸுகி களமிறக்கும் புதிய கார்கள்... விபரங்கள்!

5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேவைகளில் இந்த கார் வெளிவரும். இதுதவிர எல்பிஜி மற்றும் சிஎன்ஜி என மாற்று எரிவாயு தேவைகளிலும் மாருதி சுஸுகி வேகன் ஆர் காரை வழங்குகிறது.

2018ல் மாருதி சுஸுகி களமிறக்கும் புதிய கார்கள்... விபரங்கள்!

தோற்றம், செயல்திறன் மற்றும் வசதிகள் ஆகியவற்றோடு மாற்று எரிவாயு தேவைகளிலும் தயாராகி உள்ள புதிய வேகன் ஆர் கார் 2018 இறுதியில் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

எர்டிகா ஃபேஸ்லிஃப்ட்

எர்டிகா ஃபேஸ்லிஃப்ட்

இந்தியாவில் எம்விபி வாகன தேவைகளில் எர்டிகா மாடலில் பங்கு மிகப்பெரியதாக உள்ளது. இதை உணர்ந்து எர்டிகாவின் அப்டேட் வெர்ஷனை இந்தாண்டில் வெளியிடுகிறது மாருதி சுஸுகி.

டிசையர், பலேனோ மற்றும் ஸ்விஃப்ட் கார் தயாரிக்கப்பட்டுள்ள ஹார்டெக்ட் பிளாட்ஃபாரமின் கீழ் தான் எர்டிகா மாடலையும் மாருதி சுஸுகி உற்பத்தி செய்துள்ளது.

2018ல் மாருதி சுஸுகி களமிறக்கும் புதிய கார்கள்... விபரங்கள்!

இந்தியாவில் அனேக சாலைகளிலும் 2018 எர்டிகா காரின் சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதில் கிடைத்த ஸ்பை படங்கள் மூலம் புதிய எர்டிகா காரின் அளவு, தற்போதைய மாடலை விட சற்று பெரியதாக இருக்கும் என்று தெரிகிறது.

2018ல் மாருதி சுஸுகி களமிறக்கும் புதிய கார்கள்... விபரங்கள்!

1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.4 லிட்டர் டர்போசார்ஜிடு டீசல் என இருவேறு எஞ்சின் தேர்வுகளிலும் புதிய எர்டிகா கார் விற்பனைக்கு வரவுள்ளது.

இந்த இரண்டு எஞ்சின் தேர்வுகளும், மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேவைகளை பெற்றிருக்கும் என்று மாருதி சுஸுகி தகவல் தெரிவிக்கிறது.

2018ல் மாருதி சுஸுகி களமிறக்கும் புதிய கார்கள்... விபரங்கள்!

7 இருக்கைகள் கொண்ட எம்விபி மாடலான 2018 எர்டிகா காரின் உள்கட்டமைப்புகளும் பெரியளவில் புதிய மாற்றங்களை பெற்றிருக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.

2018ல் மாருதி சுஸுகி களமிறக்கும் புதிய கார்கள்... விபரங்கள்!

2018ல் இந்தியாவில் மாருதி சுஸுகியின் தயாரிப்புகள் அனைத்தும் புதிய வடிவமைப்பை பெறுகின்றன. அதிலும் குறிப்பாக 2018 ஸ்விஃப்ட் கார் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை பெற்றுள்ளது.

2018ல் மாருதி சுஸுகி களமிறக்கும் புதிய கார்கள்... விபரங்கள்!

புதிய தலைமுறை ஸ்விஃப்ட் கார் 2018 ஆட்டோ எக்ஸ்போவில் வெளியிடப்படுகிறது. அதை தொடர்ந்து வரக்கூடிய மாதங்களில் புதிய வேகன் ஆர் மற்றும் எர்டிகா கார்களை மாருதி சுஸுகி இந்தியாவில் வெளியிடும்.

Trending DriveSpark YouTube Videos

Subscribe To DriveSpark Tamil YouTube Channel - Click Here

English summary
Read in Tamil: Maruti Suzuki To Launch Three New Cars In 2018 — Here Are The Details. Click for Details...
Story first published: Monday, January 1, 2018, 13:37 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark