ஸ்விஃப்ட் முதல் பிரிஸ்ஸா வரை.... ஹைப்ரிட் / மின்சார ஆற்றலில் கார்களை தயாரிக்க மாருதி சுஸுகி ஆயத்தம்

Written By:

மாருதி சுஸுகியின் பிரபல கார் மாடல்கள் புதிய தலைமுறை டிசைனிற்கு மாற்றப்படும் போது அவை மின்சார ஆற்றலிலும் விற்பனைக்கு வரும் என நிர்வாக அதிகாரி கென்னிச்சி அயூக்கவா தெரிவித்துள்ளார்.

ஹைப்ரிட் / மின்சார ஆற்றலுக்கு விரைவில் மாறும் மாருதி கார்கள்

இந்தியாவில் மாருதி சுஸுகி-க்கான கார் சந்தையில் பெட்ரோல், டீசல் கார்கள் தற்போது விற்பனையாகி வருகின்றன. அதே கார்களை எதிர்காலத்தில் ஹைப்ரிட் அல்லது முழு மின்சாரம் தேர்வில் மாருதி சுஸுகி தயாரிக்க ஆயத்தமாகி வருகிறது.

ஹைப்ரிட் / மின்சார ஆற்றலுக்கு விரைவில் மாறும் மாருதி கார்கள்

அதன்படி ஹேட்ச்பேக் ஆல்டோ, செலிரியோ, ஸ்விஃப்ட் தொடங்கி டிசையர், பலேனோ, பிரிஸ்ஸா எஸ்யூவி வரையிலான கார்கள், புதிய தலைமுறை மாடலாக மாற்றப்படும் போது அவை மின்சாரம் அல்லது ஹைப்ரிட் தேர்வுகளிலும் வெளிவரலாம்.

ஹைப்ரிட் / மின்சார ஆற்றலுக்கு விரைவில் மாறும் மாருதி கார்கள்

மேற்கூறிய கார் மாடல்கள்தற்போது பெட்ரோல், டீசல், எல்.பி.ஜி, சிஎன்ஜி ஆகிய தேர்வுகளில் விற்பனையாகி வருகிறது. இது எதிர்காலத்தில் கூடுதலாக ஹைப்ரிட் அல்லது முழு மின்சார மோட்டார் தேர்வுகளில் வெளியிட மாருதி திட்டமிட்டு வருகிறது.

ஹைப்ரிட் / மின்சார ஆற்றலுக்கு விரைவில் மாறும் மாருதி கார்கள்

அடுத்த தலைமுறை மாடலாக ஸ்விஃப்ட், பலேனோ, பிரிஸ்ஸா, டிசையர் போன்ற கார்கள் வெளிவரும் போது அவை நிச்சயம் ஹைஃபிர்ட் அல்லது முழு மின்சார ஆற்றலில் விற்பனைக்கு வரும் என்பதே உண்மை.

Recommended Video - Watch Now!
Under-Aged Rider Begs The Policewomen To Spare Him - DriveSpark
ஹைப்ரிட் / மின்சார ஆற்றலுக்கு விரைவில் மாறும் மாருதி கார்கள்

இந்திய அரசு வாகன பயன்பாட்டை 2030ம் ஆண்டிற்குள் மின்சார ஆற்றலுக்கு மாற்ற முயற்சித்து வருகிறது. இந்த காலவரையை அடைவதற்குள் மாருதியின் மின்சார & ஹைஃபிர்ட் கார்கள் விற்பனைக்கு வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹைப்ரிட் / மின்சார ஆற்றலுக்கு விரைவில் மாறும் மாருதி கார்கள்

மாருதியின் பிரபல கார்களில் ஒன்றான சியாஸ் மற்றும் எர்டிகா மாடல்கள் ஏறகனவே இந்தியாவில் மைல்டு-டீசல் ஹைஃபிர்ட் தேர்வில் விற்பனையில் உள்ளது. இதன் காரணமாக இந்த நிலைப்பாட்டை மாருதி எடுத்திருப்பது புதித்தல்ல.

ஹைப்ரிட் / மின்சார ஆற்றலுக்கு விரைவில் மாறும் மாருதி கார்கள்

ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டு பிறகு அது திருத்தப்பட்ட போது மைல்டு - ஹைப்ரிட் மற்றும் முழு- ஹைப்ரிட் கார்களின் வரி விதிப்பு அதிகப்படுத்தப்பட்டது. தொடர்ந்து மின்சார திறன் பெற்ற கார்கள் ஜிஎஸ்டி-க்கு கீழ் 12 சதவீத வரி விதிப்பை பெறுகின்றன.

ஹைப்ரிட் / மின்சார ஆற்றலுக்கு விரைவில் மாறும் மாருதி கார்கள்

அரசின் அதிகாரம் இப்படியிருப்பாதல், பல்வேறு கார் நிறுவனங்கள் ஹைப்ரிட் தொழில்நுட்பத்திற்கு பதிலாக மின்சார கார்களை உருவாக்குவதில் அதிக ஆர்வம் காட்டுகின்றன.

ஹைப்ரிட் / மின்சார ஆற்றலுக்கு விரைவில் மாறும் மாருதி கார்கள்

வாகன நிறுவனங்களின் நிலைப்பாடு இப்படியிருந்தாலும் லித்தியம்-ஐயன் பேட்டரிகள் சந்தையில் அதிக விலை மதிப்பை பெறுகின்றன. அதனால் இவை மின்சார / ஹைப்ரிட் கார்களுக்கான சந்தையில் விலை உயர்வை ஏற்படுத்தும்.

ஹைப்ரிட் / மின்சார ஆற்றலுக்கு விரைவில் மாறும் மாருதி கார்கள்

வாகனங்களை மின்சார ஆற்றலுக்கு மாற்றும் முடிவை இந்தியா அரசு முன்னதாகவே எடுத்திருந்தாலும், அதற்கு ஏற்றவாறு கட்டமைப்பை உருவாக்கும் பணிகள் இதுவரை பெரியளவில் தொடங்கவில்லை.

ஹைப்ரிட் / மின்சார ஆற்றலுக்கு விரைவில் மாறும் மாருதி கார்கள்

எதிர்காலத்தில் வாகன பயன்பாடு மின்சார ஆற்றலுக்கு மாறப்போகிறது என்பது தெரியாமலேயே பல்வேறு தரப்பினர் இந்தியாவில் உள்ளனர்.

மஹாராஷ்டிராவின் நாக்பூர், பெங்களூர் உள்ளிட்ட நகரங்களில் மட்டுமே மின்சார வாகனங்களுக்கான கட்டமைப்புகளில் சிலது மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஹைப்ரிட் / மின்சார ஆற்றலுக்கு விரைவில் மாறும் மாருதி கார்கள்

மத்திய அரசின் மின்சார வாகன பயன்பாட்டை முழுவதுமாக அமல்படுத்த பலம் வாயந்த அடிப்படை கட்டமைப்புகளை நிறுவுவது அவசியம். அதுவரை ஹைப்ரிட் கார்களை வாங்குவதில் வாடிக்கையாளர்கள் கவனம் செலுத்தலாம்.

ஹைப்ரிட் / மின்சார ஆற்றலுக்கு விரைவில் மாறும் மாருதி கார்கள்

ஆனால் இருந்தாலும் வாகன துறையை மின்சார ஆற்றலுக்கு மாற்றும் தேவைகளை உடனடியாக அரசு தொடங்க வேண்டும் என்பதே வாகன தயாரிப்பாளர்கள், வாடிக்கையாளர்களின் முதன்மை கோரிக்கையாக உள்ளது.

English summary
Read in Tamil: Maruti Suzuki Cars Go to Hybrid Electric Future Ahead. Click for Details...

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark