ரூ.8.19 லட்சத்தில் புதிய மாருதி சியாஸ் கார் விற்பனைக்கு அறிமுகம்!

By Saravana Rajan

மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் புதிய மாருதி சியாஸ் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த காரின் முக்கிய அம்சங்கள், விலை விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ரூ.8.19 லட்சத்தில் புதிய மாருதி சியாஸ் கார் விற்பனைக்கு அறிமுகம்!

கடந்த 2014ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட மாருதி சியாஸ் கார் மிட்சைஸ் செடான் கார் மார்க்கெட்டில் விற்பனையில் முதலிடம் வகிக்கிறது. ஹோண்டா சிட்டி, ஹூண்டாய் வெர்னா போன்ற ஜாம்பவான்களை ஓரம் கட்டி முன்னிலை வகித்து வருகிறது. இந்த நிலையில், போட்டியாளர்களை சமாளிக்கும் விதத்தில் பல கூடுதல் அம்சங்களுடன் மாருதி சியாஸ் கார் மேம்படுத்தப்பட்டு இப்போது ஃபேஸ்லிஃப்ட் எனப்படும் புதுப்பொலிவுடன் கூடிய மாடலாக விற்பனைக்கு வந்துள்ளது.

ரூ.8.19 லட்சத்தில் புதிய மாருதி சியாஸ் கார் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய மாருதி சியாஸ் கார் பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் கிடைக்கும். பெட்ரோல் மாடல் மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் வசதிகளை பொறுத்து 7 வேரியண்ட்டுகளிலும், டீசல் மாடல் 4 வேரியண்ட்டுகளிலும் விற்பனைக்கு கிடைக்கும். விலை குறைவான சிக்மா வேரியண்ட், நடுத்தர விலையிலான டெல்ட்டா, ஸீட்டா வேரியண்ட்டுகள் மற்றும் அதிகபட்ச வசதிகள் கொண்ட ஆல்ஃபா வேரியண்ட்டில் விற்பனைக்கு கிடைக்கும்.

ரூ.8.19 லட்சத்தில் புதிய மாருதி சியாஸ் கார் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய மாருதி சியாஸ் காரில் முக்கிய மாற்றமாக 1.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுக்கு பதிலாக 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் 103 பிஎச்பி பவரையும், 138 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாக இருக்கும். டீசல் மாடல் போன்றே பெட்ரோல் மாடலிலும் இப்போது சுஸுகி நிறுவனத்தின் மைல்டு ஹைப்ரிட் தொழில்நுட்பத்ததுடன் வந்துள்ளது. இதனால், அதிக எரிபொருள் சிக்கனத்தையும் குறைவான மாசு உமிழ்வு அம்சத்தையும் பெற்றிருக்கிறது.

ரூ.8.19 லட்சத்தில் புதிய மாருதி சியாஸ் கார் விற்பனைக்கு அறிமுகம்!

பெட்ரோல் மாடலானது மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கும். பெட்ரோல் மேனுவல் மாடலானது லிட்டருக்கு 21.56 கிமீ மைலேஜையும், பெட்ரோல் ஆட்டோமேட்டிக் மாடல் லிட்டருக்கு 20.28 கிமீ மைலேஜையும் தரும் என்று நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

ரூ.8.19 லட்சத்தில் புதிய மாருதி சியாஸ் கார் விற்பனைக்கு அறிமுகம்!

டீசல் மாடலில் 1.3 லிட்டர் மல்டிஜெட் எஞ்சின் தக்க வைக்கப்பட்டு இருக்கிறது. இந்தத எஞ்சின் 89 பிஎச்பி பவரையும், 200 என்எம் டார்க் திறனையும் வழங்கும். மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் மட்டும் கிடைக்கும். டீசல் மாடலானது லிட்டருக்கு 28.09 கிமீ மைலேஜை தரும் என்று மாருதி சுஸுகி தெரிவிக்கிறது.

ரூ.8.19 லட்சத்தில் புதிய மாருதி சியாஸ் கார் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய மாருதி சியாஸ் காரில் புதிய க்ரில் அமைப்பு, பம்பர் அமைப்பு இடம்பெற்றுள்ளது. எல்இடி புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள் இடம்பெற்றுள்ளன. புதிய மாருதி சியாஸ் காரில் 16 அங்குல டைமண்ட் கட் அலாய் வீல்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. புத்தம் புதிய டெயில் லைட் க்ளஸ்ட்டர் வசீகரிக்கிறது. பம்பரில் எல்இடி பட்டைகள் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

ரூ.8.19 லட்சத்தில் புதிய மாருதி சியாஸ் கார் விற்பனைக்கு அறிமுகம்!

வெளிப்புறத்தில் மாற்றங்களுடன் வந்திருக்கும் புதிய மாருதி சியாஸ் காரில் உட்புறத்தில் பெரிய அளவிலான மாற்றங்கள் இல்லை. பெட்ரோல் மாடலில் 4.2 அங்குல வண்ணத்திரையுடன் கூடிய புதிய மல்டி இன்ஃபர்மேஷன் திரையானது இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டரில் கொடுக்கப்பட்டு இருக்கிறது. 7.0 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சாதனம் தக்க வைக்கப்பட்டு இருக்கிறது. ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே செயலிகளை சப்போர்ட் செய்யும்.

ரூ.8.19 லட்சத்தில் புதிய மாருதி சியாஸ் கார் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய மாருதி சியாஸ் காரின் விலை உயர்ந்த வேரியண்ட்டில் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், ரியர் ஏசி வென்ட்டுகள், புஷ் பட்டன் ஸ்டார்ட்-ஸ்டாப் வசதி, க்ரூஸ் கன்ட்ரோல், ஆட்டோமேட்டிக் வைப்பர்கள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.

ரூ.8.19 லட்சத்தில் புதிய மாருதி சியாஸ் கார் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய மாருதி சியாஸ் காரில் டியூவல் ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஸ்பீடு அலர்ட் சிஸ்டம் ஆகியவை நிரந்தர பாதுகாப்பு அம்சமாக கொடுக்கப்பட்டு இருக்கிறது. 80 கிமீ வேகத்தை தாண்டும்போது ஸ்பீடு அலர்ட் சிஸ்டம் மூலமாக எச்சரிக்கை ஒலி எழுப்பும். 80 கிமீ முதல் 120 கிமீ வேகம் வரை செல்லும்போது நிமிடத்திற்கு ஒருமுறை ஒலி எழுப்பி ஓட்டுனரை எச்சரிக்கும். 120 கிமீ வேகத்தை தாண்டி செல்லும்போது தொடர்ச்சியாக எச்சரிக்கை செய்யும். பெட்ரோல் ஆட்டோமேட்டிக் மாடலில் எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராம் பாதுகாப்பு வசதி கூடுதலாக இருக்கிறது.

ரூ.8.19 லட்சத்தில் புதிய மாருதி சியாஸ் கார் விற்பனைக்கு அறிமுகம்!

பெட்ரோல் மாடல் ரூ.8.19 லட்சம் முதல் ரூ.10.97 லட்சம் வரையிலும், டீசல் மாடல் ரூ.9.19 லட்சம் முதல் ரூ.10.97 லட்சம் இடையிலான விலையில் விற்பனைக்கு கிடைக்கும். ஹோண்டா சிட்டி, ஹூண்டாய் வெர்னா, டொயோட்டா யாரிஸ், ஸ்கோடா ரேபிட், ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ உள்ளிட்ட மாடல்களுடன் நேரடியாக போட்டியை அளிக்கும்.

Variant Petrol Diesel
Sigma Rs 8,19,000 Rs 9,19,000
Delta Rs 8,80,000 Rs 9,80,000
Delta AT Rs 9,80,000 NA
Zeta Rs 9,57,000 Rs 10,57,000
Zeta AT Rs 10,57,000 NA
Alpha Rs 9,97,000 Rs 10,97,000
Alpha AT Rs 10,97,000 NA
ரூ.8.19 லட்சத்தில் புதிய மாருதி சியாஸ் கார் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த காரின் கலர்களை பொருத்தவரை நெக்ஸா ப்ளூ, மெட்டாலிக் மெக்மா க்ரே, பியர்ல் மிட் நைட் பிளாக், பியர்ல் சன்கேரியா ரெட், பியர்ல் மெட்டாலிக் டிக்னிட்டி பிரெளன், மெட்டாலிக் பிரிமியம் சில்வர், பியர்ல் ஸ்னோ ஒயிட் என மொத்தம் 7 விதமான கலர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

Most Read Articles

English summary
2018 Maruti Suzuki Ciaz Facelift Launched In India.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X