மாருதி சுஸுகி முதல் பிஎம்டபுள்யூ வரை... 2018 ஆட்டோ எக்ஸ்போவில் வெளிவரும் புதிய கார்கள் & விவரங்கள்

மாருதி சுஸுகி முதல் பிஎம்டபுள்யூ வரை... 2018 ஆட்டோ எக்ஸ்போவில் வெளிவரும் புதிய கார்கள் & விவரங்கள்..!!

By Azhagar

இந்தியாவின் ஆட்டோமொபைல் துறை வளர்ச்சிக்காக இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆட்டோ எக்ஸ்போ நடைபெற்று வருகிறது. 14வது முறையாக இந்தாண்டு நடைபெறும் ஆட்டோ எக்ஸ்போ டெல்லியில் வரும் 7ம் தேதி தொடங்குகிறது.

2018 ஆட்டோ எக்ஸ்போவில் பிரபல நிறுவனங்கள் புத்தம் புதிய கார்கள்..!!

உள்ளூர் முதல் உலகளவிலிருந்து பல்வேறு நிறுவனங்கள் தங்களது புதிய தயாரிப்புகள் மற்றும் எதிர்கால வாகன உருவாக்கத்திற்கான கான்செப்டுகளை 2018 ஆட்டோ எக்ஸ்போவில் அரங்கேற்றம் செய்கின்றன.

மிகுந்த எதிர்பார்ப்பிற்கிடையில் நடைபெறும் இந்த நிகழ்வில் இந்தியாவின் முன்னணி கார் நிறுவனங்கள் பங்கேற்கின்றன. இந்தாண்டு எக்ஸ்போவில் அவை காட்சிப்படுத்தும் புதிய ரக கார்களை பற்றி விவரங்கள் அறியலாம்.

மாருதி சுஸுகி

மாருதி சுஸுகி

இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனம் என்றால் அது மாருதி சுஸுகி தான். அனைத்து தரப்பு மக்களுக்கும் பயன்தரும் வகையிலான கார்களை தயாரிப்பது மாருதி சுஸுகியின் தனிச்சிறப்பு.

2018 ஆட்டோ எக்ஸ்போவில் பிரபல நிறுவனங்கள் புத்தம் புதிய கார்கள்..!!

2018 ஆட்டோ எக்ஸ்போவில் மாருதி சுஸுகி, வேகன் ஆர் ஹேட்ச்பேக் காரின் மூன்றாம் தலைமுறை மாடலை அறிமுகம் செய்கிறது. ஏற்கனவே வெளியான இந்த காரின் புகைப்படங்கள் மூலம் வேகன் ஆருக்கே உரிய டால் பாய் தோற்றம் இந்த புதிய தலைமுறை தயாரிப்பிலும் தொடர்கிறது.

Recommended Video

Auto Rickshaw Explodes In Broad Daylight
2018 ஆட்டோ எக்ஸ்போவில் பிரபல நிறுவனங்கள் புத்தம் புதிய கார்கள்..!!

சிறிய இக்னிஸ் கார் போன்ற வடிவமைப்பை இது பெற்றுள்ளதால், அதிக இடவசதி கொண்டதாக புதிய வேகன் ஆர் கார் இருக்கும். இதுதவிர தொடுதிரை இன்ஃபொடெயின்மென்ட் சிஸ்டம், ஏபிஎஸ் போன்ற வசதிகளுடன் புதிய அவதாரத்தில் ஆல்ட்டோ கார் வெளியிடப்படுகிறது.

2018 ஆட்டோ எக்ஸ்போவில் பிரபல நிறுவனங்கள் புத்தம் புதிய கார்கள்..!!

புதிய வேகன் ஆர் மற்றும் புதிய ஆல்ட்டோ ஆகிய மாடலை தொடர்ந்து எஸ்யூவி போன்ற வடிவமைப்பு மற்றும் அதிக கிரவுன்ட் கிளயரன்ஸ் உடன் ஒரு காரை 2018 ஆட்டோ எக்ஸ்போவில் மாருதி சுஸுகி அறிமுகம் செய்கிறது.

2018 ஆட்டோ எக்ஸ்போவில் பிரபல நிறுவனங்கள் புத்தம் புதிய கார்கள்..!!

இந்தியாவின் ஹேட்ச்பேக் கார் விற்பனையில் முதன்மை பெற்ற மாடலாக உள்ள ரெனோ க்விட் காருக்கு போட்டியாக மாருதி புதிய கார் விற்பனைக்கு வரும். ஹேட்ச்பேக் கார்களுக்கு மாருதி சுஸுகி தற்போது பயன்படுத்தி வரும் அதே எஞ்சின் மற்றும் கியர்பாக்ஸ் தேவை தான் இந்த புதிய மூன்று கார்களிலும் தொடரும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

2018 ஆட்டோ எக்ஸ்போவில் பிரபல நிறுவனங்கள் புத்தம் புதிய கார்கள்..!!

புதிய ஸ்விஃப்ட் காருக்கான பல்வேறு புதிய அப்பேட்டுகளை மாருதி சுஸுகி தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.

புத்தம் புதிய வடிவம், எளியதான கையாளும் திறன் கொண்ட புதிய ஸ்விஃப்ட் கார் இந்தாண்டின் ஹைலைட்டான அறிமுகம் என்றே சொல்லலாம்.

ஹூண்டாய்

ஹூண்டாய்

மாருதி சுஸுகி-க்கு சரிநிகர் போட்டியாக இந்தியாவில் உலா வரும் நிறுவனம் ஹூண்டாய். பயணிகள் ரக வாகன விற்பனையில் கலக்கும் அதே வேலையில் ப்ரீமியம் ரக வாகன விற்பனையிலும் ஹூண்டாய் சக்கைப்போடு போடுகிறது.

2018 ஆட்டோ எக்ஸ்போவில் பிரபல நிறுவனங்கள் புத்தம் புதிய கார்கள்..!!

இதற்கு காரணம் ஐ20 மற்றும் கிரெட்டா ஆகிய இரண்டு கார்கள். இதனுடைய ஸ்டைலான வடிவமைப்பு மற்றும் அசத்தும் செயல்திறன் ஆகியவை வாடிக்கையாளர்கள் வட்டத்தில் பெரிய வரவேற்பை பெற்றுள்ளன.

ஹூண்டாய்-க்கான ப்ரீமியம் அடையாளங்களாக இந்தியாவில் வலம் வரும் இந்த கார்களின் புதிய ஃபேஸ்லிஃட் மாடல்கள் 2018 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமாகின்றன. இதற்கான எதிர்பார்ப்பு எகிறிக்கிடக்கிறது.

2018 ஆட்டோ எக்ஸ்போவில் பிரபல நிறுவனங்கள் புத்தம் புதிய கார்கள்..!!

வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்ப கட்டமைப்புகளில் இந்த இரண்டு கார்களும் மேம்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் அதே செயல்திறன் தான் ஹூண்டாய் ஐ20 மற்றும் கிரெட்டா கார்களின் புதிய ஃபேஸ்லிஃப்ட் மாடல்களில் தொடர்கின்றன.

2018 ஆட்டோ எக்ஸ்போவில் பிரபல நிறுவனங்கள் புத்தம் புதிய கார்கள்..!!

காம்பேக்ட் எஸ்யூவி விற்பனையில் இந்தியளவில் ஹூண்டா கிரெட்டா தான் ராஜா. அதை சந்தையிலிருந்து ஓரம்கட்ட உள்ளூர் தொடங்கி சர்வதேச அளவில் பல்வேறு நிறுவனங்கள் முயன்று வருகின்றன. ஆனால் எதுவும் பலனளித்தப்பாடில்லை.

2018 ஆட்டோ எக்ஸ்போவில் பிரபல நிறுவனங்கள் புத்தம் புதிய கார்கள்..!!

இந்நிலையில் மாருதி சுஸுகி விட்டாரா பிரிஸ்ஸா, ஃபோர்டு ஈகோஸ்போர்ட், டாடா நெக்ஸான் ஆகிய மாடல்களுக்கு போட்டியாக தரமான ஒரு காம்பேக்ட் எஸ்யூவி காரை ஹூண்டாய் 2018 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்கிறது.

டாடா மோட்டார்ஸ்

டாடா மோட்டார்ஸ்

2018 ஆட்டோ எக்ஸ்போவில் டாடா செயல்திறன், ஸ்போர்ட்ஸ் மற்றும் மின்சார வடிவம் என அனைத்து கார் ரகங்களிலும் ஒரு கை பார்க்கலாம் என்று முடிவு செய்துள்ளது. அதன் படி இந்தாண்டு எக்ஸ்போவிற்கான திட்டங்களை டாடா வகுத்துள்ளது.

2018 ஆட்டோ எக்ஸ்போவில் பிரபல நிறுவனங்கள் புத்தம் புதிய கார்கள்..!!

அதன்படி, எல்550 பிளாட்ஃபார்ம் கீழ் தயாராகியுள்ள லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் காரில் இரண்டு புதிய மாடல்களை டாடா அறிமுகம் செய்கிறது. 5 இருக்கைகள் மற்றும் 7 இருக்கைகள் என இரண்டு மாடல்களில் இந்த புதிய கார்கள் வெளிவருகிறது.

2018 ஆட்டோ எக்ஸ்போவில் பிரபல நிறுவனங்கள் புத்தம் புதிய கார்கள்..!!

இந்த இரண்டு மாடல்களிலும் ஃபியட் தயாரித்த 2.0 லிட்டர் மல்டிஜெட் 2 டீசல் எஞ்சின் உள்ளது. 5 இருக்கைகள் கொண்ட லேண்ட்ரோவர் டிஸ்கவரி 140 பிஎச்பி பவரை வழங்கும். அதேபோல 7 இருக்கைகள் கொண்ட மாடல் 170 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும்.

2018 ஆட்டோ எக்ஸ்போவில் பிரபல நிறுவனங்கள் புத்தம் புதிய கார்கள்..!!

எல்550 லேண்ட்ரோவர் டிஸ்கவரி 5 சீட்டர் கிரெட்டா மற்றும் ரெனோ கேப்டூர் கார்களுக்கு போட்டியாக இருக்கும். இதே காரில் வெளிவரும் 7 சீட்டர் மாடல் ஜீப் காம்பஸ் காருக்கு நேரடியாக போட்டியாக வெளிவருகிறது.

செயல்திறன் மிக்க மாடல்களை தொடர்ந்து டாடா மோட்டார்ஸ் ஜெயம் ஆட்டோமோட்டிவ் கூட்டணியில் உருவாகியுள்ள டியாகோ ஸ்போர்ட்ஸ் மாடல் 2018 ஆட்டோ எக்ஸ்போவில் வெளிவருகிறது.

2018 ஆட்டோ எக்ஸ்போவில் பிரபல நிறுவனங்கள் புத்தம் புதிய கார்கள்..!!

1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் கொண்டுள்ள இந்த கார் 110 பிஎச்பி பவரை வழங்கும். இதே எஞ்சின் தேர்வு தான் டாடா நெக்ஸான் மாடலிலும் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த கார் மாருதி சுஸுகி பலனோ ஆர்.எஸ், ஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடி ஆகிய மாடல்களுடன் போட்டி போடுகிறது. இவற்றுடன் டிகோர், டியாகோ மற்றும் நேனோ ஆகிய கார்களின் மின்சார திறன் பெற்ற வெர்ஷன்களையும் டாடா வெளியிடுகிறது.

ஹோண்டா

ஹோண்டா

இந்தியாவின் கார் ஆர்வலர்கள் பலர் ஹோண்டாவின் ஜாஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடல் பார்க்க ஆவலாக காத்திருக்கின்றனர். டெல்லி ஆட்டோ எக்ஸ்போவிற்கு முன்னதாக ஃபிராங்பூர்ட் மோட்டார் கண்காட்சில் இந்த கார் அறிமுகம் செய்யப்பட்டுவிட்டது.

2018 ஆட்டோ எக்ஸ்போவில் பிரபல நிறுவனங்கள் புத்தம் புதிய கார்கள்..!!

ஜாஸ் ஃபேஸ்லிஃப்ட் கார் அதே செயல்திறனை தான் கொண்டிருக்கிறது என்ற போதிலும் வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன.

ஜாஸ் காரை தொடர்ந்து காம்பேக்ட் செடான் செக்மென்டில் முற்றிலும் புதிய அமேஸ் காரை மாருதி சுஸுகி டிசையருக்கு போட்டியாக ஹோண்டா களமிறக்குகிறது.

2018 ஆட்டோ எக்ஸ்போவில் பிரபல நிறுவனங்கள் புத்தம் புதிய கார்கள்..!!

இதற்கும் வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்ப அம்சங்களில் தான் புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதே எஞ்சின் தேர்வு தான். இந்த இரு மாடல்களுக்கு பிறகு ஹோண்டா வெளியிடும் புதிய சி.ஆர்-வி கார் பெரிய எதிர்பார்ப்பில் உள்ளது.

2018 ஆட்டோ எக்ஸ்போவில் பிரபல நிறுவனங்கள் புத்தம் புதிய கார்கள்..!!

இந்தியாவில் எஸ்யூவி கார் விற்பனையில் முன்னணியில் உள்ள ஹோண்டா சி.ஆர்-வி 5வது தலைமுறை மாடலாக 1.6 லிட்டர் டீசல் எஞ்சினுடன் 2018 ஆட்டோ எக்ஸ்போவில் களமிறங்குகிறது. இது ஹூண்டாய் டஸ்கான் மற்றும் ஜீப் காம்பஸ் கார்களுக்கு போட்டியாக இருக்கும்.

மஹிந்திரா

மஹிந்திரா

தென்கொரியாவை சேர்ந்த சாங்யாங் நிறுவனம் மஹிந்திரா நிறுவனத்தின் கீழ் இயங்கி வருவது நம் அனைவருக்கும் தெரிந்தது தான். 2018 ஆட்டோ எக்ஸ்போவில் மஹிந்திரா வெளியிடும் பெரும்பாலான தயாரிப்புகள் சாங்யாங்கின் தயாரிப்புகள் தான்.

2018 ஆட்டோ எக்ஸ்போவில் பிரபல நிறுவனங்கள் புத்தம் புதிய கார்கள்..!!

அந்த வகையில் சாங்யாங் டிவோலி கிராஸோவர் காரை அடிப்படையாக கொண்டு 5 இருக்கைகள் மற்றும் 7 இருக்கைகள் தேர்வுகளுடன் கூடிய இரண்டு மாடல்களை மஹிந்திரா வெளியிடுகிறது. இதில் 5 இருக்கைகள் கொண்ட கார் அதிக கிரவுண்ட் கிளயரஸ் கொண்ட இந்த கார் மாருதி சுஸுகி விட்டாரா பிரிஸ்ஸாவிற்கு நேரடி போட்டியாக உள்ளது.

2018 ஆட்டோ எக்ஸ்போவில் பிரபல நிறுவனங்கள் புத்தம் புதிய கார்கள்..!!

அதேபோன்ற தயாரிப்பை கொண்ட 7 இருக்கைகள் கொண்ட மாடல் ஹூண்டாய் கிரெட்டா மற்றும் ரேனோ டஸ்டர் ஆகிய கார்களுக்கு போட்டியாக கிராஸோவர் மாடலாக இருக்கும்.

2018 ஆட்டோ எக்ஸ்போவில் பிரபல நிறுவனங்கள் புத்தம் புதிய கார்கள்..!!

புத்தம் புதிய 1.5 லிட்டர் டர்போ டீசல் மற்றும் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின்கள் இந்த காரில் பொருத்தப்பட்டுள்ளதாக மஹிந்திரா தகவல் வெளியிட்டுள்ளது.

முன்னதாக சாங்யாங் நிறுவனம் தென்கொரியா சியோல் மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்து வைத்த புதிய ரெக்ஸ்டன் எஸ்யூவி காரை டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தவுள்ளது.

2018 ஆட்டோ எக்ஸ்போவில் பிரபல நிறுவனங்கள் புத்தம் புதிய கார்கள்..!!

20 இஞ்ச் அலாய் சக்கரங்கள், இலகுவான எடை, எளிதாக கையாளும் திறன், அதிகரிக்கபட்ட அளவுகள் கொண்ட இந்த ப்ரீமியம் எஸ்யூவி கார் 2.2 லிட்டர் டர்போ டீசல் எஞ்சின் மற்றும் 7 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கூட்டணியில் இயங்கும்.

2018 ஆட்டோ எக்ஸ்போவில் பிரபல நிறுவனங்கள் புத்தம் புதிய கார்கள்..!!

இதுதவிர யூ321 என்ற குறியீட்டில் புதிய எம்விபி காரையும் மஹிந்திரா 2018 ஆட்டோ எக்ஸ்போவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஸைலோவிற்கு மாற்றாக வரும் என ஆட்டோ துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

2018 ஆட்டோ எக்ஸ்போவில் பிரபல நிறுவனங்கள் புத்தம் புதிய கார்கள்..!!

டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா மற்றும் டாடா நெக்ஸாவிற்கு போட்டியாக வெளிவரும் இந்த கார் 1.6 லிட்டர் எம் பிளாகான் டீசல் எஞ்சின் உள்ளது. இது 130 பிஎச்பி பவர் வரை வழங்கும்.

இந்த எம்விபி மாடலை மஹிந்திரா சாங்யாங் நிறுவனத்துடன் இணைந்து 7 இருக்கைகள் மற்றும் 8 இருக்கைகள் கொண்ட இரண்டு மாடல்களில் தயாரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

டொயோட்டா

டொயோட்டா

ஹேட்ச்பேக் தொடங்கி எம்விபி செக்மென்ட் வரை அனைத்து பிரிவு கார் விற்பனையிலும் வெற்றிக்கொடி நாட்டிய நிறுவனம் என்றால் டொயோட்டா, ஜப்பானை சேர்ந்த இந்த நிறுவனத்திற்கு உலகளவில் வாடிக்கையாளர்கள் வட்டம் பெருக்கிக்கொண்டே உள்ளது.

2018 ஆட்டோ எக்ஸ்போவில் பிரபல நிறுவனங்கள் புத்தம் புதிய கார்கள்..!!

2018 ஆட்டோ எக்ஸ்போவில் டொயோட்டா அறிமுகம் செய்யும் மாடல்கள் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் எட்டியோஸ் செடான் காருக்கு மாற்றாக வரும் வியோஸ் பெரிய எதிர்பார்ப்பை பெற்றுள்ளது.

2018 ஆட்டோ எக்ஸ்போவில் பிரபல நிறுவனங்கள் புத்தம் புதிய கார்கள்..!!

அதிக இடவசதிக்கொண்ட இந்த கார் பார்ப்பதற்கு மினி கேம்ரி போன்ற தோற்றத்தை தருகிறது. நம்பகத்தன்மையான பல தொழில்நுட்ப அம்சங்கள் இந்த காரில் இடம்பெற்றிருக்கும் என பல தகவல்கள் தொடர்ந்து வந்துக்கொண்டியிருக்கின்றன.

2018 ஆட்டோ எக்ஸ்போவில் பிரபல நிறுவனங்கள் புத்தம் புதிய கார்கள்..!!

எட்டியோஸ் காரில் இருக்கும் அதே எஞ்சின் தான் இந்த மின் கேம்ரி தோற்றம் கொண்ட வியோஸ் காரிலும் உள்ளது. அதேபோல புதிய கேம்ரி காரின் ஹைஃபிரிட் மாடல் காரையும் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் வெளிவருகிறது.

2.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் ஹைஃபிரிட் அமைப்பு தான் இந்த காரில் இடம்பெற்றுள்ளது,. பார்க்க அம்சமாகவும், அதிக தொழில்நுட்பம் மற்றும் டிசைனிங் தேவைகளையும் இந்த கார் பெற்றுள்ளது.

2018 ஆட்டோ எக்ஸ்போவில் பிரபல நிறுவனங்கள் புத்தம் புதிய கார்கள்..!!

இந்த மாடல்களோடு புதிய லேண்ட்க்ரூஸர் பிரோடா எஸ்யூவி காரையும் டொயோட்டா 2018 ஆட்டோ எக்ஸ்போவில் வெளியிடுகிறது. எஞ்சின் தேவைகளில் இந்த காரில் மாற்றம் இல்லை என்று சொல்லப்பட்டுள்ள நிலையில், டிசைன் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த தேவைகள் மேம்படுத்தப்பட்டு இருக்கலாம்.

ரெனோ

ரெனோ

முன்பே கூறியது போல 2018 ஆட்டோ எக்ஸ்போவில் பல மின்சார திறன் பெற்ற வாகனங்கள் அறிமுகம் செய்யப்படவுள்ளன. அவற்றில் ரெனோ நிறுவனம் சோயி என்ற மின்சார காரை இந்த நிகழ்வில் காட்சிப்படுத்தவுள்ளது.

இந்த காரின் பேட்டரியை ஒரு மணிநேரத்திற்குள்ளாகவே 80 சதவீத சார்ஜிங் செய்ய முடியும். மேலும் இந்த கார் மணிக்கு 300 கி.மீ வரை செல்லும் என்று ரெனோ தகவல் வெளியிட்டுள்ளது.

2018 ஆட்டோ எக்ஸ்போவில் பிரபல நிறுவனங்கள் புத்தம் புதிய கார்கள்..!!

புதிய வடிவிலான டஸ்டர் காரை ரெனோ நிறுவனம் 2018 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்கிறது. இதற்கான எஞ்சினில் எந்த மாற்றமும் இல்லாத நிலையில், புதிய டஸ்டர் காரின் வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த கட்டமைப்புகள் பெரிய மாற்றத்தை பெறவுள்ளன.

இவற்றை தவிர, சிஎம்எஃப் பிளாட்ஃபார்மை அடிப்படையாகக்கொண்டு ரெனோ தயாரித்து வரும் 7 இருக்கைகள் கொண்ட மின்சார காரும் இந்த நிகழ்வில் வெளியிடப்படுகிறது.

கியா

கியா

2018 ஆட்டோ எக்ஸ்போவில் எல்லா நிறுவனங்களையும் விட பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருப்பது கியா தான். இந்தியாவில் முதன்முறையாக அறிமுகமாகும் இந்நிறுவனம், பிசான்டோ மற்றும் ரியோ ஹேட்ச்பேக் கார்கள், ஸ்டோனிக் மற்றும் சோஸ் கிராஸோவர் மாடல்கள், சொரென்டோ மற்றும் ஸ்போர்டேஜ் என்ற எஸ்யூவி மாடல்கள், ஆப்டிமா மற்றும் கிரெட்டா செடான்ஆகிய கார்களை இந்த நிகழ்வில் அறிமுகப்படுத்த சாத்தியம் உண்டு.

மெர்சிடிஸ் பென்ஸ்

மெர்சிடிஸ் பென்ஸ்

3வது தலைமுறைக்கான கூபே ஸ்டைல் சிஎல்எஸ் காரை மெர்சிடிஸ் பென்ஸ் இந்த நிகழ்வில் களமிறக்குகிறது. எஸ் கிளாஸ் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலும் 2018 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்கிறது மெர்சிடிஸ் பென்ஸ்.

இ கிளாஸ் செடானை அடிப்படையாக கொண்டு மெர்சிடிஸ் தயாரித்திருக்கும் இ- கிளாஸ் ஆல் டேரேன் மற்றும் இ.கியூ மின்சார எஸ்யூவி கான்செப்ட்டையும் மெர்சிடிஸ் பென்ஸ் இந்த நிகழ்வில் உலக பார்வைக்கு கொண்டுவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிஎம்டபுள்யூ

பிஎம்டபுள்யூ

செயல்திறன் மிக்க வாகன விற்பனையில் கலக்கி வரும் மெர்சிடிஸ் பென்ஸ் இ கிளாஸ் எல்டபுள்யூபி காருக்கு போட்டியாக 6 சிரீஸ் ஜிடி காரை 2018 ஆட்டோ எக்ஸ்போவில் வெளியிடுகிறது பிஎம்டபுள்யூ.

பிஎம்டபுள்யூ 6 சிரீஸ் ஜிடி அதே கிரவுண்டு கிளயரன்ஸ் மற்றும் ஏர் சஸ்பென்ஷனில் கூடுதல் வசதி ஆகியவற்றுடன் சிறந்த தயாரிப்பாக உள்ளது. 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சினில் இந்த கார் அறிமுகமாகிறது.

2018 ஆட்டோ எக்ஸ்போவில் பிரபல நிறுவனங்கள் புத்தம் புதிய கார்கள்..!!

முற்றிலும் புதிய எக்ஸ்.3, எக்ஸ்.2 மற்றும் எக்ஸ்.4 ஆகிய எஸ்யூவி மாடல்களை ஆடி கியூ5, மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி ஆகிய கார் மாடல்களுக்கு போட்டியாக பிஎம்டபுள்யூ காட்சிப்படுத்தவுள்ளது.

இதனுடன் புதிய இசட்4 ரோட்ஸ்டார் காரும் அறிமுகாக இருப்பது கூடுதல் தகவல். 2.0 பெட்ரோல் எஞ்சின் உள்ள இந்த கார் முந்தையை காரை விட மிகவும் எடை குறைந்திருப்பதாக பிஎம்டபுள்யூ தெரிவித்துள்ளது.

2018 ஆட்டோ எக்ஸ்போவில் பிரபல நிறுவனங்கள் புத்தம் புதிய கார்கள்..!!

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தியாவில் நடத்தப்பட்டு வரும் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் நிறுவனங்களின் பங்களிப்பு ஒவ்வொரு ஆண்டும் குறைந்துக்கொண்டே வருகிறது. ஆனால் வாகன ஆர்வலர்கள் மற்றும் வாடிக்கையாளர்களிடையே ஆட்டோ எக்ஸ்போவிற்கான வரவேற்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

ஹேட்ச்பேக் தொடங்கி செடான், எஸ்யூவி, காம்பேக்ட் எஸ்யூவி, கிராஸோவர், டிரக் கன ரக வாகனங்கள் என பல்வேறு விதமான தயாரிப்புகள் 2018 ஆட்டோ எக்ஸ்போவை அலங்கரிக்கவுள்ளன.

Most Read Articles
English summary
Read in Tamil: Maruti Suzuki To BMW 2018 Auto Expo Highlights. Click for Details...
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X