மாருதி சுஸுகி ஹேட்ச்பேக் விற்பனையில் பலேனோவிற்கு போட்டியாக உருவெடுக்கிறதா 2018 ஸ்விஃப்ட் கார்..??

Posted By:

மாருதி சுஸுகி நிறுவனம் எதிர்பார்த்தபடியே புதிய தலைமுறைக்கான ஸ்விஃப்ட் காரை டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

5ம் தலைமுறைக்கான பலேனோ கார் தயாரிக்கப்பட்ட அதே ஹார்டெக்ட் பிளாட்பாரமின் கீழ் தான் 3ம் தலைமுறை ஸ்விஃப்ட் கார் தயாரிக்கப்பட்டுள்ளது.

2018 ஸ்விஃப்ட் Vs பலேனோ: மாருதி சுஸுகி-க்குள் ஒரு கடும் போட்டி..!!

ரூ. 11,000 தொடக்க விலையில் புதிய ஸ்விஃப்ட் காருக்கான முன்பதிவு தொடங்கிய நாளிலிருந்தே வாடிக்கையாளர்களிடம் பெரிய எதிர்பார்ப்பை இந்த கார் பெற்றிருந்தது.

2018 ஸ்விஃப்ட் Vs பலேனோ: மாருதி சுஸுகி-க்குள் ஒரு கடும் போட்டி..!!

மாருதி சுஸுகியின் ஹேட்ச்பேக் மாடல்கள் விற்பனையில் பலேனோ கார் முன்னிலை வகிக்கிறது. இந்திய சந்தையில் பலேனோ மற்றும் புதிய ஸ்விஃப்ட் மாடல் இரண்டும் சரிநிகர் போட்டியாக உருவாகலாம் என்பதே பலரது கணிப்பு.

2018 ஸ்விஃப்ட் Vs பலேனோ: மாருதி சுஸுகி-க்குள் ஒரு கடும் போட்டி..!!

இந்நிலையில் பலேனோ மாடலின் வடிவமைப்பு, செயல்திறன், அம்சம், கட்டமைப்பு ஆகியவற்றுடன் புதிய ஸ்விஃப்ட் காரை தரம் எவ்வாறு உள்ளது என்பதை ஒப்பிட்டு பார்க்கலாம்.

Recommended Video - Watch Now!
Ford Freestyle Walk-Around In 360
வெளிப்புற கட்டமைப்பு:

வெளிப்புற கட்டமைப்பு:

புதிய ஸ்விஃப்ட் காரின் வெளிப்புற கட்டமைப்பு முற்றிலும் புதிய அம்சங்களை பெற்றுள்ளது. அதன்படி புதிய எல்.இ.டி மற்றும் எல்.இ.டி பகல் நேர விளக்குகள் வெளிப்புற கட்டமைப்பில் உள்ளன.

2018 ஸ்விஃப்ட் Vs பலேனோ: மாருதி சுஸுகி-க்குள் ஒரு கடும் போட்டி..!!

அவற்றுடன் புதிய க்ரில். 15 இஞ்ச் அலாய் சக்கரங்கள், புதிய டெயில் விளக்குகள், சி பில்லர் வடிவிலான கதவின் பிடிமானம் உட்பட பல்வேறு அம்சங்கள் புதிய ஸ்விஃப்ட் காரில் கவனமீர்க்கின்றன.

2018 ஸ்விஃப்ட் Vs பலேனோ: மாருதி சுஸுகி-க்குள் ஒரு கடும் போட்டி..!!

ஒரு ஸ்போர்ட்டி தரத்தில் தோற்றமளிப்பதாக ஸ்விஃப்ட் கார் இருந்தாலும், பலேனோ மாடல் 3டி அடுக்கு கொண்ட முன்பக்க கிரில், அகலமான ஏர் டேம்ஸ், கிரோம் வடிவம் பெற்ற கதவு பிடிமானம் என ப்ரீமியம் தரத்தின் மொத்த உருவமாக உள்ளது.

2018 ஸ்விஃப்ட் Vs பலேனோ: மாருதி சுஸுகி-க்குள் ஒரு கடும் போட்டி..!!

மேலும் இந்த காரின் வெளிப்புற கட்டமைப்பில் 15 இஞ்ச் அலாய் சக்கரங்கள், ஒருங்கிணைந்த பின்புற பகுதிக்கு தேவையான ஸ்பாய்லர் ஆகியவற்றை பலேனோ கார் பெற்றுள்ளது.

வடிவமைப்பு:

வடிவமைப்பு:

3840மிமீ நீளம், 1735மிமீ அகலம், 1530மிமீ உயரம், 2450மிமீ வீல்பேஸ் மற்றும் 135 கிரவுண்டு கிளியரஸ் ஆகிய அளவீட்டில் புதிய தலைமுறைக்கான ஸ்விஃப்ட் கார் தயாராகியுள்ளது.

பலேனோ ப்ரீமியம் கார் 3995 மிமீ நீளம், 1510மிமீ அகலம், 1510மிமீ உயரம், 2520மிமீ வீல்பேஸ் மற்றும் 170மிமீ கிரவுன்டு கிளயரன்ஸ் ஆகிய அளவீடுகளை பெற்றுள்ளது.

எஞ்சின் செயல்பாடு:

எஞ்சின் செயல்பாடு:

தற்போதைய ஸ்விஃப்ட் காரில் உள்ள அதே செயல்திறன் தான் இந்த புதிய தலைமுறை காரிலும் உள்ளன. 1.2 லிட்டர் கே12 பெட்ரோல் மற்றும் 1.3 லிட்டர் டிடிஐஎஸ் ஆகிய எஞ்சின் தேர்வுகளில் இந்த கார் வெளிவருகிறது.

2018 ஸ்விஃப்ட் Vs பலேனோ: மாருதி சுஸுகி-க்குள் ஒரு கடும் போட்டி..!!

இதன்மூலம் பெட்ரோல் எஞ்சின் கொண்ட 2018 ஸ்விஃப்ட் கார் 83 பிஎச்பி பவர் மற்றும் 140 என்.எம் டார்க் திறனை வழங்கும்.

அதேபோல டீசல் எஞ்சின் கொண்ட 2018 ஸ்விஃப்ட் கார் 74 பிஎச்பி பவர் மற்றும் 190 என்.எம் டார்க் திறனை வழங்கும்.

2018 ஸ்விஃப்ட் Vs பலேனோ: மாருதி சுஸுகி-க்குள் ஒரு கடும் போட்டி..!!

மாருதி சுஸுகியின் ஹேட்ச்பேக் கார் விற்பனையில் முன்னணியில் உள்ள பலேனோ மாடலும் இதே எஞ்சின் செயல்திறனையே பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கியர்பாக்ஸ்:

கியர்பாக்ஸ்:

புதிய ஸ்விஃப்ட் காரின் வேரியன்டுகள் அனைத்திலும் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ்வ ழங்கப்பட்டுள்ளது. ஏஎம்டி கியர்பாக்ஸ் சில குறிப்பிட்ட வேரியண்ட்டுகளில் மட்டுமே தேர்வு செய்ய முடியும்.

2018 ஸ்விஃப்ட் Vs பலேனோ: மாருதி சுஸுகி-க்குள் ஒரு கடும் போட்டி..!!

இதே டிரான்ஸ்மிஷன் தேவைகளில் தான் பலேனோ கார் வெளிவருகிறது. ஆனால் சிவிடி உடன் கூடிய கியர்பாக்ஸ் பலேனோவின் பெட்ரோல் வேரியன்டுகளில் மட்டும் உள்ளன.

தொழில்நுட்பம் & பாதுகாப்பு அம்சங்கள்:

தொழில்நுட்பம் & பாதுகாப்பு அம்சங்கள்:

புதிய ஸ்விஃப்ட் காரின் உள்கட்டமைப்பில் உள்ள 7 இஞ்ச் இன்ஃபொடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. இதில் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே, 3 ஸ்போக் உடன் கூடிய ஸ்டீயரிங் வீல் ஆகியவை உள்ளன.

2018 ஸ்விஃப்ட் Vs பலேனோ: மாருதி சுஸுகி-க்குள் ஒரு கடும் போட்டி..!!

மேலும் பாதுகாப்பு தேவைகளுக்காக டூயல் ஏர்பேகுகள், ஏபிஎஸ் உடன் கூடிய இபிடி, பிரேக் அசிஸ்ட், குழந்தைகளின் பாதுகாப்பிற்கான ஐசோஃபிக்ஸ் இருக்கை ஆகிய அம்சங்கள் புதிய ஸ்விஃப்ட் காரின் எல்லா வேரியன்டுகளிலும் உள்ளன.

2018 ஸ்விஃப்ட் Vs பலேனோ: மாருதி சுஸுகி-க்குள் ஒரு கடும் போட்டி..!!

பலேனோ காரில் இடம்பெற்றுள்ள இன்ஃபொடெயின்மென்ட் சிஸ்டத்தில் ஆப்பிள் கார்பிளே, ஸ்மார்ட்ஃபோன் கனெக்ட்டிவிட்டி, நேவிகேஷன் சிஸ்டம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

2018 ஸ்விஃப்ட் Vs பலேனோ: மாருதி சுஸுகி-க்குள் ஒரு கடும் போட்டி..!!

அதேபோல ஆடியோ கட்டளைகளை கொண்ட 3 ஸ்போக் ஸ்டீயரிங் வீல், கேமரா உடன் கூடிய ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார், குழந்தைகளுக்கான ஐசோஃபிக்ஸ் இருக்கை, டூயல் ஏர்பேக்ஸ், ஏபிஎஸ் உடன் கூடிய ஏபிஎஸ் போன்ற அம்சங்களும் பலேனோ காரில் உள்ளன.

விலை

விலை

புதிய மாருதி ஸ்விஃப்ட் காரின் பெட்ரோல் மாடல் ரூ.4.99 லட்சம் முதல் ரூ.7.39 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையிலும், டீசல் மாடல் ரூ.5.99 லட்சம் முதல் ரூ.8.29 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையிலும் கிடைக்கும்.

2018 ஸ்விஃப்ட் Vs பலேனோ: மாருதி சுஸுகி-க்குள் ஒரு கடும் போட்டி..!!

தற்போது விற்பனையில் உள்ள மாருதி பலேனோ கார் வேரியன்டுகளுக்கு ஏற்றவாறு ரூ. 5.35 லட்சம் முதல் ரூ. 8.5 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) வரை விலை பெறுகிறது.

2018 ஸ்விஃப்ட் Vs பலேனோ: மாருதி சுஸுகி-க்குள் ஒரு கடும் போட்டி..!!

புதிய ஸ்விஃப்ட் காரின் விலை எதிர்பார்த்தபடியான விலைக்குள் அறிவிக்கப்பட்டுள்ளதால், இந்தியாவின் ஹேட்ச்பேக் விற்பனையில் பலேனோவிற்கு 2018 ஸ்விஃப்ட் நெருக்கடியை ஏற்படுத்தலாம்.

2018 ஸ்விஃப்ட் Vs பலேனோ: மாருதி சுஸுகி-க்குள் ஒரு கடும் போட்டி..!!

அதேபோல ப்ரீமியம் தர பலேனோ ஹேட்ச்பேக் கார் சிறந்த வடிவமைப்பு மற்றும் அம்சங்களுடன் தயாரிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான ப்ரீமியம் ஹேட்ச்பேக் விரும்பிகள் பலேனோவை கடக்காமல் இருக்க முடியாது.

2018 ஸ்விஃப்ட் Vs பலேனோ: மாருதி சுஸுகி-க்குள் ஒரு கடும் போட்டி..!!

ஸ்டைல் மற்றும் சிறப்பம்சங்களை கணிக்கில் கொண்டு கார் வாங்க நீங்கள் விரும்பினால் ஸ்விஃப்ட் சிறந்த தேர்வாக இருக்கும். அதே சமயத்தில் பட்ஜெட் மற்றும் இடவசதியை வேண்டுபவர்களுக்கு பலேனோ சரியான தேர்வாக இருக்கும்.

English summary
Read in Tamil: A Comparative Study between 2018 Maruti Swift and Baleno Hatcback. Click for Details...

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark