புதிய மஸராட்டி லெவன்ட்டே சூப்பர் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

Written By:

மஸராட்டி நிறுவனத்தின் முதல் எஸ்யூவி மாடலான லெவன்ட்டே எஸ்யூவி இன்று இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் முழுமையாக காணலாம்.

புதிய மஸராட்டி லெவன்ட்டே சூப்பர் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

மஸராட்டி லெவன்ட்டே எஸ்யூவி க்ரான்லஸ்ஸோ மற்றும் க்ரான்ஸ்போர்ட் என்ற இரண்டு வேரியண்ட்டுகளில் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. பெங்களூர், மும்பை மற்றும் புதுடெல்லியில் உள்ள மூன்று மஸராட்டி டீலர்கள் வழியாக இந்த புதிய பிரிமியம் எஸ்யூவி மாடல் விற்பனைக்கு கிடைக்கிறது.

Recommended Video - Watch Now!
Ducati 959 Panigale Crashes Into Buffalo - DriveSpark
புதிய மஸராட்டி லெவன்ட்டே சூப்பர் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய மஸராட்டி லெவன்ட்டே எஸ்யூவி வெளிநாடுகளில் 3.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 3.0 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இந்தியாவில் 3.0 லிட்டர் வி6 டீசல் எஞ்சின் மாடலில் மட்டுமே விற்பனைக்கு கிடைக்கும்.

புதிய மஸராட்டி லெவன்ட்டே சூப்பர் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 271 பிஎச்பி பவரையும், 600 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது. 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது. மஸராட்டி கிப்லி மற்றும் க்வார்டோபோர்ட்டே ஆகிய கார் மாடல்களில் இருக்கும் அதே எஞ்சின்தான் இது.

புதிய மஸராட்டி லெவன்ட்டே சூப்பர் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

மஸராட்டி லெவன்ட்டே எஸ்யூவியில் இருக்கும் 3.0 லிட்டர் வி6 டீசல் எஞ்சின் மூலமாக இந்த கார் 0 - 100 கிமீ வேகத்தை வெறும் 6.9 வினாடிகளில் எட்டிவிடும் வல்லமையை தருகிறது. அதிகபட்சமாக மணிக்கு 230 கிமீ வேகம் வரை செல்லும்.

புதிய மஸராட்டி லெவன்ட்டே சூப்பர் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

மஸராட்டி லெவன்ட்டே எஸ்்யூவியில் ஆக்டிவ் சவுண்ட் என்ற விசேஷ புகைப்போக்கி சப்த அமைப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதனால், டிரைவிங் மோடுக்கு தக்கபடி, புகைப்போக்கி சப்தம் வேறுபடும். ஆட்டோ நார்மல், ஆட்டோ ஸ்போர்ட் மற்றும் ஆட்டோ - மேனுவல் ஆகிய மூன்று டிரைவிங் மோடுகள் சாதாரண சாலைகளுக்கும், ஆட்டோ ஆஃப்ரோடு என்ற டிரைவிங் மோடு, கரடு முரடான சாலைகளுக்கும் பயன்படும். ஆட்டோ ஆஃப்ரோடு மோடில் காரின் தரை இடைவெளி மிக அதிக அளவில் இருக்குமாறு உயர்த்திக் கொள்ளும்.

புதிய மஸராட்டி லெவன்ட்டே சூப்பர் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய மஸராட்டி லெவன்ட்டே எஸ்யூவியில் ஹைட்ராலிக் ஸ்டீயரிங் சிஸ்டம், டார்க் வெக்டரிங் சேஸீ மற்றும் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் ஆகியவை மிக முக்கிய தொழில்நுட்ப அம்சங்களாக இருக்கின்றன. இந்த எஸ்யூவி இலகு எடை கொண்ட உதிரிபாகங்களுடன் கட்டமைக்கப்பட்டு இருக்கிறது. மேலும், 50:50 என்ற எடை விகிதாச்சாரத்தில் கட்டமைப்பு பெற்றிருப்பதால் சிறப்பான நிலைத்தன்மையுடன் செல்லும்.

புதிய மஸராட்டி லெவன்ட்டே எஸ்யூவியில் 8.4 அங்குல உயர் துல்லிய திரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது. இதனை தொடு உணர் அமைப்பு மற்றும் ரோட்டரி நாப் அமைப்பு மூலமாக கட்டுப்படுத்த முடியும்.

புதிய மஸராட்டி லெவன்ட்டே சூப்பர் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

உட்புறத்தில் பல பிரிமியம் அம்சங்களையும், உதிரிபாகங்களையும் பெற்றிருக்கிறது. உயர்தர லெதர் இருக்கைகள்,அலுமனியம் மற்றும் அலங்கார மரத்தகடுகளுடன் அலங்கரிக்கப்பட்டு இருக்கின்றன. விருப்பத்தின்பேரில், போவர்ஸ் அண்ட் வில்கின்ஸ் அல்லது ஹார்மன் கார்டன் மியூசிக் சிஸ்டத்தை பொருத்திக் கொள்ளும் வாய்ப்பும் வழங்கப்படுகிறது.

புதிய மஸராட்டி லெவன்ட்டே சூப்பர் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய மஸராட்டி லெவன்ட்டே எஸ்யூவியில் ஓட்டுனருக்கு உதவி செய்யும் மிக நவீன தொழில்நுட்பங்கள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. ஹைவே அசிஸ்ட், லேன் கீப்பிங் அசிஸ்ட், ஆக்டிவ் பிளைண்ட் ஸ்பாட் அசிஸ்ட் மற்றும் சிக்னலை கண்டறிந்து தெரிவிக்கும் வசதிகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.

புதிய மஸராட்டி லெவன்ட்டே சூப்பர் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய மஸராட்டி லெவன்ட்டே எஸ்யூவி ரூ.1.45 கோடி எக்ஸ்ஷோரூம் விலையில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. மஸராட்டி பிராண்டின் மதிப்பை தக்கவைக்கும் ஏராளமான அம்சங்களுடன் இந்திய எஸ்யூவி பிரியர்களை புதிய மஸராட்டி லெவன்ட்டே கவரும் என்று நம்பலாம்.

மேலும்... #மஸராட்டி #maserati
English summary
Maserati Levante Launched In India.
Story first published: Monday, January 29, 2018, 18:45 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark