இந்தியாவின் முதல் மெக்லாரன் சூப்பர் கார் மும்பையில் வந்திறங்கியது

இந்தியர்கள் மத்தியில் சமீபமாக சூப்பர் கார்கள் மீது ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது. பலர் சூப்பர் கார்களை வாங்கி வருகின்றனர். அதையும் நாம் அவ்வப்போது பார்த்து வருகிறோம்.

By Balasubramanian

இந்தியர்கள் மத்தியில் சமீபமாக சூப்பர் கார்கள் மீது ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது. பலர் சூப்பர் கார்களை வாங்கி வருகின்றனர். அதையும் நாம் அவ்வப்போது பார்த்து வருகிறோம். இதற்கு முக்கியமான காரணம் இந்தியாவில் ஆங்காங்கே ரோடுகளின் தரம் உயர்ந்து வருகிறது. முறையான பரமரிப்பு செய்யப்படுவதால் அங்கு சூப்பர்களை எளிதாக ஓட்டி செல்லலாம்.

இந்தியாவின் முதல் மெக்லாரன் சூப்பர் கார் மும்பையில் வந்திறங்கியது

இந்நிலையில் இந்தியாவிற்கு என தயாரிக்கப்பட்ட வலதுபக்கம் டிரைவிங் உள்ள முதல் மெக்லாரன் 720 எஸ் கார் இந்தியா வந்திறங்கியது. மஹாராஷ்டிரா மாநிலம் புனேவை சேர்ந்த ஒருவர் இந்த காரை வாங்கியுள்ளார். எக்ஸாட்டிக் புனாவாலா என்ற கராஜில் இந்த கார் வந்திறங்கியுள்ளது.

இந்தியாவின் முதல் மெக்லாரன் சூப்பர் கார் மும்பையில் வந்திறங்கியது

மெக்லாரன் 720 எஸ் என்ற இந்த கார் மொத்தம் உலகிலேயே மொத்தமே 400 கார்கள் தான் தயாரிக்கப்பட்டுள்ளன. இதுவரை இந்தியாவில் பெங்களூருவில் உள்ள ஒருவரும், மும்பையில் உள்ள ஒருவரும் இந்த காரை வாங்கி இந்தியாவிற்கு கொண்டு வந்துள்ளனர். ஆனால் அந்த கார்கள் எல்லாம் துபாயில் பதிவு செய்யப்பட்டு இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டது.

இந்தியாவின் முதல் மெக்லாரன் சூப்பர் கார் மும்பையில் வந்திறங்கியது

இந்த கார்கள் தான் இந்தியாவிற்காக வலதுபக்கம் டிரைவ்உடன் தயாரிக்கப்பட்டு இந்தியாவின் பதிவெண்பெறுகிறது. பொதுவாக வெளிநாடுகளில் பதிவு செய்யப்பட்டு இந்தியா கொண்டு வரும் வாகனங்கள் இறுதியில் எந்த நாட்டில் பதிவு செய்யப்பட்டதோ அங்கு கொண்டு செல்ல வேண்டும்.

இந்தியாவின் முதல் மெக்லாரன் சூப்பர் கார் மும்பையில் வந்திறங்கியது

ஆனால் புனேவில் தற்போது வந்திறங்கிய மெக்லாரன் கார்கள் நிரந்திரமாக இந்தியாவிலேயே இருக்க அனுமதியுள்ளது. இதனால் தான் இது இந்தியாவின் முதல் மெக்லான் சூப்பர் கார் என சொல்லப்பட்டுள்ளது.

இந்தியாவின் முதல் மெக்லாரன் சூப்பர் கார் மும்பையில் வந்திறங்கியது

இந்த படத்தின் பதி காரை இறக்குவதற்காக காரின் கவர் எடுக்கப்பட்டுள்ளது. காரை இறக்க தயார் செய்து வருகின்றனர். இ்நத கார் முழுவதும் கருப்பு நிற தீம்மில் உள்ளது.

இந்தியாவின் முதல் மெக்லாரன் சூப்பர் கார் மும்பையில் வந்திறங்கியது

இந்த கார் 4.0 லிட்டர் வி8 டுவின் டர்போ பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 710 பிஎச்பி பவரையும், 770 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியது. இந்த கார் முழுவதும் ஏரோ டைனமிக்ஸ் முறையில் டிசைன் செய்யப்பட்டுள்ளது. காற்றை எளிதாக கழித்து கொண்டு செல்லும் திறன் படைத்தது இந்த கார்.

இந்தியாவின் முதல் மெக்லாரன் சூப்பர் கார் மும்பையில் வந்திறங்கியது

இந்த கார் 0-100 கி.மீ. வேகத்ததை 2.8 நொடியில் கடந்து விடும். அதிகபட்சமாக 341 கிமீ. வேகத்தில் இந்த கார் செல்லும் திறனுடன் படைக்கப்பட்டுள்ளது. இந்த கார் ஸ்டார்டர்டு, லக்ஸரி, பெர்மாமென்ஸ் ஆகிய 3 வித வேரியண்ட்களில் இந்த கார் விற்பனையாகி வருகிறது.

இந்தியாவின் முதல் மெக்லாரன் சூப்பர் கார் மும்பையில் வந்திறங்கியது

இதன் டாப் என்ட் வேரியண்டில் கார்பன் பைபரை கொண்டே உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வேரியன்டில் காற்று ஹூட், கண்ணாடி, விங் ஆகிய பகுதி வழியாக உள்ளே வரும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் இன்டீரியர் முழுவதும் அல்கென்ட்ரா மற்றும் நெப்பா லேதர்களை கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. ஜிரான்சிலவர் மற்றும் பிரஷ்டு, இரிடியம் பிரைட் ஓர்க் ஆகிய கெடுக்கப்பட்டுள்ளன.

டிரைவ் ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

Source: Motoroids

Most Read Articles
மேலும்... #மெக்லாரன் #mclaren
English summary
Adar Poonawalla’s Mclaren 720S is India’s FIRST ‘permanent resident’ Mclaren supercar. Read in Tamil
Story first published: Friday, June 1, 2018, 18:53 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X