மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி இ63 எஸ் 4 மேட்டிக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!!

By Saravana Rajan

மெர்சிடிஸ் பென்ஸ் இ க்ளாஸ் காரின் சக்திவாய்ந்த ஏஎம்ஜி மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. டெல்லி அருகே உள்ள புத் இன்டர்நேஷனல் சர்க்யூட்டில் நடந்த அறிமுக நிகழ்ச்சியின்போது, இந்த காரை 2 சுற்றுகள் ஓட்டிப் பார்க்கும் வாய்ப்பும் பத்திரிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டது.

மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி இ63 எஸ் 4 மேட்டிக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!!

கடந்த 2016ம் ஆண்டு அக்டோபர் மாதம் லாஸ் ஏஞ்சல்ஸ் மோட்டார் ஷோவில், மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி இ63 எஸ் மாடல் சர்வதேச அளவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில், ஒன்றரை ஆண்டுகளுக்கு பின்னர் இந்தியாவில் இன்று விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு இருக்கிறது.

மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி இ63 எஸ் 4 மேட்டிக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!!

சாதாரண மெர்சிடிஸ் பென்ஸ் இ க்ளாஸ் காரின் பெர்ஃபார்மென்ஸ் மாடலாக இது விற்பனைக்கு வந்துள்ளது. இ க்ளாஸ் காரின் சொகுசு அம்சங்களையும், ஏஎம்ஜி பிரிவின் பெர்ஃபார்மென்ஸ் விஷயங்களையும் பெற்றிருக்கிறது.

மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி இ63 எஸ் 4 மேட்டிக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!!

புதிய க்ரில் அமைப்பு, பம்பர் அமைப்பு, பெரிய ஏர் இன்டேக்குகள் இதனை சாதாரண இ க்ளாஸ் காரிலிருந்து வேறுபடுத்துகிறது. மேட் பிளாக் ஃபினிஷ் செய்யப்பட்ட 20 அங்குல அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. பெர்ஃபார்மென்ஸ் சைலென்சர் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி இ63 எஸ் 4 மேட்டிக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!!

இந்த காரில் உயர்தர பாகங்களுடன் உட்புறம் சொகுசும், பிரிமியம் அம்சங்களுடன் இழைக்கப்பட்டுள்ளது. 12.3 அங்குல இரட்டை திரை அமைப்புடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் கொடுக்கப்பட்டு இருக்கிறது. பொழுதுபோக்கு வசதி, காரின் இயக்கம் பற்றிய பல்வேறு தகவல்களை இந்த திரைகள் மூலமாக பெற முடியும்.

மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி இ63 எஸ் 4 மேட்டிக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!!

பர்ம்ஸ்டெர் ஆடியோ சிஸ்டம், 3 ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி, வெப்பப்படுத்தும் மற்றும் குளிர்ச்சியூட்டும் வசதியுடன் இருக்கைகள், ஏஎம்ஜி பெர்ஃபார்மென்ஸ் இருக்கைகள், 9 ஏர்பேக்குகள், ஏராளமான பாதுகாப்பு அம்சங்களை பெற்றிருக்கிறது.

மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி இ63 எஸ் 4 மேட்டிக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!!

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி இ63 எஸ் காரில் 612 பிஎச்பி பவரையும், 850 என்எம் டார்க் திறனையும் வழங்கும் வல்லமை கொண்ட 4.0 லிட்டர் வி8 எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் ட்வின் ஸ்க்ரோல் தொழில்நுட்பம் இருப்பதால், டர்போ லேக் வெகு குறைவாக இருக்கும்.

மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி இ63 எஸ் 4 மேட்டிக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!!

இந்த காரில் 9 ஸ்பீடு ஏஎம்ஜி ஸ்பீடு ஷிஃப்ட் டியூவல் க்ளஸ்ட்ச் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் 4 மேட்டிக் ப்ளஸ் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி இ63 எஸ் 4 மேட்டிக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!!

இந்த கார் 0 - 100 கிமீ வேகத்தை 3.3 வினாடிகளில் எட்டிவிடும் வல்லமை கொண்டது. மணிக்கு 250 கிமீ வேகம் தொடும் திறன் பெற்றுள்ளது. ஏஎம்ஜி டிரைவர்ஸ் பேக்கேஜை தேர்வு செய்யும்பட்சத்தில், இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 300 கிமீ வேகம் வரை கூட்டும் வாய்ப்புள்ளது.

மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி இ63 எஸ் 4 மேட்டிக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!!

இந்த காரில் புதிதாக டிரிஃப்ட் மோடு சேர்க்கப்பட்டு இருக்கிறது. இதன்மூலமாக, எஞ்சின் சக்தி பின்புற சக்கரங்களுக்கு மட்டும் வழங்கப்படும். இதன்மூலமாக, டிராக்குகளில் டிரிஃப்ட் செய்வதற்கான வாய்ப்பை தரும். இதனுடன் 4 மேட்டிக் ப்ளஸ் ஆல் வீல் டிரைவ் சிஸ்டமும் டிராக்குகளில் ஓட்டும்போது உற்சாகமான ஓட்டுதல் அனுபவத்தை தரும்.

மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி இ63 எஸ் 4 மேட்டிக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!!

ரேஸ் என்ற டிரைவிங் மோடை தேர்வு செய்யும்போது ஸ்டெபிளிட்ட கன்ட்ரோல் தொழில்நுட்பம் அணைக்கப்படுவதுடன், மேனுவல் முறையில் கியர் மாற்றுவதற்கான வாய்ப்பை ஓட்டுனர் பெற முடியும். இது மிகச் சிறப்பான அனுபவத்தை தரும் என்று அடித்து கூறுகிறது மெர்சிடிஸ் பென்ஸ்.

மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி இ63 எஸ் 4 மேட்டிக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!!

ரூ.1.5 கோடி டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் புதிய மெர்சிடிஸ் பென்ஸ் இ63 எஸ் பெர்ஃபார்மென்ஸ் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி இ63 எஸ் 4 மேட்டிக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!!

பிஎம்டபிள்யூ எம்5, மஸராட்டி குவாட்ரோபோர்ட்டே ஜிடிஎஸ், போர்ஷே பனமெரா டர்போ மற்றும் ஆடி ஆர்எஸ்6 ஆகிய கார் மாடல்களுடன் போட்டி போடுகிறது. பெர்ஃபார்மென்ஸ் கார் விரும்பிகளை இந்த கார் நிச்சயம் வெகுவாக கவரும்.

Tamil
English summary
2018 Mercedes-AMG E63 S Launched In India: Mercedes-Benz has launched the new 2018 E63 S AMG in India at Rs 1.5 crore ex-showroom (Delhi). The Mercedes-AMG E63 S is the most powerful AMG in the country. The performance saloon was launched at the Buddh International Circuit where journalists were allowed to do two fast laps around the track.
Story first published: Friday, May 4, 2018, 14:15 [IST]
 
வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more