டெஸ்லாவுக்கு நெருக்கடி வரிந்து கட்டிய பென்ஸ்... புதிய மின்சார காரை களமிறக்குகிறது!!

டெஸ்லா மாடல் எஸ் காருக்கு நேர் போட்டியான புத்தம் புதிய மின்சார கார் மாடலை அறிமுகம் செய்ய மெர்சிடிஸ் பென்ஸ் முடிவு செய்துவிட்டது. மெர்சிடிஸ் EQ என்ற பெயரில் வரும் இந்த கார் 2020ம் ஆண்டு அறிமுகம் செய்ய

By Saravana Rajan

மின்சார கார் உலகில் அமெரிக்காவை சேர்ந்த டெஸ்லா நிறுவனத்தின் மின்சார கார்கள் சந்தையில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிரு்கின்றன. வடிவமைப்பு, செயல்திறன், நவீன தொழில்நுட்ப வசதிகள் என வாடிக்கையாளர்களை வசியம் செய்துவிட்டன.

 டெஸ்லாவுக்கு போட்டியாக சொகுசு மின்சார காரை தயாரிக்கும் பென்ஸ்!!

கார் தயாரிப்பில் பன்னெடுங்காலமாக இருக்கும் நிறுவனங்கள் கூட மின்சார கார் தயாரிப்பில் டெஸ்லாவிடமிருந்து கற்றுக் கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கின்றன. மேலும், டெஸ்லாவின் விஸ்வரூப வளர்ச்சியும், மின்சார கார் தயாரிப்புக்கு கொடுக்க வேண்டிய முக்கியத்துவத்தை கார் நிறுவனங்களுக்கு உணர்த்தி வருகின்றன.

 டெஸ்லாவுக்கு போட்டியாக சொகுசு மின்சார காரை தயாரிக்கும் பென்ஸ்!!

சிங்கத்தின் குகைக்குள் புகுந்து பிடறியை பிடித்த கதையாக, ஜெர்மனியில் மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் க்ளாஸ் காரின் விற்பனையை ஓவர்டேக் செய்து கோடி கட்டி பறக்கிறது டெஸ்லா மாடல் எஸ் காரின் விற்பனை. இந்த விஷயத்தை மெர்சிடிஸ் பென்ஸ் கவுர குறைச்சலாக நினைக்கிறது.

 டெஸ்லாவுக்கு போட்டியாக சொகுசு மின்சார காரை தயாரிக்கும் பென்ஸ்!!

மெர்சிடிஸ் EQ என்ற பெயரில் வரும் இந்த கார் 2020ம் ஆண்டு அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் க்ளாஸ் காருக்கு இணையான சொகுசு வசதிகளுடன் முழுமையான மின்சார கார் மாடலாக உருவாக்கப்பட்டு வருகிறது.

 டெஸ்லாவுக்கு போட்டியாக சொகுசு மின்சார காரை தயாரிக்கும் பென்ஸ்!!

எனவே, டெஸ்லா மாடல் எஸ் காருக்கு நேர் போட்டியான புத்தம் புதிய மின்சார கார் மாடலை அறிமுகம் செய்ய மெர்சிடிஸ் பென்ஸ் முடிவு செய்துவிட்டது. மெர்சிடிஸ் EQ என்ற பெயரில் குறிப்பிடப்படும் இந்த புதிய மின்சார கார் மாடல் வரும் 2020ம் ஆண்டு அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 டெஸ்லாவுக்கு போட்டியாக சொகுசு மின்சார காரை தயாரிக்கும் பென்ஸ்!!

இந்த கார் மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் க்ளாஸ் காருக்கு இணையான சொகுசு வசதிகளுடன் முழுமையான மின்சார கார் மாடலாக உருவாக்கப்பட்டு வருகிறது. அதாவது, மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் க்ளாஸ் காரின் மின்சார வெர்ஷனாக இருக்கும்.

 டெஸ்லாவுக்கு போட்டியாக சொகுசு மின்சார காரை தயாரிக்கும் பென்ஸ்!!

தனது புதிய மின்சார கார்களை EQ பிராண்டில் வெளியிட இருக்கும் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம், இந்த புதிய காரை EQ S என்ற அடையாளத்துடன் களமிறக்க உள்ளது. மின்சார எஸ் க்ளாஸ் காராக இதனை புரிந்து கொள்ளலாம்.

 டெஸ்லாவுக்கு போட்டியாக சொகுசு மின்சார காரை தயாரிக்கும் பென்ஸ்!!

டெஸ்லா கார்களின் அடிப்பாகத்தில் பெரிய அளவிலான பேட்டரிகள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. இதே பாணியில் பேட்டரிகள் பொருத்தப்படுவதுடன், எம்இஏ என்ற விசேஷ சேஸீயின் அடிப்படையில் இந்த புதிய மின்சார கார் கட்டமைக்கப்படும்.

 டெஸ்லாவுக்கு போட்டியாக சொகுசு மின்சார காரை தயாரிக்கும் பென்ஸ்!!

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் மிகவும் விலை உயர்ந்த மாடலாக இந்த புதிய கார் நிலைநிறுத்தப்பட உள்ளது.அதேநேரத்தில், இது எஸ் க்ளாஸ் போன்று இல்லாமல் பல்வேறு மாற்றங்களை பெற்ற நவீன மின்சார கார் மாடலாக இருக்கும் என்று மெர்சிடிஸ் பென்ஸ் தெரிவிக்கிறது.

 டெஸ்லாவுக்கு போட்டியாக சொகுசு மின்சார காரை தயாரிக்கும் பென்ஸ்!!

ஆடி ஏ8 மற்றும் ஜாகுவார் எக்ஸ்ஜே உள்ளிட்ட கார்களின் மின்சார வெர்ஷன்களை உருவாக்கும் பணிகளில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. இந்த மாடல்களுக்கும் புதிய மெர்சிடிஸ் பென்ஸ் EQ S காா போட்டியாக இருக்கும். எனினும், டெஸ்லா மாடல் எஸ் காரை குறிவைத்தே தயாரிப்புப் பணிகளில் ஜரூராக இறங்கி இருக்கிறது மெர்சிடிஸ் பெனஸ்.

Source: Autocar

Most Read Articles
English summary
Mercedes-Benz is planning a luxury all-electric car to challenge the Tesla Model S. The all-electric sedan will be called Mercedes EQ S and will be similar to the S-Class. The Mercedes EQ S is expected to roll out by 2020.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X