மெர்சிடிஸ் பென்ஸ் EQC எலெக்ட்ரிக் எஸ்யூவி அறிமுகம்!

மிகப்பெரிய ஜமீன்தார்கள், தொழிலதிபர்கள், பரம்பரை செல்வந்தர்கள் , விளையாட்டு வீரர்கள், சினிமா நட்சத்திரங்கள் போன்றோரின் ஃபர்ஸ்ட் சாய்ஸாக இருக்கும் மெர்சிடிஸ் பென்ஸ் தனது முதல் எலக்ட்ரிக் காரை வெளியிடும் தகவலை அறிவித்துள்ளது. இந்த வாகனத்தின் விலை போலவே இதன் செயல் திறன், தொழில்நுட்பம் மற்றும் சொகுசு சார்ந்த விடயங்கள் ஆர்ப்பரிக்கும் வகையில் இருக்கும்.

மெர்சிடிஸ் பென்ஸ் EQC எலெக்ட்ரிக் எஸ்யூவி அறிமுகம்!

பாரிஸ் மோட்டார் ஷோவில் காட்சிப்படுத்தப்பட்ட பின் இந்த வாகனம் ஸ்டோக்ஹோல்ம் என்ற இடத்தில் தனது முழுத்தோற்றத்தை வெளிக்காட்டியது குறிப்பிடத்தக்கது. இந்த மெர்சிடிஸ் பென்ஸ் EQC400 4MATIC என்ற வாகனம் 2019 ஆண்டு அந்நிறுவனத்தில் தொழிற்சாலைகளில் உருவாக்கும் பனி தொடங்கப்படும் என்பது வல்லுநர்கள் கருத்து.

மெர்சிடிஸ் பென்ஸ் EQC எலெக்ட்ரிக் எஸ்யூவி அறிமுகம்!

அமெரிக்காவில் இந்த வாகனம் 2020- ம் ஆண்டு வெளிவரும் எனப்து கூடுதல் தகவல். இருவெட்டுகளால் ஆன மீனின் செதில் போல் முன்பக்கம் அமையப்பெற்ற இதன் பாதுகாப்பு கிரில் மிகவும் கவர்ச்சிகரமாய் உள்ளது.

மெர்சிடிஸ் பென்ஸ் EQC எலெக்ட்ரிக் எஸ்யூவி அறிமுகம்!

இதன் முன்பக்கம் சற்றே சிறுத்து மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் டிசைன் வல்லமையை காட்டும் விதத்தில் உள்ளது. இந்த க்ரில்லின் ரெண்டு பக்கத்திலும் அழகுற அமையப்பெற்ற LED விளக்குகள் முன்னும் பின்னும் மூக்கை நீட்டி ரோபோ கார் போன்ற உள்ளுணர்வை அளிக்கிறது. வழித்து எடுத்தது போல் இதன் பின் LED டேஞ்சர் விளக்குகள் பிசிறின்றி காணப்படுகின்றன.

மெர்சிடிஸ் பென்ஸ் EQC எலெக்ட்ரிக் எஸ்யூவி அறிமுகம்!

சிறிய எரியும் மெல்லியகோடினால் அமைக்கப்பட்ட பின் விளக்குகள் தூரத்து பார்வைக்கு கைகோர்த்தது போல் அமைந்து வாகனத்தை வெளிக்கொணர்கிறது. எலக்ட்ரானிக் தொழில்நுட்பமான EQC BADGING வண்டியை சுற்றி வருவது மட்டுமில்லாமல் முன்பக்க பெண்டர்(FENDER) போன்றவற்றையும் வருடி செல்கின்றன.

மெர்சிடிஸ் பென்ஸ் EQC எலெக்ட்ரிக் எஸ்யூவி அறிமுகம்!

இதன் பின்பக்கத்தில் இதே EQC400 என்ற மேம்பட்ட தொழில்நுட்பம் இதன் செயல் திறனை உயர்த்தும் வண்ணமாய் உள்ளது. MBUX எனப்படும் பொழுதுபோக்கு அம்சங்கள் இந்த வாகனத்தில் பொறுத்தப்பட்டுள்ளன.

மெர்சிடிஸ் பென்ஸ் EQC எலெக்ட்ரிக் எஸ்யூவி அறிமுகம்!

இதில் 10.25 அங்குல டச் திரை பல தொழில்நுட்பங்களை கண் முன்னே நிறுத்திகிறது. இந்த புதிய மென்பொருள் பல குறிப்பிட்ட செயல்களை அளிக்க வல்லது. இது அதிகபட்ச தூரம், சார்ஜ் நிலைமை, திறன் அளவு போன்றவற்றை துல்லியமாய் நமக்கு அளித்து நிம்மதியான பயணத்தை தரும்.

மெர்சிடிஸ் பென்ஸ் EQC எலெக்ட்ரிக் எஸ்யூவி அறிமுகம்!

இந்த MBUX தகவல் தொழில்நுட்பம் மேலும், ஓட்டுனரை வாகனத்தை சரிவர இயக்க சொல்வது, நாம் சரியாக எங்கிருக்கிறோம் என்று அறிவுறுத்துவது, தேவைப்படும் மின்சார சக்தி, புறப்பட தயாராகும் நேரம் போன்ற அடிப்படை தகவல்களை அளித்து பயணத்தை இனிதாக்க உள்ளது. மேலும் இது நமது குரலை கணித்து நமக்கேற்ற மொழியிலும் பதிலளிக்க வல்லது.

மெர்சிடிஸ் பென்ஸ் EQC எலெக்ட்ரிக் எஸ்யூவி அறிமுகம்!

இந்த தொழில்நுட்பத்திமட்டுமில்லாது இந்த வாகனம் மெருகேற்றிய இருக்கைகள், 19 இன்ச் அல்லோய் வீல்கள், ரோஸ் கோல்ட் நிறத்தால் உட்பாகங்கள், அதற்கென அமையப்பட்ட மின்விளக்குகள் போன்றவற்றால் இன்னும் சிறப்பை எடுப்பாய் பிரிக்கிறது. இந்த வாகனமானது 64 வர்ண விளக்குகள், ஓட்டுநர் அற்ற தொழில்நுட்பம் போன்ற பரிணாமத்தில் கிடைக்க உள்ளது மற்றுமோர் மிகப்பெரிய சாதனை.

மெர்சிடிஸ் பென்ஸ் EQC எலெக்ட்ரிக் எஸ்யூவி அறிமுகம்!

இந்த EQ வரிசையில் உருவாக்கப்படும் முதல் வாகனம் என்ற பெருமை மெர்சிடிஸ் பென்ஸ் கார் இது. முன்பக்கம் பின்பக்கம் என இரு சக்கரங்களையும் பறக்க வைக்க தனி தனியா அமையப்பெற்ற மின்மோட்டார்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த இரு மின் மோட்டார்களை சேர்ந்து 402bhp செயல் திறனும் 765nm டார்க்கும் தனது நான்கு சக்கரத்திற்கும் கொடுக்க வல்லது.

மெர்சிடிஸ் பென்ஸ் EQC எலெக்ட்ரிக் எஸ்யூவி அறிமுகம்!

180km வேகத்தை தனது அதிகபட்சமாக கொண்டுள்ளது இவ்வாகனம். இது 100km ஐ ஆறே நொடிகளில் தொடுவது இது வல்லமையை பரைசாற்றும் வகையில் உள்ளது. இந்த தொழில்நுட்பத்தின் அறிக்கையை 2016 இல் பாரிஸ் மாநகரில் வெளியிட்டபோது இந்த EQC வாகனம் 482 KM பயணதூரத்தை வெறும் ஒரே ஒரு முழு சார்ஜ் கொண்டு கடந்தது அனைவரை வியக்க வைத்தது.

மெர்சிடிஸ் பென்ஸ் EQC எலெக்ட்ரிக் எஸ்யூவி அறிமுகம்!

இருப்பினும் தற்போது வெளியாக உள்ள வாகனம் வெறும் 280KM தூரத்தை மட்டுமே சிங்கள் சார்ஜில் கடக்கும் என்பது அவர்களின் கூற்று. 80KW பேட்டரி தான் இதன் இத்தகைய செயல்திறனுக்கு காரணம் இந்த மேம்படுத்தப்பட்ட பேட்டரி ஆனது வெறும் நாற்பது நிமிடங்களில் தன்னை முழுமை படுத்தி கொள்ளும் என்பது மிக்க மகிழ்ச்சிகரமான உண்மை.

மெர்சிடிஸ் பென்ஸ் EQC எலெக்ட்ரிக் எஸ்யூவி அறிமுகம்!

மெர்சிடிஸ் பென்ஸ் EQC பற்றிய டிரைவ் ஸ்பார்க்கின் கருத்து

இந்த எலெக்ட்ரிக் SUV ரக வாகனம் 2020 இல் வெளிவரும் என அதிகாரபூர்வ அறிவிப்பை பெற்ற போதிலும் இதன் விலை இன்னும் நிர்ணயிக்கப்படாமல் உள்ளது சற்று எதிர்பார்ப்பை தூண்டும் வகையில் உள்ளது.

இந்த வாகனம் வெளிவந்த நாளன்றே இதன் போட்டியாக கருதப்படும் ஜாகுவார் இ பேஸ் , டெஸ்லா X75D போன்றவற்றை பின்னுக்கு தள்ளி தனிப்பெயர் வாங்கும் என்று கருதலாம். மேலும் இவை வரவிருக்கும் ஆடி மற்றும் BMW வாகனங்களின் தொழில்நுட்பத்தை பூர்த்தி செய்யும் வல்லமை பெற்றுள்ளது இதன் வெற்றியை சற்று இரண்டு படி மேல கொண்டு சென்றுள்ளது என்றால் மிகையாகாது.

Most Read Articles

Tamil
English summary
Mercedes-Benz has finally taken the wraps off their first ever all-electric SUV, the EQC. The car was unveiled in Stockholm, two years after the concept version was showcased at the Paris Motor Show.
 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more