மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் கிராண்ட் எடிசன் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

Written By:

மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் கிராண்ட் எடிசன் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் கிராண்ட் எடிசன் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் எஸ்யூவியின் கிராண்ட் எடிசன் மாடல் பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் விற்பனைக்கு கிடைக்கும். ஜிஎல்எஸ் 400 பெட்ரோல் மாடல் மற்றும் 350டீ என்ற டீசல் வேரியண்ட் என இரண்டிற்குமே ரூ.86.90 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் கிராண்ட் எடிசன் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் கிராண்ட் எடிசன் மாடலில் வெளிப்புறத்தில் பல்வேறு கூடுதல் சிறப்பம்சங்கள் சேர்க்கப்பட்டு இருக்கின்றன. கருப்பு வளையத்துடன் கூடிய எல்இடி ஹெட்லைட், பானட்டில் க்ரோம் ஃபின் அமைப்பு, 10 ஸ்போக்குகள் கொண்ட 20 அங்குல அளவுடைய கருப்பு வண்ண சக்கரங்கள், கிராண்ட் எடிசன் பேட்ஜ் ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.

மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் கிராண்ட் எடிசன் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

உட்புறத்திலும் சில கூடுதல் அம்சங்கள் இடம்பெற்று இருக்கின்றன. இந்த எஸ்யூவியில் மூன்று ஸ்போக்குகளுடன் கூடிய மல்டிஃபங்ஷன் ஸ்டீயரிங் வீல் பொருத்தப்பட்டு இருக்கிறது. ஸ்டீயரிங் வீலுக்கு நப்பா லெதர் உறை கொடுக்கப்பட்டு இருக்கிறது. பேடில் ஷிஃப்ட் வசதி, புதிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், பின்புற இருக்கை பயணிகளுக்கான 7 அங்குலத்திலான இரண்டு டிவி திரைகள் இருக்கின்றன.

மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் கிராண்ட் எடிசன் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் கிராண்ட் எடிசன் பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் 3.0 லிட்டர் வி6 எஞ்சின்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 333பிஎச்பி பவரையும், 480 என்எம் டார்க் திறனையும் வழங்கும். டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 258 பிஎச்பி பவரையும், 620 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் கிராண்ட் எடிசன் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் கிராண்ட் எடிசன் எஸ்யூவியில் கூடுதல் வசீகரம் மற்றும் பிரிமியம் ஆக்சஸெரீகள் சேர்க்கப்பட்டு இருக்கின்றன. மற்றபடி, சாதாரண மாடலில் இருக்கும் அதே எஞ்சின் ஆப்ஷன்கள் தக்க வைக்கப்பட்டு இருக்கின்றன.

மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் கிராண்ட் எடிசன் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

சாதாரண ஜிஎல்எஸ் எஸ்யூவியைவிட இந்த புதிய ஸ்பெஷல் எடிசன் மாடல் ரூ.4 லட்சம் வரை கூடுதல் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. சற்று பிரிமியம் அம்சங்கள் இடம்பெற்றிருப்பது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான தேர்வாக அமையும்.

English summary
Mercedes-Benz has launched the new GLS Grand Edition in India and will be available in both petrol and diesel variants. Both the GLS 400 and the 350d Grand Edition are priced at Rs 86.90 Lakh ex-showroom (Delhi).
Story first published: Thursday, April 5, 2018, 12:02 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark