ஆஃப்ரோடு அம்சங்களுடன் மெர்சிடிஸ் பென்ஸ் இ- க்ளாஸ் ஆல்டெர்ரெயின் மாடல் அறிமுகம்!

Written By:

மெர்சிடிஸ் பென்ஸ் இ - க்ளாக் காரின் ஆல் டெர்ரெயின் எடிசன் என்ற புதிய சொகுசு ரக கார் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த விசேஷ மாடல் குறித்த கூடுதல் தகவல்களையும், படங்களையும் இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஆஃப்ரோடு அம்சங்களுடன் மெர்சிடிஸ் பென்ஸ் சொகுசு கார் அறிமுகம்!

2016ம் ஆண்டு நடந்த பாரிஸ் மோட்டார் ஷோவில் மெர்சிடிஸ் பென்ஸ் இ - க்ளாஸ் ஆல் டெர்ரெயின் என்ற பெயரிலான புதிய மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. ஆஃப்ரோடு அம்சங்கள் பொருந்திய இந்த சொகுசு கார் தற்போது டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டு இருக்கிறது.

ஆஃப்ரோடு அம்சங்களுடன் மெர்சிடிஸ் பென்ஸ் சொகுசு கார் அறிமுகம்!

இ - க்ளாஸ் காரின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட எஸ்டேட் ரக சொகுசு கார் மாடலாக வடிவைக்கப்பட்டு இருக்கிறது. பின்புறம் இ- க்ளாஸ் செடான் கார் போல அல்லாமல் எஸ்டேட் ரக மாடலாக மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.

ஆஃப்ரோடு அம்சங்களுடன் மெர்சிடிஸ் பென்ஸ் சொகுசு கார் அறிமுகம்!

அனைத்து சாலைகளிலும் எளிதாக செல்லும் வகையில், சாதாரண இ- க்ளாஸ் காரைவிட இந்த காரின் க்ரவுண்ட் கிளியரன்ஸ் எனப்படும் தரை இடைவெளி 29 மிமீ கூடுதலாக இருக்கிறது. இதற்காக, 19 அல்லது 20 அங்குல சக்கரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

ஆஃப்ரோடு அம்சங்களுடன் மெர்சிடிஸ் பென்ஸ் சொகுசு கார் அறிமுகம்!

ஏர் சஸ்பென்ஷன் மூலமாக 15 மிமீ தரை இடைவெளி அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. அதேநேரத்தில், இ க்ளாஸ் காரைவிட இந்த காரின் வீல் பேஸ் 140 மிமீ குறைக்கப்பட்டு இருக்கிறது. இதனால், இ- க்ளாஸ் கார் போன்று மிக தாராள இடவசதியை பின் இருக்கையில் எதிர்பார்க்க இயலாது.

Recommended Video - Watch Now!
Under-Aged Rider Begs The Policewomen To Spare Him - DriveSpark
ஆஃப்ரோடு அம்சங்களுடன் மெர்சிடிஸ் பென்ஸ் சொகுசு கார் அறிமுகம்!

மிரட்டலான புதிய க்ரில் அமைப்பு, சரிவக அமைப்பிலான புகைப்போக்கி குழாய்கள், இரட்டை வண்ண பம்பர்கள், எஸ்யூவி போன்ற பாடி கிளாடிங் சட்டங்கள், ரூஃப் ரெயில்கள் ஆகியவை இந்த காரின் மிக முக்கிய அம்சங்கள்.

ஆஃப்ரோடு அம்சங்களுடன் மெர்சிடிஸ் பென்ஸ் சொகுசு கார் அறிமுகம்!

இன்டீரியர் அமைப்பு இ- க்ளாஸ் காரிலிருந்து அப்படியே பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. அதேநேரத்தில், புதிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், லெதர் அப்ஹோல்ஸ்ட்ரி கொடுக்கப்பட்டு இருக்கிறது. அலுமினியம் மற்றும் கார்பன் ஃபைபர் அலங்காரம் மற்றும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பெடல்கள் பொருத்தப்பட்டு இருப்பதும் சிறப்பு.

ஆஃப்ரோடு அம்சங்களுடன் மெர்சிடிஸ் பென்ஸ் சொகுசு கார் அறிமுகம்!

இந்த காரில் 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. அதிகபட்சமாக 191பிஎச்பி பவரையும், 400 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது. எஞ்சின் சக்தி 4 சக்கரங்களுக்கும் செலுத்தப்படுகிறது.

ஆஃப்ரோடு அம்சங்களுடன் மெர்சிடிஸ் பென்ஸ் சொகுசு கார் அறிமுகம்!

மெர்சிடிஸ் E220d என்ற மாடல் பெயரில் குறிப்பிடப்படும் இந்த் கார் 0 - 100 கிமீ வேகத்தை 8 வினாடிகளில் தொட்டுவிடும். மணிக்கு அதிகபட்சமாக 232 கிமீ வேகம் வரை எட்டும் திறன் கொண்டது.

ஆஃப்ரோடு அம்சங்களுடன் மெர்சிடிஸ் பென்ஸ் சொகுசு கார் அறிமுகம்!

சொகுசு காரில் அதிக தரை இடைவெளியுடன் ஆஃப்ரோடு பயன்பாட்டிற்கு ஏற்றதாக வந்திருக்கும் இந்த கார் எப்போது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்ற தகவல் இல்லை. எனினும், இந்த மாடலை இந்தியர்களிடம் கொண்டு செல்வதற்கான திட்டத்தை மெர்சிடிஸ் பென்ஸ் விரைவில் கையில் எடுக்கும் என நம்பலாம்.

English summary
Auto Expo 2018: Mercedes E-Class All Terrain Showcased. The All Terrain is the raised version of the Mercedes E-Class estate and was first revealed at the 2016 Paris Motor Show.
Story first published: Sunday, February 11, 2018, 14:30 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark