மெர்சிடிஸ் - மேபக் எஸ்-650 சொகுசு கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

Written By:

கிரேட்டர் நொய்டாவில் நடந்து வரும் சர்வதேசஆட்டோமொபைல் கண்காட்சியில், மெர்சிடிஸ்- மேபக் எஸ்650 மற்றும் மேபக் எஸ்560 ஆகிய இரண்டு சொகுசு கார் மாடல்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த கார்களின் சிறப்புகள், விலை விபரம் உள்ளிட்டத் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

 மெர்சிடிஸ் - மேபக் எஸ்-650 சொகுசு கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

மெர்சிடிஸ் பென்ஸ் பிராண்டில் விற்பனை செய்யப்படும் எஸ் க்ளாஸ் சொகுசு காரின் உயர்வகை மாடல்கள்தான், புதிய மெர்சிடிஸ் மேபக் எஸ்650 மற்றும் எஸ்560 மாடல்கள். மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் க்ளாஸ் காரைவிட, மேபக் எஸ்650 மாடலானது அதிக வீல் பேஸ் கொண்ட லிமோசின் ரக மாடலாக மாற்றம் செய்யப்பட்டு இருக்கின்றது.

 மெர்சிடிஸ் - மேபக் எஸ்-650 சொகுசு கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

இதுவரை இந்தியாவில் விற்பனையில் இருந்த மேபக் எஸ்600 மாடலுக்கு மாற்றாக புதிய மேபக் எஸ்650 சொகுசு கார் தற்போது விற்பனைக்கு வந்துள்ளது. அதேநேரத்தில், புதிய மாடலில் அகலம் ஒரு மிமீ அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், 19 அங்குல அலாய் வீல்களுக்கு பதிலாக 20 அங்குல அலாய் வீல்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன.

 மெர்சிடிஸ் - மேபக் எஸ்-650 சொகுசு கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த காரில் மல்டிபீம் எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி டெயில் லைட்டுகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. பயணிப்பவருக்கு அலுங்கல் குலுங்கல் தெரியாத வகையிலான பயணத்தை வழங்கும் மேஜிக் பாடி கன்ட்ரோல், மேஜிக் ஸ்கை கன்ட்ரோல் உள்ளிட்ட பல விசேஷ தொழில்நுட்ப வசதிகளை பெற்றிருக்கிறது.

 மெர்சிடிஸ் - மேபக் எஸ்-650 சொகுசு கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த கார் மிக தாராளமான இடவசதியை பெற்றிருக்கிறது. குறிப்பாக, பின் இருக்கை மிகச் சிறப்பான இடவதியை பயணிப்பவருக்கு அளிக்கிறது. ரேடார் துணையுடன் இயங்கும் க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம் இதன் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்று. இதுதவிர, எண்ணற்ற பாதுகாப்பு அம்சங்களையும் இந்த கார் பெற்றிருக்கிறது.

Recommended Video - Watch Now!
New Maruti Swift Launch: Price; Mileage; Specifications; Features; Changes
 மெர்சிடிஸ் - மேபக் எஸ்-650 சொகுசு கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

மெர்சிடிஸ் மேபக் எஸ்650 காரில் 6.0 லிட்டர் வி12 எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 621 பிஎச்பி பவரையும், 1,000என்எம் டார்க் திறனையும் வழங்கும் வல்லமை வாய்ந்தது. எஞ்சின் சக்தி 7 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மூலமாக 4 சக்கரங்களுக்கும் செலுத்தப்படுகிறது.

 மெர்சிடிஸ் - மேபக் எஸ்-650 சொகுசு கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த கார் 0 - 100 கிமீ வேகத்தை வெறும் 4.6 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு அதிகபட்சமாக 250 கிமீ வேகம் வரை செல்லும் திறன் வாய்ந்தது.

 மெர்சிடிஸ் - மேபக் எஸ்-650 சொகுசு கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

மறுபுறத்தில் மேபக் எஸ்560 மாடலில் இரண்டு டர்போசார்ஜர்கள் கொண்ட 4.0 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 462.5 பிஎச்பி பவரையுயம்,, 700 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த மாடலும் 4 வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டது.

 மெர்சிடிஸ் - மேபக் எஸ்-650 சொகுசு கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

மேபக் எஸ்560 கார் 0 - 100 கிமீ வேகத்தை வெறும் 4.8 வினாடிகளில் எட்டிவிடும். இந்த மாடலும் மணிக்கு 250 கிமீ வேகம் வரை செல்லும் திறன் வாய்ந்தது.

 மெர்சிடிஸ் - மேபக் எஸ்-650 சொகுசு கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய மெர்சிடிஸ்- மேபக் எஸ்650 கார் மாடல் ரூ.2.73 கோடி எக்ஸ்ஷோரூம் விலையிலும், மேபக் எஸ்560 மாடல் ரூ.1.94 கோடி எக்ஸ்ஷோரூம் விலையிலும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

English summary
Auto Expo 2018: Mercedes-Maybach S650 Launched In India. The new Mercedes-Maybach S650 is priced at Rs 2.73 crore. Mercedes also launched the Maybach S560 at Rs 1.94 crore (all prices ex-showroom). The Mercedes-Maybach S650 is the flagship limo from Merc's Maybach sub-brand.
Story first published: Thursday, February 8, 2018, 10:58 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark