மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் புதிய மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் க்ளாஸ் கார் விற்பனைக்கு அறிமுகம்!

மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் புதிய மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் க்ளாஸ் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. விரிவானத் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

By Saravana Rajan

மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் புதிய மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் க்ளாஸ் கார் இந்தியாவில் இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. டெல்லியில் சற்றுமுன் நடந்த நிகழ்ச்சியிலிருந்தது எமது செய்தியாளர் ஸ்டீபன் தரம் நேரடித் தகவல்களையும், படங்களையும் இப்போது பார்க்கலாம்.

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் க்ளாஸ் கார் விற்பனைக்கு அறிமுகம்!

பாரத் ஸ்டேஜ் - VI மாசு உமிழ்வு தர விதிகளுக்கு உட்பட்டு இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் முதல் கார் மாடலாக புதிய மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் க்ளாஸ் கார் வந்துள்ளது. 2020ம் ஆண்டில் வாகனங்களுக்கான மாசு உமிழ்வு தர விதிகள் கடுமையாக்கப்பட நிலையில், முன்கூட்டியே இந்த காரை மெர்சிடிஸ் பென்ஸ் களமிறக்கி முன்னோடியாக விளங்குகிறது.

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் க்ளாஸ் கார் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் க்ளாஸ் கார் எஸ்350 டீ என்ற டீசல் மாடலிலும், எஸ் 450 என்ற பெட்ரோல் வேரியண்ட்டிலும் விற்பனைக்கு கிடைக்கும். எஸ்350 மாடலில் 6 சிலிண்டர்கள் கொண்ட 3.0 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் எஞ்சினும், எஸ்-450 மாடலில் 6 சிலிண்டர்கள் கொண்ட 3.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது.

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் க்ளாஸ் கார் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் க்ளாஸ் காரின் எஸ்- 350 டீசல் மாடலில் இருக்கும் 3.0 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 282 பிஎச்பி பவரையும், 600 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது. இந்த எஞ்சினுடன் 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

Recommended Video

New Maruti Swift Launch: Price; Mileage; Specifications; Features; Changes
புதிய மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் க்ளாஸ் கார் விற்பனைக்கு அறிமுகம்!

டீசல் மாடல் 0 - 100 கிமீ வேகத்தை 6 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 250 கிமீ வேகம் வரை செல்லத்தக்க வல்லமையை பெற்றிருக்கிறது. இந்த எஸ்-350 மாடல்தான் பிஎஸ்-VI மாசு உமிழ்வு விதிகளுக்கு உட்பட்டு தயாரிக்கப்படும் இந்தியாவின் முதல் கார் மாடலாக மெர்சிடிஸ் பென்ஸ் தெரிவத்துள்ளது.

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் க்ளாஸ் கார் விற்பனைக்கு அறிமுகம்!

மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்-450 என்ற பெட்ரோல் மாடலில் இருக்கும் 3.0 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 362 பிஎச்பி பவரையும், 500 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது. இந்த மாடலிலும் 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ்தான் இருக்கிறது. 0 - 100 கிமீ வேகத்தை 5.1 வினாடிகளில் எட்டும் வல்லமை கொண்ட இந்த கார் மணிக்கு 250 கிமீ வேகம் வரை செல்லும்.

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் க்ளாஸ் கார் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் காரில் முன்பக்கத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கருப்பு வண்ணத்திலான முகப்பு க்ரில் அமைப்பு, சுற்றிலும் க்ரோம் பட்டை அமைப்பு ஆகியவை முக்கிய மாற்றங்கள்.

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் க்ளாஸ் கார் விற்பனைக்கு அறிமுகம்!

மல்டி பீம் எல்இடி ஹெட்லைட்டுகள், மூன்று எல்இடி பகல்நேர விளக்குகள் பாதுகாப்பை கூட்டுவதுடன், வசீகரத்தையும் தருகின்றன. பெரிய ஏர் இன்டேக் அமைப்புடன் கூடிய புதிய முன்புற பம்பரும் மாற்றம் கண்டிருக்கிறது.

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் க்ளாஸ் கார் விற்பனைக்கு அறிமுகம்!

பக்கவாட்டில் சிறிய மாற்றங்கள் உள்ளன. ஆனால், 5 ஸ்போக்குகள் கொண்ட புதிய 18 அங்குல அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. பின்புறத்தில் டெயில் லைட்டுகள் மற்றும் பம்பர் டிசைனில் மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கின்றன.

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் க்ளாஸ் கார் விற்பனைக்கு அறிமுகம்!

பழைய மாடலில் இருந்த இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர்கள் தூக்கப்பட்டு, 12.3 அங்குலம் அளவுடைய பெரிய திரையுடன் கூடிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ள்ஸ்ட்டர் மற்றும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் டேஷ்போர்டை ஆக்கிரமித்துள்ளது. ஆன்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் ப்ளே சாஃப்ட்வேர்களை சப்போர்ட் செய்யும். இந்த காரில் 590வாட் திறன் கொண்ட 13 ஸ்பீக்கர்களுன் கூடிய பர்ம்ஸ்டெர் ஆடியோ சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது.

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் க்ளாஸ் கார் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் க்ளாஸ் காரில் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை இயக்குவதற்காக ஸ்டீயரிங் வீலில் டச் பேனல் கொடுக்கப்பட்டு இருக்கிறது. சன்ரூஃப், ஆம்பியன் லைட் சிஸ்டம், க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி ஆகியவை பிற முக்கிய அம்சங்கள்.

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் க்ளாஸ் கார் விற்பனைக்கு அறிமுகம்!

பொதுவாக இதுபோன்ற கார்களில் உரிமையாளர்கள் ஓட்டுனர் வைத்தே செல்வார்கள் என்பதுடன், பின் இருக்கையில் அமர்ந்து செல்வார்கள். இதனை மனதில் கொண்டு பின் இருக்கை பயணிகளுக்கு தனித்தனியான டிவி திரைகள், சாய்மான வசதி கொண்ட இருக்கைகள், தனி ஏசி வென்ட்டுகள் மற்றும் அதனை கட்டுப்படுத்துவதற்கான வசதிகள், ஆர்ம் ரெஸ்ட் உள்ளிட்ட வசதிகள் இடம்பெற்று இருக்கின்றன.

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் க்ளாஸ் கார் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் க்ளாஸ் காரில் உயிர்காக்கும் காற்றுப் பைகள், பிரேக் பவரை சரிவிகிதத்தில் செலுத்தும் இபிடி நுட்பத்துடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது. அதிக தரைப்பிடிப்புடன் செல்வதற்கான டிராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம், உள்ளது.

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் க்ளாஸ் கார் விற்பனைக்கு அறிமுகம்!

நெடுஞ்சாலையில் செல்லும்போது முன்னால் பின்னால் வரும் வாகனங்களுடன் போதிய இடைவெளியில் செலுத்துவதற்கான ரேடார் துணையுடன் இயங்கும் க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், ஓட்டுனரின் பார்வைக்கு புலப்படாத பகுதியிலிருந்து வரும் வாகனங்கள் குறித்த எச்சரிக்கும் வசதி என இந்த பட்டியல் நீள்கிறது.

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் க்ளாஸ் கார் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் க்ளாஸ் காரின் டீசல் மாடல் ரூ.1.33 கோடி எக்ஸ்ஷோரூம் விலையிலும், பெட்ரோல் மாடல் ரூ.1.37 கோடி எக்ஸ்ஷோரூம் விலையிலும் விற்பனைக்கு வந்துள்ளது.

Most Read Articles
English summary
2018 Mercedes S-Class facelift launched in India. Prices for the facelifted 2018 Mercedes S-Class in India start at Rs 1.33 Crore ex-showroom. The new S-Class is the first BS-VI emission norms compliant car made in India, that can meet the stricter norms which come into effect in 2020, while running on current BS-IV fuels.
Story first published: Monday, February 26, 2018, 14:55 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X