எம்ஜி நிறுவனத்தின் அசத்தலான மூன்று புதிய சொகுசு பேருந்துகள் அறிமுகம் !

பஸ் வேர்ல்ட் இந்தியா என்ற பெயரில் பெங்களுருவில் நடைபெற்ற வாகன காட்சியில் இந்தியாவின் முதன்மை பஸ் கட்டமைப்பு நிறுவனமான MG , தனது 3 புதிய சொகுசு பேருந்துகளை அறிமுகம் செய்து அசத்தியுள்ளது. GLIDER , GLIDERZ , DREAM BUSES என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்ட இப்பேருந்துகள் பாரத் பென்ஸ் சாஸ்ஸிஸ் (GLIDER , GLIDERZ) , மெர்ஸடெஸ் பென்ஸ் சாஸ்ஸிஸ் ( DREAM BUSES) ஐ பின்பற்றியுள்ளது என்பது குறிப்பிட தக்கது.

எம்ஜி நிறுவனத்தின் அசத்தலான மூன்று புதிய சொகுசு பேருந்துகள் அறிமுகம் !

GLIDER : 2X2 என்ற இருக்கை அமைப்பில் உள்ள இப்பேருந்து 12M நீளமுள்ள பாரத் பென்ஸ் ஐ ஒத்து இருக்கும். 43 பயணிகள் கொள்ளளவு கொண்ட இப்பேருந்து சொகுசு சாய்வு இருக்கை கொண்டு பயணத்தை சுகமாகும். மேலும் செல்போன் சார்ஜ்ர், குளிர் சாதனம், படிக்கும் விளக்கு போன்ற அதிக சிறப்பம்சங்கள் உண்டு.

எம்ஜி நிறுவனத்தின் அசத்தலான மூன்று புதிய சொகுசு பேருந்துகள் அறிமுகம் !

என்ஜின்-ற்கு வருவோம் , 6373 CC டீசல் என்ஜின் சக்தியோடு கிளைடர் தனது 231BHP ஐ 850NM TORQUE உடன் அளிக்க வல்லது. அதிவேக கியர் பாக்ஸ் (6 SPEED MANUAL GEAR BOX) மேலும் பயணத்தை விரைய செய்கிறது. ஏர் சஸ்பென்ஷன் என்ற தொழில்நுட்பம் ஒன்று புதிதல்ல என்றாலும் இவை இப்பேருந்துகளில் பொருத்தப்பட்டு பயணியின் பயண உணர்வை மறக்க செய்வது உறுதி. DREAM BUSES இல் ஓட்டுநர் தனக்கான நிலையில் அழகுற அமைக்க ஸ்டேரிங் வீல் அட்ஜஸ்ட்மெண்ட்ஸ் உள்ளது முக்கியாம்சம்.

Most Read: ரூ.9.99 லட்சத்தில் புதிய மஹிந்திரா மராஸ்ஸோ கார் விற்பனைக்கு அறிமுகம்! டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காருக்கு கடும் சவால்..

எம்ஜி நிறுவனத்தின் அசத்தலான மூன்று புதிய சொகுசு பேருந்துகள் அறிமுகம் !

GLIDERZ வாகனத்தை பொறுத்த வரை என்ஜின் மற்றும் நீல அகல குறியீடுகளில் மாற்றமேதுமில்லை. அவை 30 பயணிகளுடன் 2X2 இருக்கை அமைப்பில் EMERGENCY DOOR உடன் 30 பயணிகள் கொள்ளளவே ஒரே மாற்றம். ரயிலை போல் UPPER & LOWER BERTHS உடன் கண்ணை கவரும் விதமாய் இது அமைந்துள்ளது.

எம்ஜி நிறுவனத்தின் அசத்தலான மூன்று புதிய சொகுசு பேருந்துகள் அறிமுகம் !

சிறப்பம்சங்கள் பெயரில் கூரை மின் விளக்குகள், குளிர் சாதனம், செல் போன் சார்ஜெர், REVERSE CAMERA போன்றவை ஒருபடி மேலே. GLIDER , GLIDERZ ஆகிய இரண்டுமே சொகுசு பேருந்துகள் மத்தியில் ஜொலிக்கும்.

எம்ஜி நிறுவனத்தின் அசத்தலான மூன்று புதிய சொகுசு பேருந்துகள் அறிமுகம் !

40 பயணிகள் கொள்ளளவில் வரும் DREAM BUSES 14.95M மெர்ஸடெஸ் பென்ஸ் சாஸ்ஸிஸ்-ஐ ஒத்து இருக்கும் இவை 2X1 என்ற இருக்கை கணக்கில் UPPER & LOWER BERTHS உடன் உள்ளே சென்றால் விமானம் போல் காட்சியளிக்கிறது. இதன் செயல் திறனை பொறுத்த வரை சில மேம்பட்ட மாற்றங்களை கூறும் வகையில் அமைந்துள்ளது. அவை OM457 எனப்படும் ஆறு சிலிண்டர் என்ஜின், 402BHP திறன், 1900NM TORQUE போன்றவை.

எம்ஜி நிறுவனத்தின் அசத்தலான மூன்று புதிய சொகுசு பேருந்துகள் அறிமுகம் !

மல்டி ஆக்ஸில் வகையை சேர்ந்த இவை டிஸ்க் பிரேக் உடன் , ELECTRONIC CONTROLLED AIR SUSPENSION தொழில்நுட்பத்துடன் மேடு பள்ளங்களை பூசி மொழுகிவிடும். ABS & ELECTRONIC STABILITY CONTROL தொழில்நுட்பங்கள் பாதுகாப்பின் உச்சம். மற்ற சிறப்பம்சங்கள் மேல கூறியது போல் பொதுவானவையே. ஆபத்து காலத்தில் கதவுகளை உடைக்க சுத்தியல் இதில் அமைக்கப்பட்டுள்ளது. திருட்டு பிரச்சனை தீர்வாக CCTV கேமராவும் உள்ளது முக்கியாம்சம்.

எம்ஜி நிறுவனத்தின் அசத்தலான மூன்று புதிய சொகுசு பேருந்துகள் அறிமுகம் !

MG நிறுவனத்தின் பேருந்துகளின் சிறப்பம்சங்கள் தோற்றங்கள் பாதுகாப்புகள் அனைத்தையும் உற்று நோக்குகையில் பயணம் சாலையிலா வானத்திலா என்ற கேள்வி எழும் போல தோன்றுகிறது! பாதுகாப்பின் உச்சத்தை தொழிநுட்பத்துடன் கோர்த்த MG நிறுவனத்தை பாராட்டியே ஆகவேண்டும். இம்மூன்று பேருந்துகளும் கண்டிப்பாக சொகுசு பேருந்து மத்தியில் தனிப்பட்டு செயல்படும் என்பது உறுதி.

MOST VIEWED PHOTOS

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காருக்கு கடுமையான போட்டியை வழங்கும் வகையில், மஹிந்திரா மராஸ்ஸோ கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அந்த காரின் அட்டகாசமான படங்களை, நீங்கள் கீழே காணலாம்.

Most Read Articles

Tamil
English summary
India's largest bus building company, MG Group has launched three new luxury buses at the Bus World India 2018 in Bangalore. MG Group has introduced the Glider, Gliderz and Dreamz buses. The Glider and the Gliderz are based on BharatBenz chassis and the Dreamz bus is based on Mercedes-Benz chassis.
 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more