காரில் சென்றாலும் ஹெல்மெட் கட்டாயம்.. போலீசார் புதிய ரூல்ஸ்...

மஹராஷ்டிரா மாநிலம் நாக்பூர் நகர போலீசார் செய்த காரியம் ஒன்று காரில் போலீசார் சென்றாலும் ஹெல்மெட் கட்டாயம் போட வேண்டும் என்பதை அறிவுறுத்தும் வகையில் அமைந்துள்ளது. இதனால் சமூகவலைதளங்களில் பலர் காரிலும் ஹெல்மெட் போட வேண்டுமா என கிண்டல் செய்து வருகின்றனர். இது குறித்த விரிவான செய்திகளை கீழே காணுங்கள்.

காரிலும் சென்றாலும் ஹெல்மெட் கட்டாயம்.. போலீசார் புதிய ரூல்ஸ்...

இந்தியா முழவதும் எல்லா மாநிலங்களிலும் பைக்கில் செல்பவர்கள் ஹெல்மெட் அணிவது கட்டாயம். இதை அவ்வப்போது போலீசார் கவனித்து ஹெல்மெட் அணியாவர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.

காரிலும் சென்றாலும் ஹெல்மெட் கட்டாயம்.. போலீசார் புதிய ரூல்ஸ்...

இன்று பெருநகரங்களில் எல்லாம் பெரும்பாலும் ஹெல்மெட் விதியை மக்கள் சற்று பின்பற்ற துவங்கி விட்டனர். மற்றும் இரண்டாம் கட்ட நகரங்களல், சிறிய நகரங்களில் இது பெரும் சவாலான விஷயமாகவே உள்ளது.

காரிலும் சென்றாலும் ஹெல்மெட் கட்டாயம்.. போலீசார் புதிய ரூல்ஸ்...

பெரு நகர மக்கள் அதிகம் ஹெல்மெட் பயன்படுத்த துவங்கியதற்கு முக்கிய காரணம் போலீசாரின் கேடுபிடிகள் தான். எந்த வித பாரபட்சமும் இன்றி போலீசார் சட்டத்தை மதிக்காதவர்கள் மீது நடவடிக்கை எடுத்தனர்.

காரிலும் சென்றாலும் ஹெல்மெட் கட்டாயம்.. போலீசார் புதிய ரூல்ஸ்...

இது மட்டுமல்ல மும்பை, ஐதராபாத், டில்லி உள்ளிட்ட சில நகரங்களில் போலீசார் பல முக்கிய சாலைகளில் உயர்தர ஸ்பீடு கேமராக்களை பொருத்தி அதில் சட்ட விதிமுறைகளை மீறி பயணிப்பவர்களை புகைப்படம் எடுத்து ஆதாரத்துடன் அவர்களுக்கு இ செல்லான் முறையில் அபராதம் விதிக்கப்படும்.

காரிலும் சென்றாலும் ஹெல்மெட் கட்டாயம்.. போலீசார் புதிய ரூல்ஸ்...

அதற்கான அபராதத்தை அவர்கள் கட்டாயம் செலுத்திய ஆக வேண்டும். அதனால் ரோட்டில் போலீசார் இல்லை இதனால் விதிமுறைகளை மீறலாம் என நினைத்து மீறுபவர்களும் சிக்கி வருகின்றனர்.

MOST READ: மீண்டும் விற்பனைக்கு வந்தது ஜாவா பைக்... குழந்தை பருவத்தை நினைவு கூர்ந்து ஷாருக்கான் நெகிழ்ச்சி...

காரிலும் சென்றாலும் ஹெல்மெட் கட்டாயம்.. போலீசார் புதிய ரூல்ஸ்...

இந்நிலையில் மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் நகர போலீசார் சமீபத்தில் அம்மாநில பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவரான சுரேஷ் சகேருக்கு நோட்டீஸ் ஓன்றை அனுப்பியுள்ளனர். இது அவர் வாகனத்தில் செல்லும் போது விதிமீறல் செய்தற்கான நோட்டீஸ்.

காரிலும் சென்றாலும் ஹெல்மெட் கட்டாயம்.. போலீசார் புதிய ரூல்ஸ்...

அந்த நோட்டீஸை வாங்கி பிடித்து பார்த்த சுரேஷிற்கு காத்திருந்தது பெரும் அதிர்ச்சி. அவரது வாகன என் MH49AS7777 என்ற வாகனத்தில் ஹெல்மெட் போடால் பயணித்தற்காக அவருக்கு மீது 129 மற்றும் 177 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்ததாகவும், அதற்காக ரூ 500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

காரிலும் சென்றாலும் ஹெல்மெட் கட்டாயம்.. போலீசார் புதிய ரூல்ஸ்...

இதில் அதிர்ச்சி என்னவென்றால் அவரது அந்த வாகன எண் ஒரு காரின் எண் அந்த நோட்டீஸில் போலீசார் அவர் விதிமீறல் செய்யும் போது சிசிடிவியில் பதிவான ஒரு காட்சியையும் போட்டாவாக இணைத்திருந்தனர்.

காரிலும் சென்றாலும் ஹெல்மெட் கட்டாயம்.. போலீசார் புதிய ரூல்ஸ்...

அந்த போட்டாவில் அவரது கார் தான் பதிவாகியிருந்தது. மேலும் அந்த நோட்டீஸில் இந்த அபராதத்தை நீங்கள் 15 நாளில் செலுத்த வேண்டும் என்றும், அதை செலுத்த தவறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டிருந்தது.

காரிலும் சென்றாலும் ஹெல்மெட் கட்டாயம்.. போலீசார் புதிய ரூல்ஸ்...

மேலும் இந்த நோட்டீஸில் இருந்த சிசிடிவியில் பதிவான காட்சியில் இது சுமார் 5 மாதங்களுக்கு முன்பு அதாவது கடந்த ஜூலை மாதம் 1ம் தேதி எடுக்கப்பட்டதாக பதிவாகியிருந்தது. பல்வேறு குழப்பங்களுடன் இந்த நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளது அவருக்கு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

MOST READ: ஒரு கி.மீ. பயணிக்க 50 பைசா தான் செலவு; புதிய ஆட்டோவால் மற்ற ஆட்டோ ஓட்டுநர்கள் அதிர்ச்சி

காரிலும் சென்றாலும் ஹெல்மெட் கட்டாயம்.. போலீசார் புதிய ரூல்ஸ்...

காரில் செல்லும் போது சீட் பெல்ட் போட வேண்டும் என்று தான் அபராதம் விதிக்கப்படும் இது என்ன காரில் செல்லும் போது ஹெல்மெட் போவில்லை என அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. என இதை மீடியாவிற்கு தெரியப்படுத்தினர்.

காரிலும் சென்றாலும் ஹெல்மெட் கட்டாயம்.. போலீசார் புதிய ரூல்ஸ்...

இந்த போட்டோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. பலர் போலீசாரின் இந்த செயலை கிண்டல் செய்து வருகின்றனர். ஒரு கட்சி தலைவருக்கே இந்த நிலை என்றால் பொதுமக்கள் எத்தனை பேர் இது போன்ற நிலையை சந்தித்து இருப்பார்கள் என மக்கள் பேச துவங்கினர்.

காரிலும் சென்றாலும் ஹெல்மெட் கட்டாயம்.. போலீசார் புதிய ரூல்ஸ்...

ஒரு நாளுக்கு ஆயிரக்கணக்கான நபர்களுக்கு இவ்வாறு இ-செல்லான் அனுப்பபடும் நிலையில் இவ்வாறு அவ்வப்போது தவறுகள் நடந்து வருவதாகவும் இந்த தவறு பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவரது வாகனத்திலேயே நடந்ததால் தான் தற்போது வெளியே பரப்பாக பேசப்படுவதாக பலர் கூறி வருகின்றனர்.

இது போன்ற செய்திகளை உங்கள் மொபைலில் உடனுக்குடன் பெற இங்கே கிளிக் செய்யுங்கள்..!

காரிலும் சென்றாலும் ஹெல்மெட் கட்டாயம்.. போலீசார் புதிய ரூல்ஸ்...

பைக்குளில் செல்லும் போது மட்டும் ஹெல்மெட் போட வேண்டும் என சொல்லி வந்த போலீசார் இனி கார்களிலும் ஹெல்மெட் கட்டாயம்என சொல்ல விடுவார்கள் போல என சமூக வலைதளங்களில் பலர் கிண்டல் அடித்து வருகின்றனர்.

Most Read Articles

Tamil
English summary
nagpur police fined bsp leader for not wearing helmet while riding car. Read in Tamil
Story first published: Saturday, November 17, 2018, 12:33 [IST]
 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more