மாருதி சுஸுகி-யை விடாமல் துரத்தும் ஃபோர்டு; புதிய ஸ்விஃப்டிற்கு போட்டியாக வரும் ஃபிகோ ஃபேஸ்லிஃப்ட்!

Written By:

இந்தியாவிற்கான ஹேட்ச்பேக் கார் வடிவங்களுக்கு புத்துயிர் அளிக்கும் வகையில் தயாராகியுள்ளது ஃபோர்டு ஃபிகோ ஃபேஸிஃப்ட் கார்.

ஃபோர்டு ஃபிகோ ஃபேஸ்லிஃப்ட்- மாருதி ஸ்விஃப்ட் காருக்கு போட்டி..!!

இதே கார் இங்கிலாந்தில் கே.ஏ+ என்ற பெயரில் விற்பனையாகி வருகிறது. இந்த ஃபேஸ்லிஃப்ட் மாடலின் உள் மற்றும் வெளிக்கட்டமைப்பு இரண்டும் கூடுதல் தோற்றப்பொலிவை பெற்றுள்ளன.

ஃபோர்டு ஃபிகோ ஃபேஸ்லிஃப்ட்- மாருதி ஸ்விஃப்ட் காருக்கு போட்டி..!!

புதுமையான தோற்றம் மற்றும் கவனமீர்க்கும் வடிவமைப்பால் கவரும் புதிய ஃபிகோ கார், இந்தியாவில் மாருதி ஸ்விஃப்ட் மற்றும் ஹூண்டாய் கிரான்டு ஐ10 கார்களுக்கு போட்டியாக தயாராகியுள்ளது.

ஃபோர்டு ஃபிகோ ஃபேஸ்லிஃப்ட்- மாருதி ஸ்விஃப்ட் காருக்கு போட்டி..!!

இந்த காரில் மாற்றங்கள் என்று பார்க்கும் போது, ஃபோர்டு ஃபிகோ ஃபேஸ்லிஃப்டில் பெரிய முகப்பு விளக்குகள் மற்றும் கிரோம் சூழ்ந்த புத்தன் புதிய முன்பக்க கிரில் உள்ளது.

Recommended Video - Watch Now!
Auto Rickshaw Explodes In Broad Daylight
ஃபோர்டு ஃபிகோ ஃபேஸ்லிஃப்ட்- மாருதி ஸ்விஃப்ட் காருக்கு போட்டி..!!

இதுதவிர காரின் டாஷ்ஃபோர்டில் இடம்பெறுள்ள மாற்றங்கள், கேபின் வசதியை மேலும் மெருக்கேற்றி காட்டுகிறது. சமீபத்தில் ஃபோர்டு வெளியிட்ட ஃப்ரீஸ்டைல் கிராஸோவர் காரிலிருந்த 6.5 இன்ஃபொடெயின்மென்ட் சிஸ்டம் இதில் உள்ளது. இது ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்ட்டிவிட்டி போன்ற அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

ஃபோர்டு ஃபிகோ ஃபேஸ்லிஃப்ட்- மாருதி ஸ்விஃப்ட் காருக்கு போட்டி..!!

இங்கிலாந்தில் விற்பனையாகும் ஃபோர்டு ஃபிகோ கார் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 டீசல் எஞ்சின்களுடன் விற்பனையில் உள்ளன.

ஃபோர்டு ஃபிகோ ஃபேஸ்லிஃப்ட்- மாருதி ஸ்விஃப்ட் காருக்கு போட்டி..!!

குறிப்பாக இங்கிலாந்திற்கான பெட்ரோல் மாடல் ஃபிகோ கார், இரண்டு வித டியூன் அம்சங்களை பெற்றுள்ளன. இவை 69 பிஎச்பி, 84 பிஎச்பி மற்றும் 94 பிஎச்பி பவரை முறையே வழங்கும்.

ஃபோர்டு ஃபிகோ ஃபேஸ்லிஃப்ட்- மாருதி ஸ்விஃப்ட் காருக்கு போட்டி..!!

இந்தியாவிற்காக தயாராகும் ஃபோர்டு ஃபிகோ ஃபேஸ்லிஃப்ட் காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் வழங்கப்படலாம் என்று தெரிகிறது. இதே எஞ்சின் ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் காரில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஃபோர்டு ஃபிகோ ஃபேஸ்லிஃப்ட்- மாருதி ஸ்விஃப்ட் காருக்கு போட்டி..!!

இந்த எஞ்சின், 95 பிஎச்பி பவரை வழங்கும். புதிய ஃபோர்டு ஃபிகோ செயல்திறனை அதற்கான போட்டி மாடல்களுடன் ஒப்பிடும் போது ஹூண்டாய் கிரான்டு ஐ10 82 பிஎச்பி மற்றும் மாருதி ஸ்விஃப்ட் 82 பிஎச்பி பவரை வழங்குகின்றன.

ஃபோர்டு ஃபிகோ ஃபேஸ்லிஃப்ட்- மாருதி ஸ்விஃப்ட் காருக்கு போட்டி..!!

2018ம் ஆண்டில் ஜூன் - ஜூலை மாதங்களில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த கார், இந்தியாவின் ஹேட்ச்பேக் சந்தையை மேலும் போட்டியானதாக உருவாக்கும்.

ஃபோர்டு ஃபிகோ ஃபேஸ்லிஃப்ட்- மாருதி ஸ்விஃப்ட் காருக்கு போட்டி..!!

செயல்திறன் மற்றும் தோற்றத்தில் கவனமீர்க்கும் ஃபோர்டு ஃபிகோ ஃபேஸ்லிஃப்ட் கார் இந்தியாவில் வேரியன்டுகளுக்கு ஏற்றவாறு ரூ.5 லட்சம் முதல் ரூ.7 லட்சம் வரை விலை பெற வாய்ப்புள்ளது.

ஃபோர்டு ஃபிகோ ஃபேஸ்லிஃப்ட்- மாருதி ஸ்விஃப்ட் காருக்கு போட்டி..!!

ஃபோர்டு நிறுவனம் கே.ஏ+ ஆக்டிவ் மற்றும் கிராஸோவர் வெர்ஷன் கே.ஏ+ மாடல்களை வெளியிட்டது. இது பார்க்க சமீபத்தில் அறிமுகமான ஃப்ரீஸ்டைல் கிராஸ் ஹேட்ச் மாடல் போலவே காட்சியளிக்கிறது.

ஃபோர்டு ஃபிகோ ஃபேஸ்லிஃப்ட்- மாருதி ஸ்விஃப்ட் காருக்கு போட்டி..!!

கே.ஏ+ மாடலை இந்தியாவிற்கு கொண்டு வர ஃபோர்டு விரும்புகிறது. இதன்மூலம் புதிய மாருதி ஸ்விஃப்ட் மற்றும் ஹூண்டாய் கிரான்டு ஐ10 கார்களுக்கு மேலும் போட்டியை உருவாக்கும் என்று ஃபோர்டு திட்டமிடுகிறது.

ஃபோர்டு ஃபிகோ ஃபேஸ்லிஃப்ட்- மாருதி ஸ்விஃப்ட் காருக்கு போட்டி..!!

புதிய ஃபோர்டு ஃபிகோ ஃபேஸ்லிஃப்ட் கார் பார்க்க மிகவும் கூர்மையாகவும் மற்றும் ஸ்போர்டி திறனுடனும் தயாராகியுள்ளது. நவீன ஸ்டைல் கட்டமைப்புடன் ஃபேஸ்லிஃப்ட் ஃபிகோ கார் ப்ரீமியம் தர உள்கட்டமைப்புகள் மற்றும் தொழில்நுட்ப அம்சங்களையும் கொண்டுயிருக்க வாய்ப்புள்ளது.

மேலும்... #ஃபோர்டு #ford
English summary
Read in Tamil: Ford Figo Facelift (New Maruti Swift Rival) Revealed Expected Launch Date, Features & Specs. Click for Details...
Story first published: Tuesday, February 6, 2018, 12:57 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark