புதிய தலைமுறை பிரையோ காரை எந்த நேரத்திலும் வெளியிடும் முனைப்பில் ஹோண்டா..!!

புதிய தலைமுறை பிரையோ காரை எந்த நேரத்திலும் வெளியிடும் முனைப்பில் ஹோண்டா..!!

By Azhagar

இந்திய சந்தையில் 2011ம் ஆண்டில் ஹோண்டா பிரையோ சிறிய ரக காரை முதன்முதலாக வெளியிட்டது. ஆனால் இது பெரியளவில் இந்திய வாடிக்கையாளர்களிடம் வரவேற்பு பெறவில்லை.

விரைவில் வெளிவரும் புதிய தலைமுறை ஹோண்டா பிரையோ

இருந்தாலும் பிரையே ஹேட்ச்பேக் பிளாட்ஃப்பார்மை தழுவி உருவாக்கப்பட்ட அமேஸ் காம்பேக்ட் செடான் கார் விற்பனையில் சக்கைப்போடு போட்டது.

விரைவில் வெளிவரும் புதிய தலைமுறை ஹோண்டா பிரையோ

தொடர்ந்து நடைபெற்று முடிந்த ஆட்டோ எக்ஸ்போ 2018 கண்காட்சியில் 2வது தலைமுறைக்கான அமேஸ் காரை ஹோண்டா நிறுவனம் காட்சிப்படுத்தியுள்ளது.

விரைவில் வெளிவரும் புதிய தலைமுறை ஹோண்டா பிரையோ

எக்கானிமிக் டைம்ஸ் தெரிவித்துள்ள செய்தியில் ஹோண்டா பிரையே காரின் புதிய தலைமுறை மாடலை விரைவில் வெளியிட ஆயத்தமாகி வருவதாக தெரிவித்துள்ளது.

விரைவில் வெளிவரும் புதிய தலைமுறை ஹோண்டா பிரையோ

ஹோண்டா நிறுவனம் தற்போது எஸ்யூவி கார்கள் தயாரிப்பில் கவனம் செலுத்தி வருகிறது. குறிப்பாக டபுள்யூஆர்-வி கிராஸோவர் காருக்கு நல்ல மதிப்பு கிடைத்துள்ளது.

விரைவில் வெளிவரும் புதிய தலைமுறை ஹோண்டா பிரையோ

எஸ்யூவி மாடலை தொடர்ந்து அடுத்ததாக ஹோண்டா செடான் செக்மென்டை குறிவைத்துள்ளது. அதில் முதல் படைப்பாகத்தான் தான் 2018 அமேஸ் கார் தயாரிக்கப்பட்டுள்ளது.

விரைவில் வெளிவரும் புதிய தலைமுறை ஹோண்டா பிரையோ

இதுப்பற்றி பேசிய ஹோண்டா கார்ஸ் இந்தியாவின் தலைமை நிர்வாகி யோசிரோ யுயெனோ, இந்தியாவில் எஸ்யூவி-க்கான வளர்ச்சி பெரியளவில் உள்ளது. அதை தொடர்ந்து ஹோண்டா கவனித்து வருவதாக தெரிவித்தார்.

விரைவில் வெளிவரும் புதிய தலைமுறை ஹோண்டா பிரையோ

2018 அமேஸ் கார் தயாரிக்கப்பட்ட பிளாட்ஃப்பார்மை ஹோண்டா நிறுவனம் 2யுஏ என்று குறிப்பிடுகிறது. இதன் கீழ் எஸ்யூவி கார் தயாரிப்புகளையும் ஹோண்டா தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விரைவில் வெளிவரும் புதிய தலைமுறை ஹோண்டா பிரையோ

எஸ்யூவி, செடான் மாடல்களை தொடர்ந்து ப்ரீமியம் ரக கார் விற்பனையிலும் ஒரு கலக்கு கலக்க ஹோண்டா திட்டமிடுகிறது. அதனடிப்படையில் சி.ஆர்-வி, ஹெச்.ஆர்-வி, சிவிக் மற்றும் அக்கார்டு போன்ற கார்களை விற்பனை செய்து வருகிறது.

விரைவில் வெளிவரும் புதிய தலைமுறை ஹோண்டா பிரையோ

அவற்றை தொடர்ந்து அமேஸ், டபுள்யூ.ஆர்-வி, சிட்டி மற்றும் அடுத்து வெளிவரும் எஸ்யூவி மாடல்களை புதிய அமேஸ் கார் தயாரிக்கப்பட்ட பிளாட்ஃப்ராமின் கீழ் தயாராகும் என்று தெரிகிறது.

விரைவில் வெளிவரும் புதிய தலைமுறை ஹோண்டா பிரையோ

ஹோண்டாவின் பிரையோ மற்றும் பி.ஆர்-வி ஆகிய கார் மாடல்கள் இந்திய விற்பனையில் பெரியளவில் சோபிக்கவில்லை. இந்த இரு மாடல்களும் மாத இறுதியில் 800 முதல் 1000 என்ற எண்ணிக்கையில் தான் விற்பனை ஆகின்றன.

விரைவில் வெளிவரும் புதிய தலைமுறை ஹோண்டா பிரையோ

இதன்காரணமாக இந்த இரு கார்களின் தயாரிப்பு பணிகளையும் ஹோண்டா நிறுத்திட முயற்சித்து வருவதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளிவந்துள்ளன.

விரைவில் வெளிவரும் புதிய தலைமுறை ஹோண்டா பிரையோ

இந்தியாவில் கார் விற்பனையில் ஹோண்டா நாட்டம் காட்டவில்லை என்பது போலவே தெரிகிறது. அதன் காரணமாகவே இந்தியாவில் கார் விற்பனை செய்யும் பெரிய நிறுவனங்களின் பட்டியலில் ஹோண்டா 4 வது இடத்தில் உள்ளது.

விரைவில் வெளிவரும் புதிய தலைமுறை ஹோண்டா பிரையோ

இதற்கு காரணம், தனது மார்கெட் நிலையை ஹோண்டா சரியாக உணராதது தான் என்கின்றனர் ஆட்டோ துறை ஆர்வலர்கள். இருந்தாலும் எஸ்யூவி மற்றும் ப்ரீமியம் தர கார்கள் விற்பனையில் ஹோண்டா கவனம் செலுத்த தொடங்கினால், ஓரளவு விற்பனையை நிலைநிறுத்தலாம்.

Most Read Articles
மேலும்... #ஹோண்டா #honda
English summary
Read in Tamil: New-Generation Honda Brio Not Coming To India Anytime Soon. Click for Details...
Story first published: Saturday, February 17, 2018, 16:05 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X