புதிய ஹோண்டா அமேஸ் காரின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்!!

புதிய ஹோண்டா அமேஸ் கார் E,S,V மற்றும் VX ஆகிய 4 வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு வருகிறது. டாப் வேரியண்ட்டில் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி இடம்பெற்றுள்ளது.

By Saravana Rajan

வரும் 16ந் தேதி புதிய ஹோண்டா அமேஸ் கார் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த நிலையில், புதிய ஹோண்டா அமேஸ் காரின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம் வெளியாகி இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

புதிய ஹோண்டா அமேஸ் காரின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்!!

புதிய ஹோண்டா அமேஸ் கார் E,S,V மற்றும் VX ஆகிய 4 வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு வருகிறது. அதிகபட்ச வசதிகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட மாடலாக VX வேரியண்ட் விற்பனை செய்யப்பட இருக்கிறது. பெட்ரோல், டீசல் மாடல்கள் தலா 4 வேரியண்ட்டுகளில் வர இருக்கிறது.

புதிய ஹோண்டா அமேஸ் காரின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்!!

இரண்டு ஏர்பேக்குகள், இபிடி.,யுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், பிரேக் அசிஸ்ட், ஐசோஃபிக்ஸ் சைல்டு சீட் பொருத்துவதற்கான ஆங்கர்கள் மற்ரும் ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள் அனைத்து வேரியண்ட்டுகளிலும் நிரந்தர பாதுகாப்பு அம்சமாக இடம்பெற இருக்கிறது.

புதிய ஹோண்டா அமேஸ் காரின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்!!

E வேரியண்ட்

புதிய ஹோண்டா அமேஸ் காரின் விலை குறைவான E வேரியண்ட்டில் டியூவல் டோன் இன்டீரியர் தீம் இடம்பெற்றுள்ளது. பியானோ பிளாக் என்ற விசேஷ கருப்பு வண்ணத்திலான சென்டர் கன்சோல் இடம்பெற்றிருக்கிறது. ஏசி வசதி, ஓட்டுனர் பக்க ஜன்னல் கண்ணாடிக்கான ஆட்டோ டவுன் விண்டோ ஆகிய வசதிகள் உள்ளன.

புதிய ஹோண்டா அமேஸ் காரின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்!!

S வேரியண்ட்

இந்த வேரியண்ட்டில் எலக்ட்ரிக் அட்ஜெஸ்ட் வசதி கொண்ட ரியர் வியூ மிரர்கள், எல்இடி டர்ன் இண்டிகேட்டர்கள், சுறா துடுப்பு போன்ற ஆன்டென்னா, பாடி கலர் கைப்பிடிகள் இடம்பெற்றுள்ளன. கீ லெஸ் என்ட்ரி வசதி, டில்ட் ஸ்டீயரிங், ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் சுவிட்ச்சுகள், 4 ஸ்பீக்கர்களுடன் கூடிய 2 டின் ஆடியோ சிஸ்டம், ஓட்டுனர் இருக்கையின் உயரத்தை அட்ஜெஸ்ட் வசதிகள் உள்ளன.

புதிய ஹோண்டா அமேஸ் காரின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்!!

V வேரியண்ட்

வி வேரியண்ட்டில் மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும். கூடுதலாக எல்இடி பொசிஷன் விளக்குகள், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி, பனி விளக்குகள், எஞ்சின் ஸ்டார்ட் - ஸ்டாப் பட்டன், 15 அங்குல அலாய் வீல்கள் மற்றும் பூட்ரூமிற்கான எலக்ட்ரோமேக்னடிக் டிரங்க் ஓபன் சிஸ்டம் மற்றும் வெல்கம் லைட் உள்ளிட்ட வசதிகள் இடம்பெற்றுள்ளன. சிவிடி மாடலில் பேடில் ஷிஃப்ட் வசதியும் உள்ளது.

புதிய ஹோண்டா அமேஸ் காரின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்!!

VX வேரியண்ட்

விலை உயர்ந்த VX வேரியண்ட்டில் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இடம்பெற்றுள்ளது. ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே உள்ளிட்ட சாஃப்ட்வேர்களை சப்போர்ட் செய்யும். வாய்ஸ் கன்ட்ரோல் சிஸ்டம், ஓட்டுனர் பக்கத்திற்கான கண்ணாடி ஜன்னலை ஒன் டச் மூலமாக ஏற்றி, இறக்கும் வசதி, க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம் ஆகியவை இடம்பெற்றுள்ளது.

புதிய ஹோண்டா அமேஸ் காரின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்!!

புதிய ஹோண்டா அமேஸ் காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் இடம்பெற்றுள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 89 பிஎச்பி பவரையும், 110 என்எம் டார்க் திறனையும் வழங்கும். டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 99 பிஎச்பி பவரையும், 200 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

புதிய ஹோண்டா அமேஸ் காரின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்!!

டீசல் எஞ்சினில் கொடுக்கப்படும் சிவிடி கியர்பாக்ஸ் மாடலின் சக்தியை வெளிப்படுத்தும் திறன் குறைவாக இருக்கிறது. இந்த மாடலில் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 79 பிஎச்பி பவரையும், 160 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்ததாக இருக்கிறது.

புதிய ஹோண்டா அமேஸ் காரின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்!!

பழைய மாடலைவிட புதிய மாடலின் டிசைன் முற்றிலும் வேறுபட்டதாகவும், சிறப்பாகவும் அமைந்துள்ளது. வலிமையான பானட் பகுதி முக்கிய மாற்றமாக இருக்கிறது. அனைத்து வேரியண்ட்டுகளிலும் சிறப்பான பாதுகாப்பு வசதிகள் இடம்பெற்றிருப்பது முக்கிய விஷயமாக கூறலாம். ரூ.5.5 லட்சம் முதல் ரூ.9 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.

Source: Team BHP

Most Read Articles
English summary
Honda is all set to launch the new Amaze in India on May 16, 2018. Ahead of that TeamBHP has got hold of the variant details of the new Honda Amaze 2018. The new Amaze features an all-new design language and gets new features as compared to the outgoing model.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X