புதிய ஹோண்டா சிஆர்வி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய ஹோண்டா சிஆர்வி கார் இன்று இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. முதல்முறையாக டீசல் எஞ்சின் ஆப்ஷனிலும் வந்துள்ளது.

நீண்ட தாமதத்திற்கு பின்னர், புதிய ஹோண்டா சிஆர்வி எஸ்யூவி இன்று இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. பிரிமியம் எஸ்யூவி செக்மென்ட்டில் களம் புகுந்திருக்கும் இந்த புதிய காரின் சிறப்பம்சங்கள், எஞ்சின் மற்றும் விலை விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

புதிய ஹோண்டா சிஆர்வி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

முதல்முறையாக ஹோண்டா சிஆர்வி கார் டீசல் எஞ்சின் ஆப்ஷனிலும் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. புதிய ஹோண்டா சிஆர்வி எஸ்யூவியின் பெட்ரோல் மாடல் இரண்டு வேரியண்ட்டுகளிலும், டீசல் மாடல் ஒரே ஒரு வேரியண்ட்டிலும் விற்பனைக்கு கிடைக்கும். 7 இருக்கை வசதி கொண்ட மாடல் டீசலில் மட்டுமே கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்க விஷயம்.

புதிய ஹோண்டா சிஆர்வி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய ஹோண்டா சிஆர்வி எஸ்யூவியின் முகப்பில் முத்தாய்ப்பான விஷயமாக ஹோண்டா நிறுவனத்தின் வலிமையான க்ரோம் சட்டத்துடன் கூடிய க்ரில் அமைப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது. எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், எல்இடி பனனி விளக்குகள், சில்வர் வண்ணத்திலான ஸ்கிட் பிளேட் மற்றும் வலிமையான பம்பர் அமைப்புடன் முகப்பு வசீகரிக்கிறது.

புதிய ஹோண்டா சிஆர்வி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

பக்கவாட்டில் பழைய மாடலின் டிசைன் தாத்பரியங்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இதன் டி பில்லர் மற்றும் வலிமையான வீல் ஆர்ச்சுகளுடன் இதன் அலாய் சக்கரங்கள் மிகவும் கவர்ச்சிகரமாக இருக்கிறது. ஜன்னல்களை சுற்றிலும் ஒருங்கிணைக்கும் வகையில், க்ரோம் பீடிங் அழகு சேர்க்கிறது. காரை சுற்றிலும் பிளாஸ்டிக் கிளாடிங் சட்டங்கள் எஸ்யூவிக்கு உரிய அம்சமாக காட்சி தருகிறது.

புதிய ஹோண்டா சிஆர்வி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

பின்புறத்தில் டெயில் க்ளஸ்ட்டர் முற்றிலும் புதிதாகவும் அழகாகவும் காட்சி தருகிறது. பின்புறத்தில் சுறா துடுப்பு ஆன்டென்னா, பின்புற கதவில் கொடுக்கப்பட்டு இருக்கும் க்ரோம் பட்டை, ஸ்கிட் பிளேட் போன்றவையும் மிக முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.

புதிய ஹோண்டா சிஆர்வி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

உட்புறம் மிக மிக பிரிமியமாக காட்சி தருகிறது. ஹோண்டா கார்களுக்கு உரிய தரம் ஒவ்வொரு பகுதிகளிலும் இழைந்தோடுகிறது. இந்த காரில் 7 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. ஆப்பிள் கார் பிளே, ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை இது சப்போர்ட் செய்யும். டிஎஃப்டி திரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், யுஎஸ்பி போர்ட், 8 ஸ்பீக்கர்கள் கொண்ட ஆடியோ சிஸ்டம் போன்றவை இதன் முக்கிய சிறப்பம்சங்கள்.

புதிய ஹோண்டா சிஆர்வி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய ஹோண்டா சிஆர்வி எஸ்யூவியில் அதிக தரம் மிக்க லெதர் இருக்கைகள், டியூவல் ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், க்ரூஸ் கன்ட்ரோல், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடலில் பேடில் ஷிஃப்ட் வசதி, இரண்டாவது மூஇன்றாவது வரிசைக்கான ஏசி வென்ட்டுகள், உயர்தர மர அலங்கார வேலைப்பாடுகளுடன் மிக பிரிமியமாக இருக்கிறது.

புதிய ஹோண்டா சிஆர்வி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த காரில் 6 ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், பிரேக் அசிஸ்ட், ஐசோஃபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்டுகள், வெஹிக்கிள் ஸ்டெபிளிட்டி அசிஸ்ட், சிறப்பான கையாளுமையை பெறுவதற்கான அஜில் ஹேண்ட்லிங் அசிஸ்ட், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், ரியர் பார்க்கிங் சென்சார்கள் மற்றும் கேமரா, தடத்தை காட்டும் கேமரா ஆகிய ஏராளமான பாதுகாப்பு அம்சஙகள் உள்ளன.

புதிய ஹோண்டா சிஆர்வி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய ஹோண்டா சிஆர்வி எஸ்யூவியின் பெட்ரோல் மாடலில் 2.0 லிட்டர் ஐ-விடெக் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 151 பிஎச்பி பவரையும், 189 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது. சிவிடி கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டு இருக்கிறது.

புதிய ஹோண்டா சிஆர்வி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

முதல்முறையாக சிஆர்வி எஸ்யூவி இந்தியாவில் டீசல் மாடலிலும் வந்துள்ளது. டீசல் மாடலில் இருக்கும் 1.6 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 118 பிஎச்பி பவரையும் 300 என்எம் டார்க் திறனையும் வழஹ்கும். 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. பெட்ரோல் மாடல் 2 வீல் மற்றும் ஆல் வீல் டிரைவ் சிஸ்டத்திலும், டீசல் மாடல் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் ஆப்ஷன்களுடன் வந்துள்ளது.

புதிய ஹோண்டா சிஆர்வி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 14.4 கிமீ மைலேஜையும், டீசல் மாடல் லிட்டருக்கு 19.5 கிமீ மைலேஜையும் வழங்கும் என ஹோண்டா தெரிவித்துள்ளது.

புதிய ஹோண்டா சிஆர்வி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய ஹோண்டா சிஆர்வி எஸ்யூவி ஒயிட் ஆர்ச்சிட் பியர்ல், ரேடியண்ட் ரெட், கோல்டன் பிரவுன் மெட்டாலிக், மாடர்ன் ஸ்டீல் மெட்டாலிக் மற்றும் லூனார் சில்வர் மெட்டாலிக் ஆகிய 5 வண்ணங்களில் தேர்வுக்கு கிடைக்கும்.

புதிய ஹோண்டா சிஆர்வி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய ஹோண்டா சிஆர்வி எஸ்யூவியின் பெட்ரோல் 2 வீல் டிரைவ் மாடல் ரூ.28.15 லட்சத்திலும், பெட்ரோல் ஆல் வீல் டிரைவ் மாடல் ரூ.30.65 லட்சத்திலும், டீசல் மாடல் ரூ.32.75 லட்சத்திலும் விற்பனைக்கு கிடைக்கும். டொயோட்டா ஃபார்ச்சூனர், ஃபோர்டு எண்டெவர் ஆகிய முன்னணி மாடல்களுடன் நேரடியாக போட்டி போடும்.

Most Read Articles
English summary
2018 Honda CR-V launched in India: Honda has launched the new 2018 CR-V SUV in the country. The 2018 Honda CR-V is launched in India with a starting price of Rs 28.15 lakh ex-showroom (India). The 2018 Honda CR-V features updated exterior design, a new diesel engine and seven-seater configuration.
Story first published: Tuesday, October 9, 2018, 16:21 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X