புதுப்பொலிவுடன் ஹூண்டாய் எலைட் ஐ20 கார் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்: முழு விபரம்!

Written By:

வடிவமைப்பிலும், வசதிகளிலும் மேம்படுத்தப்பட்ட புதிய ஹூண்டாய் எலைட் ஐ20 கார் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் சற்றுமுன் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. படஙகள், விலை, சிறப்பம்சங்களை இந்த செய்தியில் காணலாம்.

புதிய ஹூண்டாய் எலைட் ஐ20 கார் அறிமுகம்: விபரம்!

புதிய ஹூண்டாய் எலைட் ஐ20 காரின் முகப்பில் பெரிய மாற்றங்கள் இல்லை. புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள் மற்றும் எல்இடி பகல்நேர விளக்குகள் கொண்ட புதிய ஹெட்லைட் யூனிட் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.

இந்த காரில் 16 அங்குலம் கொண்ட புதிய அலாய் வீல்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. பின்புறத்தில் டெயில் லைட்டுகள் டிசைனில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டு இருப்பதுடன், பம்பரில் கருப்பு வண்ண பிளாஸ்டிங் சட்டம் மூலமாக புதுப்பொலிவு பெற்றுள்ளது.

புதிய ஹூண்டாய் எலைட் ஐ20 கார் அறிமுகம்: விபரம்!

புதிய ஹூண்டாடய் எலைட் ஐ20 காரில் பீஜ் மற்றும் கருப்பு வண்ணத்திலான பாகங்களுடன் இன்டீரியர் கொடுக்கப்பட்டு இருக்கிறது. 7 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் முக்கிய அம்சம்.

Recommended Video - Watch Now!
New Maruti Swift Launch: Price; Mileage; Specifications; Features; Changes
புதிய ஹூண்டாய் எலைட் ஐ20 கார் அறிமுகம்: விபரம்!

இந்த இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ சாஃப்ட்வேர்களை சப்போர்ட் செய்யும். 8 ஸ்பீக்கர்கள் கொண்ட மியூசிக் சிஸ்டம் இருக்கிறது.

புதிய ஹூண்டாய் எலைட் ஐ20 கார் அறிமுகம்: விபரம்!

புதிய ஹூண்டாய் எலைட் ஐ20 காரில் பழைய எஞ்சின் ஆப்ஷன்கள்தான் தொடர்கிறது. இந்த காரின் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 83 பிஎச்பி பவரையும், 115 என்எம் டார்க் திறனையும் வழங்கும். பெட்ரோல் மாடலில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் வந்துள்ளது. சில மாதங்களில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடலும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

புதிய ஹூண்டாய் எலைட் ஐ20 கார் அறிமுகம்: விபரம்!

டீசல் மாடலில் இருக்கும் 1.4 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 89 பிஎச்பி பவரையும், 219 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த மாடலில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது. பழைய மாடலில் கொடுக்கப்பட்டு வந்த 1.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் கூடிய 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் மாடல் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதால், இனி கிடைக்காது.

புதிய ஹூண்டாய் எலைட் ஐ20 கார் அறிமுகம்: விபரம்!

புதிய ஹூண்டாய் எலைட் ஐ20 காரில் 2 ஏர்பேக்குகளும், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமும் நிரந்தர பாதுகாப்பு அம்சங்களாக இருக்கின்றன. இந்த காருக்கு 3 ஆண்டுகள் அல்லது ஒரு லட்சம் கிலோமீட்டருக்கான வாரண்டி கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதேபோன்று, மூன்று ஆண்டுகளுக்கான சாலை அவசர உதவி சேவை திட்டமும் வழங்கப்படுகிறது.

புதிய ஹூண்டாய் எலைட் ஐ20 கார் அறிமுகம்: விபரம்!

புதிய ஹூண்டாய் எலைட் ஐ20 கார் 6 வண்ணங்களில் விற்பனைக்கு வந்துள்ளது. மேலும், மூன்று விதமான இரட்டை வண்ணக் கலவையிலும் புதிய ஹூண்டாய் எலைட் ஐ20 கார் விற்பனைக்கு கிடைக்கும்.

புதிய ஹூண்டாய் எலைட் ஐ20 கார் அறிமுகம்: விபரம்!

புதிய ஹூண்டாய் எலைட் ஐ20 காரின் பெட்ரோல் மாடல் ரூ.5.34 லட்சம் முதல் ரூ.7.90 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையிலும், டீசல் மாடல் ரூ.6.73 லட்சம் முதல் ரூ.9.15 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையிலும் கிடைக்கும்.

English summary
Auto Expo 2018: Hyundai Elite i20 launched. Prices for the newly launched Hyundai Elite in India start at Rs 5.34 lakh and go up till Rs 7.90 lakh for the petrol variants. Prices for the Hyundai Elite i20 2018 diesel start at Rs 6.73 lakh and rise till Rs. 9.15 lakh for the top-of-the-line i20 (all Prices mentioned are ex-showroom Delhi)

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark