புதிய ஹூண்டாய் ஐ20 ஃபேஸ்லிஃப்ட் காரின் வேரியன்டுகள்- சிறப்பம்சங்களுடன் கூடிய முழுத் தகவல்கள்..!!

Written By:

ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய ஐ20 ஃபேஸ்லிஃப்ட் கார் ஆட்டோ எக்ஸ்போவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

ரூ. 5.34 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) விலையில் விற்பனைக்கு வந்துள்ள இந்த காருக்கு புதிய தோற்றப்பொலிவுகள் தரப்பட்டுள்ளன.

2018 ஹூண்டாய் ஐ20 காரின் வேரியன்டுகள்- முழுத் தகவல்கள்..!!

ஹூண்டாய் 2018 ஐ20 ஃபேஸ்லிஃப்ட் காரின் செயல்திறனில் எந்த மாறுபடும் இல்லை. ஆனால் இதன் 1.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மாடலை ஹூண்டாய் கைவிட்டுள்ளது.

இந்த ப்ரீமியம் ஹேட்ச்பேக் காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் உள்ளது. இதே செயல்திறன் 2018 ஐ20 காரின் அனைத்து வேரியன்டுகளிலும் வழங்கப்பட்டுள்ளது.

2018 ஹூண்டாய் ஐ20 காரின் வேரியன்டுகள்- முழுத் தகவல்கள்..!!

புதிய ஐ20 காரின் தி எரா, மேக்னா எக்ஸ்யூட்டிவ், ஸ்போர்ட்ஸ், அஸ்டா மற்றும் டாப்-வேரியன்ட் அஸ்டா (ஒ) என 5 வேரியன்டுகளில் தயாரிக்கப்பட்டுள்ளது.

2018 ஹூண்டாய் ஐ20 காரின் வேரியன்டுகள்- முழுத் தகவல்கள்..!!

இந்த வேரியன்டுகளில் அனைத்தும் பெட்ரோல் எஞ்சின் தேர்வு உள்ளது. அவற்றில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. புதிய ஐ20 காரின் டீசல் எஞ்சின் பெற்ற வேரியன்டுகளில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

2018 ஹூண்டாய் ஐ20 காரின் வேரியன்டுகள்- முழுத் தகவல்கள்..!!

ஆச்சர்யமாக இந்த புதிய ஃபேஸ்லிஃப்ட் மாடலில் எந்த வேரியன்டிலும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இருந்தாலும் விரைவிலேயே புதிய ஐ20 காரில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேவை வழங்கப்படலாம் என ஹூண்டாய் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Recommended Video - Watch Now!
Under-Aged Rider Begs The Policewomen To Spare Him - DriveSpark
2018 ஹூண்டாய் ஐ20 காரின் வேரியன்டுகள்- முழுத் தகவல்கள்..!!

சராசரியான அம்சங்களுடன், இந்த காரில் முன்பக்க டூயல் ஏர்பேகுகள், ஏபிஸ் உள்ளது தவிர இதன் டாப்-வேரியன்டில் ஆறு ஏர்பேகுகள், ISOFIX இருக்கை மற்றும் ஸ்மார்ட் பெடல் உள்ளன.

2018 ஹூண்டாய் ஐ20 காரின் வேரியன்டுகள்- முழுத் தகவல்கள்..!!

புதிய ஐ20 வேரியன்டில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் உள்ளது. இது அதிகப்பட்சமாக 83 பிஎச்பி பவர் மற்றும் 115 டார்க் திறனை வெளிப்படுத்தும்.

இதில் உள்ள டீசல் மாடலில் 1.5 லிட்டர் எஞ்சின் வழங்கப்பட்டுள்ளது. இது அதிகப்பட்சமாக 89 பிஎச்பி பவர் மற்றும் 219 என்.எம் டார்க் திறனை வழங்கும்.

புதிய ஹூண்டாய் ஐ20 ஃபேஸ்லிஃப்ட் எரா வேரியன்ட் கார் (பெட்ரோல்/டீசல்) விலை ரூ. 5.34 லட்சம் - ரூ. 6.73 லட்சம்

புதிய ஹூண்டாய் ஐ20 ஃபேஸ்லிஃப்ட் எரா வேரியன்ட் கார் (பெட்ரோல்/டீசல்) விலை ரூ. 5.34 லட்சம் - ரூ. 6.73 லட்சம்

 • 5 ஸ்பீடு/6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ்
 • டூயல் முன்பக்க்க ஏர்பேகுகள் மற்றும் ஏபிஎஸ்
 • வேகத்தை உணர்ந்து செயல்படும் கார் கதவு சென்சார்கள்
 • எஞ்சின் இம்மொபைலைஸர்
 • கியர்-ஷிஃப்ட் இன்டிகேட்டர்
 • மேனுவல் கியர்பாக்ஸ் கிளைமேட் கன்ட்ரோல்
 • பாடி-கலர்டு பம்பர்கள்
 • ஸ்டீல் சக்கரங்கள்
 • முன்பக்க பவர் விண்டோஸ்
2018 ஹூண்டாய் ஐ20 காரின் வேரியன்டுகள்- முழுத் தகவல்கள்..!!

ஹூண்டாய் ஐ20 காரின் பேஸ் வேரியன்ட் தான் எரா. இதன் பெட்ரோல் மாடல் ரூ. 5.34 லட்சம் மற்றும் டீசல் மாடல் ரூ. 6.73 லட்சம் விலை பெறுகின்றன.

முன்னர் இருந்த வெர்ஷனை விட இந்த புதிய ஹூண்டாய் ஐ20 காரில் ஏர்பேகுகள், ஏபிஸ், ISOFIX இருக்கை உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

புதிய ஹூண்டாய் ஐ20 ஃபேஸ்லிஃப்ட் எக்ஸ்கியூட்டிவ் வேரியன்ட் கார் (பெட்ரோல்/டீசல்) விலை ரூ. 6 லட்சம் - ரூ. 7.31 லட்சம்

புதிய ஹூண்டாய் ஐ20 ஃபேஸ்லிஃப்ட் எக்ஸ்கியூட்டிவ் வேரியன்ட் கார் (பெட்ரோல்/டீசல்) விலை ரூ. 6 லட்சம் - ரூ. 7.31 லட்சம்

 • பாடி-கலர்டு பெற்ற வெளிப்புறத்திலான ஓ.ஆர்.வி.எம் கண்ணாடிகள்
 • ஸ்டீல் சக்கரங்களுக்கான வீல் கவர்கள்
 • முன், பின் ஸ்பீக்கர்களுடன் கூடிய ஆடியோ பிளேயர்
 • முன்பக்க டுவிட்டர்ஸ்
 • அக்ஸ் மற்றும் யுஸ்பி போர்ட்ஸ்
 • பவர் விண்டோஸ்
 • கூல்டு கிளவ்பாக்ஸ்
 • ரியர் ஏசி வேன்டுகள்
 • மின்சாரத்தால் இயங்கும் ஓ.ஆர்.வி.எம்
2018 ஹூண்டாய் ஐ20 காரின் வேரியன்டுகள்- முழுத் தகவல்கள்..!!

எரா வேரியன்ட் மாடலை விட இந்த மேக்னா காரின் பெட்ரோல் மாடல் ரூ. 66,000 விலை கூடுதலாக பெறுகிறது. அதேபோல டீசல் எஞ்சின் மாடல் ரூ. 55,000 விலை கூடுதலாக பெறுகிறது.

இதுதவிர ஆடியோ சிஸ்டம், பவர் விண்டோஸ், ரியர் ஏசி வென்ட்ஸ் மற்றும் மின்சாரத்தால் இயங்கும் ஓ.ஆர்.வி.எம் போன்ற அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

புதிய ஹூண்டாய் ஐ20 ஃபேஸ்லிஃப்ட் ஸ்போர்ட்ஸ் வேரியன்ட் கார் (பெட்ரோல்/டீசல்) விலை ரூ. 6.59 லட்சம் - ரூ. 7.83 லட்சம்

புதிய ஹூண்டாய் ஐ20 ஃபேஸ்லிஃப்ட் ஸ்போர்ட்ஸ் வேரியன்ட் கார் (பெட்ரோல்/டீசல்) விலை ரூ. 6.59 லட்சம் - ரூ. 7.83 லட்சம்

 • முன்பக்க ஃபாக் விளக்குகள்
 • கீலெஸ் எண்ட்ரி
 • ஃபாலோ-மீ-ஹோம் முகப்பு விளக்குகள்
 • ரியர் டீஃபாஜர்
 • பகல் நேர விளக்குகள் (டிஆர்எல்)
 • டர்ன் இன்டிகேட்டர்ஸ் ஓ.ஆர்.வி.எம்
 • மின்சாரத்தால் இயங்கக்கூடிய ஓ.ஆர்.வி.எம்
 • ரியர் பார்சல் ட்ரே
 • உயர அட்ஜெட்ஸ்மென்டை பெற்ற ஓட்டுநர் இருக்கை
 • முன்பக்க மற்றும் ரியர் ட்வீட்டர்ஸ்
 • ப்ளூடூத் டெலிஃபோனி
 • ஸ்டீயரிங்-மவுண்டட் கண்ட்ரோல்கள்

மேக்னா எக்ஸ்கியூட்டிவ் மாடலை விட இந்த புதிய ஹூண்டாய் ஐ20 ஸ்போர்ட்ஸ் காரின் பெட்ரோல் மாடல் ரூ. 60,000 மற்றும் டீசல் மாடல் ரூ. 52,000 கூடுதலாக விலை பெறுகிறது.

புதிய ஹூண்டாய் ஐ20 ஃபேஸ்லிஃப்ட் அஸ்டா வேரியன்ட் கார் (பெட்ரோல்/டீசல்) விலை ரூ. 7.12 லட்சம் - ரூ. 8.36 லட்சம்

புதிய ஹூண்டாய் ஐ20 ஃபேஸ்லிஃப்ட் அஸ்டா வேரியன்ட் கார் (பெட்ரோல்/டீசல்) விலை ரூ. 7.12 லட்சம் - ரூ. 8.36 லட்சம்

 • சென்சாருடன் கூடிய ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா
 • 7-இஞ்ச் தொடுதிரை கொண்ட இன்ஃபொடெயின்மென்ட் சிஸ்டம்
 • 15 இஞ்ச் அலாய் சக்கரங்கள் (டூயல்-டோன் வேரியன்டில் 16 இஞ்ச் சக்கரங்கள் வழங்கப்பட்டுள்ளன)
 • அட்ஜெட்ஸ்டபிள் ரியர் ஹெட்ரெஸ்ட்ஸ்
 • சைலிடிங் ஃபிரன்ட் ஆர்ம் ரெஸ்ட்
 • ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, மிரர்லிங் கனெக்ட்டிவிட்டி
 • அர்காய்ம்ஸ் ஆடியோ சிஸ்டம்
 • யுஎஸ்பி சார்ஜர்
 • வாய்ஸ் கமென்ட்ஸ்
 • ஆட்டோ கிளைமேட் கண்ட்ரோல்
 • டில்ட்/டெலஸ்கோபிக் ஸ்டீயரிங் அட்ஜெஸ்ட்

ஸ்போர்ட்ஸ் மாடலை விட இந்த புதிய ஹூண்டாய் ஐ20 அஸ்டா காரின் பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்கள் ரூ. 53,000 வரை விலை கூடுதலாக பெறுகிறது.

புதிய ஹூண்டாய் ஐ20 ஃபேஸ்லிஃப்ட் அஸ்டா (ஓ) வேரியன்ட் கார் (பெட்ரோல்/டீசல்) விலை ரூ. 7.91 லட்சம் - ரூ. 9.16 லட்சம்

புதிய ஹூண்டாய் ஐ20 ஃபேஸ்லிஃப்ட் அஸ்டா (ஓ) வேரியன்ட் கார் (பெட்ரோல்/டீசல்) விலை ரூ. 7.91 லட்சம் - ரூ. 9.16 லட்சம்

 • 6 ஏர்பேகுகள் (கர்டன் & சைடு)
 • தானியங்கி முகப்பு விளக்குகள்
 • கீலெஸ் எண்ட்ரி / கோ
 • ஐசோபிக்ஸ் குழந்தை இருக்கை
 • ஓட்டுநர் & பயணிகள் இருக்கைகளில் உயரத்திற்கு தகுந்தவாறு மாற்றும் அட்ஜெஸ்ட்மன்ட்
 • ப்ரொஜக்டர் முகப்புவிளக்குடன் கூடிய பகல்நேர எரியும் விளக்குகள்
 • கார்னரிங் விளக்குகள்
 • கிரோம் டோர் ஹேண்டில்
 • 16-இஞ்ச் அலாய் சக்கரங்கள்
 • உயர் ரக லெதர் வேலைப்பாடு கொண்ட இருக்கைகள் & கியர் கினாப்
 • ஸ்டீயரிங் பொசிஷன் ரிமைண்டர்
 • வாஷருடன் கூடிய ரியர் வைபர்

ஹூண்டாய் ஐ20 காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் இதுதான் உயரிய வேரியன்ட். அஸ்டா மாடலை விட இந்த அஸ்டா (ஓ) வேரியன்ட் கார் ரூ. 80,000 கூடுதலாக விலை பெறுகிறது.

2018 ஹூண்டாய் ஐ20 காரின் வேரியன்டுகள்- முழு தகவல்கள்..!!

தற்போது வெளியாகியுள்ள ஹூண்டாய் ஐ20 காரின் இந்த ஃபேஸ்லிஃப்ட் மாடல் பல்வேறு முக்கிய அம்சங்களை பெற்றுள்ளது. இதனுடைய டாப்-ஸ்பெக் வேரியன்ட் அஸ்டா (ஓ) மாடல் கவனிக்கத்தக்க பல மாற்றங்களை பெற்றுள்ளது.

English summary
Read in Tamil: New Hyundai i20 Facelift Variants In Detail Price, Specifications, Mileage & Features. Click for Details...
Story first published: Monday, February 12, 2018, 11:24 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark