மஹிந்திராவின் புதிய எம்பிவி காரின் அறிமுக தேதி விபரம் கசிந்தது!!

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும், மஹிந்திரா நிறுவனத்தின் புதிய எம்பிவி காரின் அறிமுக தேதி குறித்த விபரம் ஆட்டோமொபைல் இணையதளங்களில் கசிந்துள்ளது.

By Saravana Rajan

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும், மஹிந்திரா நிறுவனத்தின் புதிய எம்பிவி காரின் அறிமுக தேதி குறித்த விபரம் ஆட்டோமொபைல் இணையதளங்களில் கசிந்துள்ளது.

மஹிந்திராவின் புதிய எம்பிவி காரின் அறிமுக தேதி விபரம்!

டொயோட்டா இன்னோவா காரின் மார்க்கெட்டை குறிவைத்து புதிய எம்பிவி ரக காரை மஹிந்திரா உருவாக்கி இருக்கிறது. யு321 என்ற குறியீட்டுப் பெயரில் அழைக்கப்படும் இந்த கார் சென்னை உள்பட நாட்டின் பல்வேறு நகரங்களில் வைத்து சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

மஹிந்திராவின் புதிய எம்பிவி காரின் அறிமுக தேதி விபரம்!

அங்க அடையாளங்கள் மறைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டபோது எடுக்கப்பட்ட ஸ்பை படங்களும் அவ்வப்போது வெளியாகி கார் பிரியர்களின் எதிர்பார்ப்பை எகிற செய்து வருகிறது. இந்தநிலையில், இந்த புதிய மஹிந்திரா எம்பிவி கார் வரும் 18ந் தேதி முதல்முறையாக பொது பார்வைக்கு கொண்டு வரப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது

மஹிந்திராவின் புதிய எம்பிவி காரின் அறிமுக தேதி விபரம்!

இன்னோவா காருடன் போட்டி போடும் உருவத்தில் வடிவமைக்கப்பட்டு இருக்கும் இந்த காரில் 7 பேர் சவுகரியமாக அமர்ந்து செல்வதற்கான இருக்கை வசதியை பெற்றிருக்கும். 8 சீட்டர் மாடலும் வரும் என்பது தகவல். குறிப்பாக, மூன்றாவது வரிசை வரை இடவசதி சிறப்பாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

மஹிந்திராவின் புதிய எம்பிவி காரின் அறிமுக தேதி விபரம்!

இந்த காரில் புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், எல்இடி டெயில் லைட்டுகள், தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளிட்ட பல பிரிமியம் வசதிகள் இடம்பெற்றிருக்கும். மூன்று வரிசை இருக்கைகளுக்கும் தனித்தனி ஏசி வென்ட்டுகள் கொடுக்கப்பட்டு இருக்கும்.

மஹிந்திராவின் புதிய எம்பிவி காரின் அறிமுக தேதி விபரம்!

இந்த புதிய எம்பிவி காரில் சக்திவாய்ந்த 1.6 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கும் என்று தகவல்கள் கூறுகின்றன. 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் எதிர்பார்க்கப்படுகிறது. பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷனும் வருவதற்கான வாய்ப்பு தெரிகிறது.

மஹிந்திராவின் புதிய எம்பிவி காரின் அறிமுக தேதி விபரம்!

மோனோகாக் சேஸீயில் கட்டமைக்கப்பட்டு இருக்கும் இந்த கார் மிகச் சிறப்பான கையாளுமையை வழங்கும். ஸைலோ காருக்கு மாற்றாக அல்லது அதனைவிட அதிக விலை கொண்ட பிரிமியம் எம்பிவி காராக நிலைநிறுத்தப்படும்.

மஹிந்திராவின் புதிய எம்பிவி காரின் அறிமுக தேதி விபரம்!

மாருதி எர்டிகா மற்றும் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா என இரண்டு கார்களின் வாடிக்கையாளர் வட்டத்தை குறிவைத்து இந்த காரின் விலை நிர்ணயிக்கப்படும். எனவே, வாடிக்கையாளர் மத்தியில் இந்த புதிய எம்பிவி கார் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அறிமுக தேதி குறித்து இதுவரை எமக்கு எந்த அதிகாரப்பூர்வ தகவலும் மஹிந்திராவிடமிருந்து வரவில்லை.

Via - Autoportal

Most Read Articles
மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Home grown utility vehicle maker, Mahindra is all set to launch its much-awaited new U321 MPV in India on April 18, 2018.
Story first published: Wednesday, April 11, 2018, 18:22 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X