புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியின் அறிமுக தேதி விபரம் வெளியானது!

Written By:

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியின் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கும் தேதி விபரம் வெளியாகி இருக்கிறது.

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியின் அறிமுக தேதி விபரம் வெளியானது!

ஹூண்டாய் க்ரெட்டா, ஜீப் காம்பஸ் உள்ளிட்ட மாடல்களால் ஏற்பட்டுள்ள சந்தைப் போட்டியை மனதில் வைத்து மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவி வடிவமைப்பிலும், வசதிகளிலும் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது.

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியின் அறிமுக தேதி விபரம் வெளியானது!

கடந்த சில வாரங்களாக இந்த புதிய மாடலின் ஸ்பை படங்கள் இணையதளங்களில் வெளியாகி வந்தது. இதனால், புதிய மாடல் விரைவில் அறிமுகமாகும் என்பது உறுதியானது. இந்த சூழலில் வரும் 18ந் தேதி புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியின் அறிமுக தேதி விபரம் வெளியானது!

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியில் புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், புதிய எல்இடி பகல்நேர விளக்குகள், புதிய க்ரோம் க்ரில் அமைப்புடன் மாற்றம் கண்டுள்ளது. இதுதவிர, முன்புற மற்றும் பின்புற பம்பர் டிசைனிலும் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. தற்போது இரட்டை வண்ண டைமண்ட் கட் அலாய் சக்கரங்களுடன் வர இருக்கிறது.

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியின் அறிமுக தேதி விபரம் வெளியானது!

செங்குத்தான அமைப்புடைய டெயில் லைட் க்ளஸ்ட்டர் முக்கோண வடிவில் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. பின்பக்க கதவு மற்றும் நம்பர் பிளேட் அமைப்புகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியின் அறிமுக தேதி விபரம் வெளியானது!

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியில் டேஷ்போர்டு அமைப்பில் மாற்றம் செய்யப்படவில்லை. ஆனால், புதிய சீட் அப்ஹோல்ஸ்ட்ரியுடன் வருகிறது. டாப் வேரியண்ட்டில் புதிய லெதர் அப்ஹோல்ஸ்ட்ரி பயன்படுத்ததப்படுகிறது. ஏற்கனவே இருக்கும் அதே இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்தான் தொடரும் என்பது தகவல்.

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியின் அறிமுக தேதி விபரம் வெளியானது!

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியில் 2.2 லிட்டர் எம்ஹாக் டர்போசார்ஜ்டு டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் 140 எச்பி பவரை அளிக்கும் ஒரு மாடலிலும், 155எச்பி பவரை அளிக்கும் மற்றொரு மாடலிலும் வர இருக்கிறது. 155 எச்பி திறன் கொண்ட டீசல் மாடல் டபிள்யூ11 என்ற டாப் வேரியண்ட்டில் மட்டுமே கிடைக்கும்.

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியின் அறிமுக தேதி விபரம் வெளியானது!

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவி ரூ.13 லட்சம் முதல் ரூ.18 லட்சம் இடையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Source: Autocar India

Photo Credit: TeamBHP

மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Mahindra & Mahindra is all set to launch the new facelifted XUV500 in India. Now, Autocar India reports that the new 2018 XUV500 will be launched in the country on April 18, 2018. The facelifted SUV has been already revealed in the recent spy images.

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark