புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியின் விபரங்கள் வெளியானது!!

Written By:

மேம்படுத்தப்பட்ட புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவி விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த நிலையில், இந்த எஸ்யூவியின் எஞ்சின் உள்ளிட்ட பல முக்கிய விபரங்கள் வெளியாகி உள்ளது.

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியின் விபரங்கள் வெளியானது!!

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவி W5, W7, W9, W11 மற்றும் W11 ஆப்ஷனல் ஆகிய வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு வருகிறது. விலை குறைவான W5 வேரியண்ட்டைவிட பிற அனைத்து வேரியண்ட்டுகளிலும் மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கும்.

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியின் விபரங்கள் வெளியானது!!

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியில் 2.2 லிட்டர் எம்ஹாக் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 155 பிஎச்பி பவரையும், 360 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியின் விபரங்கள் வெளியானது!!

பழைய மாடலில் இருந்ததைவிட 15 பிஎச்பி சக்தியையும், 30 என்எம் டார்க் திறனையும் கூடுதலாக வழங்கும் விதத்தில் ட்யூனிங் செய்யப்பட்டு இருக்கிறது. அதேநேரத்தில், 1.99 லிட்டர் எஞ்சின் ஆப்ஷன் இதில் கொடுக்கப்பட இருக்கிறதா என்பது குறித்து உறுதியாகவில்லை.

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியின் விபரங்கள் வெளியானது!!

மேலும், W11 ஆப்ஷனல் வேரியண்ட்டில் மட்டுமே ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் தொழில்நுட்ப வசதியுடன் கிடைக்கும். பிற வேரியண்ட்டுகளில் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் இல்லை என்பது தகவல்.

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியின் விபரங்கள் வெளியானது!!

W5 பேஸ் மாடலில் கருப்பு மற்றும் சாம்பல் வண்ணத்திலான டியூவல் டோன் இன்டீரியருடன் வருகிறது. ஃபாலோ மீ ஹெட்லைட், பவர் விண்டோஸ், மொபைல் சார்ஜர் பாயிண்ட், ரியர் வாஷர், ரிமோட் மூலம் டெயில் கேட் திறக்கும் வசதி, வைப்பர், டீஃபாகர், 6 நிலைகளில் அட்ஜெஸ்ட்டபிள் வசதி தரும் டிரைவர் சீட், ரீடிங் லேம்ப், இரண்டாவது வரிசை மற்றும் மூன்றாவது வரிசை இருக்கையை மடக்கும் வசதிகள் இடம்பெற்று இருக்கின்றன.

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியின் விபரங்கள் வெளியானது!!

W7 வேரியண்ட்டில் க்ரோம் க்ரில் அமைப்பு, டேன் மற்றும் கருப்பு வண்ண இன்டீரியர், பியானோ பிளாக் என்ற விசேஷ கருப்பு வண்ணம் தீட்டப்பட்ட சென்டர் கன்சோல் ஆகியவை கூடுதலாக இருக்கும். இந்த வேரியண்ட்டில் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், க்ரூஸ் கன்ட்ரோல், மல்டி ஃபங்ஷன் ஸ்டீயரிங் வீல், ரியர் பார்க்கிங் சென்சார், ஸ்மார்ட் கீ மற்றும் ரிமோட், படிகட்டுகளுக்கான லைட்டுகள் இடம்பெற்றிருக்கும்.

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியின் விபரங்கள் வெளியானது!!

W9 வேரியண்ட்டில் கூடுதலாக 17 அங்குல அலாய் வீல்கள், 8 நிலைகளில் மாற்றிக் கொள்ளக்கூடிய ஓட்டுனர் இருக்கை, டெலிஸ்கோப்பிக் ஸ்டீயரிங், தானியங்கி முறையில் திறக்கும் ஓட்டுனர் பக்க ஜன்னல், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார் உள்ளிட்டவை முக்கிய வசதிகளாக இருக்கும்.

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியின் விபரங்கள் வெளியானது!!

W11 என்ற டாப் வேரியண்ட்டில் 18 அங்குல டைமண்ட் கட் அலாய் வீல்கள், இலுமினேடட் ஸ்கஃப் பிளேட்டுகள், லெதர் டேஷ்போர்டு, 8 நிலைகளில் மாற்றும் வசதி கொண்ட ஓட்டுனர் இருக்கை, படுல் விளக்குள், கூடாரம் அமைத்தால் அதற்கான பிரத்யேக விளக்கு வசதி, ஹைட்ராலிக் அசிஸ்ட் வசதியுடன் திறக்கும் பானட் ஆகியவை கூடுதலாக இடம்பெற்றிருக்கும்.

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியின் விபரங்கள் வெளியானது!!

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவி வெள்ளை, சில்வர், பழுப்பு, இளஞ்சிவப்பு, கருப்பு, சிவப்பு மற்றும் காப்பர் ஷேட் என்ற வெளிர் வண்ணங்களில் கிடைக்கும். இந்த மாத விற்பனைக்கு வர இருக்கும் புதிய கார்கள் பட்டியலில் மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியும் உள்ளது.

Source: Team BHP

மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Mahindra & Mahindra is all set to launch the new facelifted 2018 XUV500 in India in the coming days. Ahead of that TeamBHP has got hold of the specifications, variants, features and more details of the new 2018 XUV500.
Story first published: Friday, April 6, 2018, 11:18 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark