TRENDING ON ONEINDIA
-
கூட்டணி உறுதியானதால் குஷி.. அமித்ஷா இன்று மாலை சென்னை வருகை
-
டூவீலர் உற்பத்தியாளர், டீலர், ஆர்டிஓக்கள் இணைந்து 13 ஆண்டுகளாக வாடிக்கையாளர்களிடம் மெகா மோசடி... என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்...
-
நடிகையாகும் பிரபல ஹீரோவின் மகள்: பொண்ணு ரொம்பத் தெளிவு
-
இந்த ரெண்டு ராசிக்காரங்களுக்கும் கெட்ட நேரம் ஆரம்பிச்சிடுச்சு... கொஞ்சம் கவனமா இருங்க
-
பாகிஸ்தான் இராணுவத்தை தலை பிச்சுக்க விட்ட இந்திய ஹேக்கர்கள்.!
-
தினேஷ் கார்த்திக் எதிர்காலம் முடிஞ்சு போச்சா? ரிஷப் பண்ட்டுக்கு மட்டும் தான் வாய்ப்பா?
-
இந்த ஊர்ல ஒருவரின் சராசரி வருமானமே 3.2 கோடி ரூபாய்.. எந்த ஊர் தெரியுமா..?
-
ஆலி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது
மாருதி ஸ்விப்ட் காரை மக்கள் அதிகம் விரும்புவதற்கான 10 முக்கிய காரணங்கள்
இந்தியாவில் மாருதி சுசூகி நிறுவனத்தின் கார்கள் தான் அதிக அளவில் விற்பனையாகி வருகிறது. அந்நிறுவனத்தின் கார்கள் மீது சில புகார்கள் வந்தாலும் மக்கள் அதை பற்றி எல்லாம் கவலைப்படாமல் புக்கை மலைபோல் குவித்து வருகின்றனர்.
ஏப்ரல் மாத அறிக்கையின்படி மாருதி ஸ்விப்ட் கார்கள் மொத்தம் 22,766 கார்கள் இந்தியாவில் விற்பனையாகியுள்ளது. டிசையர் கார்கள் 25,935 கார்கள் விற்பனையாகியுள்ளது. ஸ்விப்ட் கார் விற்பனை வந்த15 ஆண்டுகளில் இந்த மாதம் தான் அதிக பட்ச விற்பனையை எட்டியுள்ளது. ஸ்விப்ட் கார் மீது மக்களுக்கு உள்ள மோகம் ஆல்டோ கே10 காரின் விற்பனையை சரித்துள்ளது.
இவ்விறு கார்களும் வேறு வேறு ரகம் என்றாலும் ஆல்டோ கே10 வாங்க நினைக்கும் வாடிக்கையாளர்கள் பலர் ஸ்விப்ட் காரை சற்று விலை அதிகமாக செலவு செய்து வாங்க துவங்கி விட்டனர்.ஸ்விப்ட் கார் வைத்திருப்பது சமூக அந்தஸ்தை அதிகரிக்கப்பதாகவும் மக்கள் மத்தியில் கருத்து நிலவுகிறது. இந்நிலையில் ஸ்விப்ட் கார்கள் அதிகமாக விற்பனையாவதற்காக சில முக்கிய காரணங்களும் இருக்கின்றன. அவற்றை கீழே பார்க்கலாம்
ஆட்டோமெட்டிக் ஆப்ஷன்
புதிய மாருதி ஸ்விப்ட் கார் ஏ.எம்.டி. ஆப்ஷனுடன் வருகிறது மாருதி ஸ்விப்ட் கார்களை வாங்கும் பெரும்பாலானோர் தங்களது சொந்த பயன்பாட்டிற்காக அந்த காரை பயன்படுத்துகின்றனர். அதே நேரத்தில் கேப்ஸ் பயன்பாட்டிற்காக வாங்குபவர்கள் டிசையர் காரையே தேர்வு செய்கின்றனர். சொந்த பயன்பாட்டிற்காக வாங்கும் பலர் ஆட்டோ கியர் ஆப்ஷன்களை விரும்புகின்றனர். புதி மாடல் ஸ்விப்ட் காரில் இந்த ஆப்ஷன் இருப்பதால் வாடிக்கையாளர்களை இது தன்வசம் இழுக்கிறது.
விலை
மாருதி நிறுவனம் ஸ்விப்ட் காரின் விலையை 5 லட்ச ரூபாய்க்கு குறைவாக நிர்ணயத்துள்ளதால் நடுத்தர வர்க்க மக்களை அதிகம் ஈர்த்துள்ளது. வாடிக்கையாளர்களை ஈர்ப்பதில் இதுவும் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் பாலினோ காரின் வாடிக்கையாளர்களையும் ஸ்விப்ட் கார் அதிகம் ஈர்ப்பதாகவும் கூறப்படுகிறது.
அதிக விற்பனை
தற்போது ஸ்விப்ட் காரை வாங்குவதற்காக சுமார் 1.3 லட்சம் வாடிக்கையாளர்கள் புக் செய்துவிட்டு காத்து கொண்டிருக்கின்றனர். மாருதி சுசூகி நிறுவனமும் முடிந்த அளவு கார்களை தயாரித்து டீலர்களுக்கு அனுப்பியுள்ளது. புதிய மாடல் ஸ்விப்ட் வருகையால் புக்கிங் செய்யப்படும் விகிதம் மேலும் அதிகரித்துள்ளது. இதனால் மாருதி நிறுவனம் தொடர்ந்து இதே அளவிலான எண்ணிக்கையில் இன்னும் சில மாதங்களுக்கு விற்பனையை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மக்கள் அதிக அளவில் இந்த காரை வாங்குவதால் புதிய வாடிக்கையாளர்களுக்கு இது நம்பிக்கையூட்டுகிறது.
சிறந்த ஸ்பீடு
ஸ்விப்ட் காரின் இன்ஜினை பொருத்தவரை பெட்ரோல் வேரியண்ட் கார் 4 சிலிண்டர், 1197 சிசி கே சீரியன் பெட்ரோல் இன்ஜின் கொண்டது. டீசல் வேரியண்ட் கார் 4 சிலிண்டர் 1248 சிசி டிடிஐஎஸ் டீசல் இன்ஜின் கொண்டது. இது 4000 ஆர்.பி.எம்மில் 74 பி.எச்.பி. பவரையும், 2000 ஆர்.பிஎம் மில் 190 என்.எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியது. இதனால் இதன் வேகம் மற்றும் பிக்கப் இதே ரகத்தில் உள்ள மற்ற கார்களுடன் ஓப்பிடவே முடியாத அளவில் இருக்கும். இது கார் வாங்கும் இளைஞர்களை அதிகம் கவர்ந்துள்ளது.
வளர்ச்சி
மாருதி ஸ்விப்ட் காரில் விற்பனை செய்யப்பட்ட வாடிக்கையாளரின் கருத்தை கேட்டு அவர்களின் விருப்பத்தை அறிந்து அதன் அடுத்த மாடலை டிசைன் செய்கிறது. பெட்ரோல் மற்றம் டீசல் வேரியண்டில் விற்பனையாகி வரும் இந்த கார் பெட்ரோல் வேரியண்ட் இதற்கு முந்தய மாடலை விட சிறந்த லுக்கை பெற்றுள்ளது. மேலும் பழைய மாடலைவிட அதிக இட வசதியும் உள்ளது. சில புதிய வசதிகள் வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கிறது.
சிறந்த மைலேஜ்
புதிய மாருதி ஸ்விபிட் கார் சிறந்த மைலேஜை வழங்குகிறது. பழைய மாடல் கார்கள் தரும் மைலேஜை விட அதிகமான மைலேஜை இந்த கார் வழங்குகிறது. மேலும் இந்த கார்களுக்கு போட்டியாளர்களாக ஹூண்டாய் ஐ20 ஃபோக்ஸ்வாகன் போலா ஆகிய கார்களை விட இந்த கார் மைலேஜ் அதிகமாக தருகிறது. இது வாடிக்கையாளர்களை அதிக அதிகமா ஈர்ப்படைய செய்துள்ளது.
சர்வீஸ்
மாருதி நிறுவனத்தை பொருத்தவரை கார் விற்பனைக்கு பின் செய்யப்படும் சர்வீஸ் வாடிக்கையாளர்களை அதிகம் கவர்ந்துள்ளது. சமீபத்தில் வெளியான ஒரு ஆய்வு முடிவு இதை தெளிவாக காட்டியுள்ளது. கார் விற்பனைக்கு பின் நல்ல சர்வீஸ் கிடைப்பதால் மக்களை இந்த கார் அதிகம் கவர ஒரு முக்கியமான காரணமாக உள்ளது.
லுக்
மாருதி ஸ்விப்ட் காரின் விற்பனைக்கு மிக முக்கிய காரணம் அதன் லுக் தான். காரின் வெளிப்புறத்தோற்றம் காண்பவர்களின் கண்களை வெகுவாக கவர்கிறது. அதனால் வாடிக்கையாளர்கள் பெரும்பாலானோர் ஸ்விப்ட் காரையே தேர்வுசெய்கின்றனர். இந்த ரக கார்களின் இதற்கு போட்டி நிறுவனங்களில் கார்கள் நல்ல லுக்கில் இருந்தாலும் இந்த அளவிற்கு லுக்கை பெறவில்லை என மக்கள் கருதுகின்றனர்.
நம்பகத்தன்மை
இந்தியாவில் கார்கள் பல ஆண்டுகளுக்கு முன் கார்களின் விலை என்பது மிக அதிகமாக இருந்த காலகட்டத்தில் அப்பொழுது மாருதி நிறுவனம் தான் முதன் முதலில் குறைந்த விலையில் நடுத்தர குடும்பத்தினரை கவரும் வகையில் மாருதி 800 காரை அறிமுகப்படுத்தியது. இதனால் பலர் மாருதி நிறுவனத்தை தங்களின் மனதிற்கு நெருக்கமாக வைத்துள்ளனர். இதனால் இந்த நிறவனத்தின் பெயருக்கே நல்ல விற்பனை இருக்கும்.
வேரியண்ட்கள்
கார்கள் வாங்க விரும்புபவர்களில் ஒவ்வொருவரும் ஒவ்வொன்றை விரும்புவர் அவ்வாறாக பெரும்பாலானோரின் விருப்பதை பூர்த்தி செய்யும் வகையில் மாருதி ஸ்விப்ட் காரில் பல வேரியண்ட்களுடன் கிடைக்கிறது. இதனால் பலருக்கு அவர்களுக்கான தேவை பூர்த்தியாகிறது. அதனால் மக்கள் மாருதி ஸ்விப்ட் காரை அதிகம் விரும்புகின்றனர்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்
01.ஆக்டிவா 5ஜி ஸ்கூட்டரில் உள்ள நிறைகளும் குறைகளும்
02.சல்மான் கான் அளித்த பார்ட்டி... கவர்ச்சி நடிகைக்கு நேர்ந்த விபரீதம்...
03.மாருதி எர்டிகா லிமிடேட் எடிசன் எம்பிவி கார் விற்பனைக்கு அறிமுகம்!!
04.இனி 16 வயது நிரம்பியவர்களுக்கும் பைக் ஓட்ட லைசன்ஸ் வழங்க அரசு முடிவு