புதிய மாருதி ஸ்விஃப்ட் காருக்கு கஸ்டமைஸ் தேர்வுகள் குறித்த விரிவான விபரங்கள்!

Written By:

புதிய மாருதி ஸ்விஃப்ட் கார் விற்பனைக்கு வந்தது முதல் முன்பதிவு எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. முன்பதிவு செய்வதற்கு முன்பு மாருதி ஸ்விஃப்ட் காருக்கு வழங்கப்படும் கஸ்டமைஸ் ஆப்ஷன்கள் குறித்த தெரிந்து கொள்வது நன்று. ஏனெனில், மாருதி நிறுவனத்திடமிருந்து நேரடியாக கஸ்டமைஸ் செய்யப்பட்டு வருவதால், முன்பதிவின்போது விபரங்களை குறிப்பிடுவது அவசியம்.

அலங்கார ஸ்டிக்கர்:

அலங்கார ஸ்டிக்கர்:

புதிய மாருதி ஸ்விஃப்ட் காருக்கு கூரை, பானட் உள்ளிட்ட பகுதிகளில் விசேஷ அலங்கார ஸ்டிக்கர் ஒட்டி தரப்படுகிறது. மொத்தம் 6 விதமான தேர்வுகளில் இந்த ஸ்டிக்கர் டிசைன் கிடைக்கிறது. வேவ் ரன்னர், கார்பன் போல்ட், பீட் ரைடர், எனெர்ஜெட்டிக் ஸ்பிரின்ட்டர், எலக்ட்ரிக் டேஷ் மற்றும் விங் க்ளைடர் ஆகிய ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

 ஸ்பாய்லர்:

ஸ்பாய்லர்:

புதிய மாருதி ஸ்விஃப்ட் காருக்கு முன்பக்கம், பக்கவாட்டு மற்றும் அன்டர்பாடி ஸ்பாய்லர்கள் கூடுதல் ஆக்சஸெரீகளாக வழங்கப்படுகின்றன. விருப்பத்தின் பேரில் இதனை தேர்வு செய்து கொள்ளலாம். இந்த பாடி ஸ்பாய்லர்கள் புதிய ஸ்விஃப்ட் காரின் தோற்றத்தை மேலும் மெருகூட்டும்.

க்ரில் அலங்கார ஸ்டிக்கர்:

க்ரில் அலங்கார ஸ்டிக்கர்:

புதிய மாருதி ஸ்விஃப்ட் காருக்கு க்ரில், பனி விளக்குகள் அறை, டெயில் லைட், பின்புற கதவு போன்றவற்றிற்கு விசேஷ வண்ணத்திலான அலங்கார ஸ்டிக்கர் வழங்கப்படுகிறது. இது காரின் வசீகரத்தை மேலும் அதிகரிக்கும். பல வண்ணங்களில் பாடி கிளாடிங் பிளாஸ்டிக் சட்டங்களும் கிடைக்கின்றன.

பம்பர் புரொடெக்டர்:

பம்பர் புரொடெக்டர்:

புதிய மாருதி ஸ்விஃப்ட் காருக்கு பம்பரை பாதுகாக்கும் விசேஷ கவச அமைப்பு, பிளாஸ்டிக் பாடி கிளாடிங் சட்டங்கள் விருப்பத்தின் தேர்வு செய்து வாங்கி பொருத்தலாம். மேலும், பல்வண்ண வீல் கவர்களும் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றன. அலாய் வீல்களுக்கு விசேஷ சில்வர் வண்ண பூச்சும் கூடுதல் தேர்வாக கிடைக்கிறது.

Recommended Video - Watch Now!
Under-Aged Rider Begs The Policewomen To Spare Him - DriveSpark
சீட் கவர்:

சீட் கவர்:

புதிய மாருதி ஸ்விஃப்ட் காருக்கு பிரிமியம் அந்தஸ்தை வழங்கும் விதத்தில், விசேஷ சீட் கவர்களை மாருதி வழங்குகிறது. உங்களது விருப்பத்தின் பேரில் தேர்வு செய்து வாங்கலாம்.

இன்டீரியர்:

இன்டீரியர்:

புதிய மாருதி ஸ்விஃப்ட் காரின் இன்டீரியரின் அழகை கூட்டும் வகையில் சில கூடுதல் அலங்கார வசதிகளை மாருதி வழங்குகிறது. ஏசி வென்ட்டுகளை சுற்றி நீலம் அல்லது கருப்பு வண்ணத்திலான அலங்காரம் வழங்கப்படுகிறது. கியர் லிவர் அமைந்துள்ள பகுதியை சுற்றிலும் விசேஷ வண்ண அலங்காரமும் கூடுதல் கட்டணத்தில் செய்து தரப்படுகிறது.

இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்

இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்

புதிய மாருதி ஸ்விஃப்ட் காருக்கு இசட்எக்ஸ்ஐ ப்ளஸ்/இசட்டிஐ ப்ளஸ் ஆகிய மிகவும் விலை உயர்ந்த வேரியண்ட்டில் மட்டுமே தொடுதிரை வசதியுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொடுக்கப்படுகிறது. பிற வேரியண்ட்டுகளை முன்பதிவு செய்வோர், இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை விருப்பத்தின் பேரில் தேர்வு செய்து கொள்ளலாம். சப் ஊஃபர், ஆம்பிளிஃபயர் மற்றும் ஸ்பீக்கர்களுடன் வருகிறது. இரண்டு மாடல்களில் இந்த இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்படுகிறது.

ஆக்சஸெரீ பேக்கேஜ்:

ஆக்சஸெரீ பேக்கேஜ்:

ஒவ்வொரு ஆக்சஸெரீயாக தேர்வு செய்வதற்கு பதிலாக, குறிப்பிட்ட ஆக்சஸெரீகள் மற்றும் அலங்கார அம்சங்கள் கொண்ட பேக்கேஜை தேர்வு செய்யும் வசதியும் உள்ளது. இரண்டு விதமான ஆக்சஸெரீ பேக்கேஜ் வழங்கப்படுகிறது.

பிளாக் பேக்கேஜ்:

பிளாக் பேக்கேஜ்:

மாருதி ஸ்விஃப்ட் காரின் வி, இசட் மற்றும் இசட் ப்ளஸ் ஆகிய வேரியண்ட்டுகளுக்கு பிளாக் பேக்கேஜ் என்ற விசேஷமான அலங்கார வசதி அளிக்கப்படுகிறது. இதில், கருப்பு வண்ண ரியர் ஸ்பாய்லர், பாடி கிளாடிங் சட்டம்,டெயில்லைட் அலங்காரம், நம்பர் பிளேட் அலங்காரம் ஆகியவை வெளிப்புறத்திற்கு வழங்கப்படுகிறது. உட்புறத்தில் சீட் கவர்கள், டிசைனர் மேட் மிதியடிகள் ஆகியவை கிடைக்கும்.

ரெட் பேக்கேஜ்:

ரெட் பேக்கேஜ்:

இசட் மற்றும் இசட் ப்ளஸ் வேரியண்ட்டுகளுக்கு ரெட் பேக்கேஜ் என்ற பெயரில் சிறப்பு ஆக்சஸெரீ பேக்கேஜ் வழங்கப்படுகிறது. மாருதி நிறுவனத்தின் ஜெனியூன் பிராண்டிலான தரமான ஆக்சஸெரீகள் பயன்படுத்துவதுதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ-க்ரியேட்

ஐ-க்ரியேட்

மாருதி நிறுவனத்தின் ஐ-க்ரியேட் என்ற இணையதள கஸ்டமைஸ் வசதி மூலமாக இந்த பேக்கேஜை தேர்வு செய்து நீங்கள் உங்கள் கார் எப்படி இருக்கும் என்பதை பார்த்துக் கொண்டு முடிவு செய்யலாம். இந்த ஆக்சஸெரீ பேக்கேஜ் மூலமாக நீங்கள் வாங்கப்போகும் புதிய மாருதி ஸ்விஃப்ட் கார் தனித்த அடையாளத்தை பெறும்.

English summary
Maruti Suzuki is ffering genuine accessories for the new Maruti Swift to stand apart with uniqueness and individuality. We bring you all the details of the new Maruti Swift 2018 accessories list which you can choose to customise your Swift.
Story first published: Sunday, February 11, 2018, 16:47 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark