புதிய தலைமுறை ஸ்விஃப்ட் காரின் அறிமுக விழா நடைபெறும் தேதி & நாள்: அதிகாரப்பூர்வத் தகவல்..!!

Written By:

2018 ஸ்விஃப்ட் மாடல் காரை இந்தியாவில் வெளியிட மாருதி சுஸுகி பரபரப்பாக தயாராகி வருகிறது. இந்த காருக்கான புக்கிங் ஆரம்பித்துள்ள நிலையில் புதிய ஸ்விஃப்ட் கார் டீலர்களை வந்தடைய தொடங்கியுள்ளது.

2018 ஸ்விஃப்ட் கார் இந்தியாவில் வெளிவரும் அதிகாரப்பூர்வ நாள் இதுதான்..!!

முற்றிலும் புதிய ஸ்விஃப்ட் காரின் வடிவமைப்பு திறன் மற்றும் கட்டமைப்பு அம்சங்கள் பற்றி ஏற்கனவே தனது இணையத்தில் மாருதி சுஸுகி பதிவிட்டுள்ளது.

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை பெற்றிருக்கும் இந்த காரின் வெளியீட்டு நாள் மற்றும் எதிர்பார்க்கப்படும் விலை சார்ந்த தகவல்களை பார்க்கலாம்.

புதிய ஸ்விஃப்ட் காரின் வெளியீட்டு தேதி

புதிய ஸ்விஃப்ட் காரின் வெளியீட்டு தேதி

2018 ஆட்டோ எக்ஸ்போவில் மாருதி சுஸுகி புதிய தலைமுறை ஸ்விஃப்ட் காரை வெளியிடுவது உறுதியாகிவிட்டது.

அடுத்த மாதம் 7ம் தேதி முதல் 14ம் தேதி வரை நடக்கும் ஆட்டோ எக்ஸ்போவில் பிப்ரவரி 9ம் தேதி 2018 ஸ்விஃப்ட் கார் அறிமுகமாகிறது.

Recommended Video - Watch Now!
Ducati 959 Panigale Crashes Into Buffalo - DriveSpark
புதிய ஸ்விஃப்ட் காரின் எதிர்பார்க்கப்படும் விலை

புதிய ஸ்விஃப்ட் காரின் எதிர்பார்க்கப்படும் விலை

தற்போது பயன்பாட்டில் உள்ள ஸ்விஃப்ட் காரின் விலை ரூ. 4.80 லட்சத்தில் தொடங்கி ரூ. 7.47 லட்சம் விலையில் நிறைவடைகிறது.

தற்போது புதிய ஸ்விஃப்ட் காரின் வடிவமைப்பு முதல் தொழில்நுட்பம் வரை அனைத்தும் அம்சங்களும் மேம்படுத்தப்பட்டுள்ளன.

2018 ஸ்விஃப்ட் கார் இந்தியாவில் வெளிவரும் அதிகாரப்பூர்வ நாள் இதுதான்..!!

அதன் காரணமாக புதிய தலைமுறை ஸ்விஃப்ட் காரின் விலை ரூ. 5 லட்சத்தில் தொடங்கி அதனுடைய டாப் ஸ்பெக் வேரியன்ட் ரூ. 8 லட்சம் வரை விலை பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

2018 ஸ்விஃப்ட் கார் இந்தியாவில் வெளிவரும் அதிகாரப்பூர்வ நாள் இதுதான்..!!

புதிய தலைமுறை ஸ்விஃப்ட் காருக்கு இந்தளவில் தான் விலை நிர்ணயம் செய்யப்படும் என்றாலும், அடுத்த மாதம் நடைபெறும் ஆட்டோ எக்ஸ்போவில் இதன் அறிமுக விழாவின் போது ஸ்விஃப்ட் காரின் விலை உறுதிசெய்யப்படும்.

புதிய மாருதி ஸ்விஃப்ட் காரின் டிசைன்

புதிய மாருதி ஸ்விஃப்ட் காரின் டிசைன்

காரின் முன்பகுதியிலிருந்து பின்பகுதி வரை அனைத்தும் புதிய வேலைபாடுகளுடன் உள்ளன. அறுங்கோண வடிவிலான கிரில், முற்றிலும் கருப்பு நிறத்திலான கிடைமட்ட ஸ்லாடுகள் என 2018 ஸிவ்ஃப்ட் காரின் முன்பகுதி கவனமீர்க்கிறது.

2018 ஸ்விஃப்ட் கார் இந்தியாவில் வெளிவரும் அதிகாரப்பூர்வ நாள் இதுதான்..!!

தவிர ப்ரொஜக்டர் விளக்குகளுடன் கூடிய முகப்பு விளக்குகள் எல்.இ.டி பெற்ற பகல்நேர விலக்குகள் (டாப்-ஸ்பெக் வேரியன்டில் மட்டும்) மற்றும் கூர்மையான ஃபாக் விளக்குகளுடன் கூடிய பம்பர்கள் ஆகியவை இந்த காரில் அமைக்கப்பட்டுள்ளன

2018 ஸ்விஃப்ட் கார் இந்தியாவில் வெளிவரும் அதிகாரப்பூர்வ நாள் இதுதான்..!!

காரின் பக்கவாட்டு பகுதியில் ஸ்விஃப்ட் காருக்கான பாரம்பரிய தோற்றம் அப்படியே உள்ளது. அதேபோல காரின் செங்குத்தான கூரை வடிவமைப்பும் அப்படியே உள்ளது.

2018 ஸ்விஃப்ட் கார் இந்தியாவில் வெளிவரும் அதிகாரப்பூர்வ நாள் இதுதான்..!!

ஆனால் ஃபிளோட்டிங் ரூப் டிசைன் கவனமீர்க்கிறது. அதில் கார் கதவின் இயக்கத்துடன் கூடிய வின்டோ ஃபிரேம் ஸிவ்ப்ஃட் காருக்கு ஒரு ஸ்லீக் லுக்கை தருகிறது.

2018 ஸ்விஃப்ட் கார் இந்தியாவில் வெளிவரும் அதிகாரப்பூர்வ நாள் இதுதான்..!!

2018 ஸ்விஃப்ட் காரின் பின்பகுதியில், மாற்றியமைக்கப்பட்ட எல்.இ.டி டெயில் கிளஸ்டர் மற்றும் புதிய பம்பர் உள்ளது. காரின் பேட்ஜிங்கிற்கும் புதிய வேலைபாடுகள் செய்யப்பட்டுள்ளன.

புதிய ஸ்விஃப்ட் காரின் எஞ்சின் தேர்வுகள்

புதிய ஸ்விஃப்ட் காரின் எஞ்சின் தேர்வுகள்

வடிவமைப்பு முறைகளில் தான் மாற்றமே தவிர எஞ்சின் தேர்வு, செயல்திறன் ஆகியவற்றில் பெரிய மாற்றங்கள் எதுவுமே இல்லை. இதுவும் மாருதி சுஸுகிக்கான ஸ்டைல் தான்.

2018 ஸ்விஃப்ட் கார் இந்தியாவில் வெளிவரும் அதிகாரப்பூர்வ நாள் இதுதான்..!!

1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.3 லிட்டர் டீசல் என இருவேறு தேர்வுகள் கொண்ட எஞ்சினில் இது வெளிவருகிறது. எஞ்சின் தேர்வுகளுக்கு ஏற்றவாறு 82 பிஎச்பி மற்றும் 74 பிஎச்பி ஆற்றலை இது வழங்கும்.

2018 ஸ்விஃப்ட் கார் இந்தியாவில் வெளிவரும் அதிகாரப்பூர்வ நாள் இதுதான்..!!

இரண்டு எஞ்சின் தேர்வுகளுமே 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் பெற்றுள்ளது. புதிய ஸ்விஃப்ட் கார் ஏஎம்டி தேவையிலும் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2018 ஸ்விஃப்ட் கார் இந்தியாவில் வெளிவரும் அதிகாரப்பூர்வ நாள் இதுதான்..!!

மாருதி சுஸுகி நிறுவனம் முன்னர் பலேனோ மற்றும் டிசையர் மாடல்களை தயாரித்த ஹார்டெக்ட் பிளாட்பாரமின் கீழ் தான் 2018 ஸ்விஃப்ட் காரை தயாரித்துள்ளது.

2018 ஸ்விஃப்ட் கார் இந்தியாவில் வெளிவரும் அதிகாரப்பூர்வ நாள் இதுதான்..!!

தற்போதைய மாடலை விட மிகவும் குறைந்த எடையில் தயாராகியுள்ள இந்த கார், கையாள்வதில் எளிமையாக இருக்க காரின் பல்வேறு கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.

2018 ஸ்விஃப்ட் கார் இந்தியாவில் வெளிவரும் அதிகாரப்பூர்வ நாள் இதுதான்..!!

புதிய மாருதி ஸ்விஃப்ட் காரின் இசட் ப்ளஸ் என்ற விலை உயர்ந்த வேரியண்ட்டில் 15 அங்குலம் உடைய இரட்டை வண்ண அலாய் வீல்கள், எல்இடி புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், ரியர் கேமரா உள்ளிட்ட பல உயரிய வசதிகள் இடம்பெற்று இருக்கும்.

2018 ஸ்விஃப்ட் கார் இந்தியாவில் வெளிவரும் அதிகாரப்பூர்வ நாள் இதுதான்..!!

புதிய மாடலில் டேஷ்போர்டு அமைப்பு புதிது. தட்டையான அடிப்பாகம் கொண்ட ஸ்டீயரிங் வீல் கொடுக்கப்ப்டடு இருக்கிறது. இதன் 7-இஞ்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. இது ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே மற்றும் மிரர்லிங் கனெக்ட்டிவிட்டியை பெற்றுள்ளது.

2018 ஸ்விஃப்ட் கார் இந்தியாவில் வெளிவரும் அதிகாரப்பூர்வ நாள் இதுதான்..!!

ஆட்டோமேட்டிக் ஹெட்லைட், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி, ரிமோட் கன்ட்ரோல் என்ட்ரி, ஸ்டார்ட்- ஸ்டாப் வசதியுடன் கூடிய ஸ்மார்ட் சாவி ஆகியவை இதிலுள்ள முக்கிய தொழில்நுட்ப வசதிகள்.

2018 ஸ்விஃப்ட் கார் இந்தியாவில் வெளிவரும் அதிகாரப்பூர்வ நாள் இதுதான்..!!

இந்த காரில் இரண்டு ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஐசோஃபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்டுகள் ஆகிியவை அனைத்து வேரியண்ட்டுகளிலும் நிரந்தர பாதுகாப்பு அம்சங்களாக இருக்கும்.

2018 ஸ்விஃப்ட் கார் இந்தியாவில் வெளிவரும் அதிகாரப்பூர்வ நாள் இதுதான்..!!

புதிய மாருதி ஸ்விஃப்ட் காரின் இசட் ப்ளஸ் என்ற விலை உயர்ந்த வேரியண்ட்டில் 15 அங்குலம் உடைய இரட்டை வண்ண அலாய் வீல்கள், எல்இடி புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், ரியர் கேமரா உள்ளிட்ட பல உயரிய வசதிகள் இடம்பெற்று இருக்கும்.

English summary
Read in Tamil: New Maruti Swift 2018 Launch Date And Expected Price. Click for Details...
Story first published: Wednesday, January 31, 2018, 8:30 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark